282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

வ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் 'அஹ்மத்' என்றும் கூறப்படுகிறது.

பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் 'முஹம்மத்' என்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு 'அஹ்மத்' என்ற மற்றொரு பெயரும் இருந்தது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே என் பெயர் 'அஹ்மத்' என்று கூறி இருக்கிறார்கள்.

(நூல் : புகாரீ 3532, 4896)  

பைபிளிலும் இந்த முன்னறிவிப்பு உள்ளதை பைபிள் சான்றுகளுடன் 457வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

Leave a Reply