3. மறைவானவற்றை நம்புதல்

3. மறைவானவற்றை நம்புதல்

வ்வசனத்தில் (2:3) மறைவானவற்றை நம்பவேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும்.


அல்லாஹ்வையும், வானவர்களையும், சொர்க்கத்தையும், அதில் கிடைக்கும் இன்பங்களையும், நரகத்தையும், அதில் அமைக்கப்பட்ட பல்வேறு தண்டனைகளையும், நியாயத் தீர்ப்பு நாளையும், அந்நாளில் ஏற்படும் அமளிகளையும் மற்றும் மறுமையில் நடக்கவுள்ளதாக இஸ்லாம் கூறும் அனைத்து விஷயங்களையும் கண்ணால் காணாமல் இருந்தும் நம்புவது தான் மறைவானவற்றை நம்புதல் எனப்படும்.

Leave a Reply