304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!

304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!

வ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், மேற்கொள்ள முடியும் என்றும் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளைக் கடக்க இயலாது என்று இவ்வசனம் கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறைவேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

இவ்வசனம் மனிதர்களையும், ஜின் என்ற படைப்பையும் அழைத்துப் பேசும் வகையில் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஜின் என்ற படைப்பினம் எவ்வித ஆற்றலும் இல்லாமல் விண்ணுலகம் வரை எளிதாகச் செல்ல முடியும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

இவ்விரண்டும் முரணாக உள்ளதே என்று கருதக் கூடாது.

ஜின்களுக்கு இயல்பாகவே அந்த ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்விதச் சாதனமும் இல்லாமல் விண்னில் பயணிக்க முடியும். மனிதனுக்கு இயல்பாக அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் அதற்கான சாதனங்களை உருவாக்கிக் கொண்டு பயணிக்க முடியும் என்று புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

விண்ணுலகப் பயணம் செல்லலாம் என்பது ஒரு வரையரைக்கு உட்பட்டதாகும். இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஏழு வானங்கள் வரை மனிதன் செல்ல முடியுமா என்றால் செல்ல முடியாது.

ஜின்கள், ஷைத்தான்கள், வானுலகச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக வானத்தை நெருங்கும்போது அவர்களைத் தீப்பந்தம் விரட்டும் என்பதை 307வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

விண்வெளிப்பயணம் சாத்தியம் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறி திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதை நிரூபிக்கிறது.

Leave a Reply