38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

ருவர் ஒரு மதத்தைத் தழுவும்போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார் எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாத்தில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம் கலந்த நீரோ, வண்ணப் பொடிகளோ தேவையில்லை.


மனிதரின் உடலில் தான் இவர்கள் வர்ணம் தீட்டுகிறார்கள். ஆனால் அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்கும் மனிதரின் உள்ளத்தில் வர்ணம் தீட்டுகிறான் என்று இலக்கிய நயத்துடன் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

உடல்களில் தீட்டும் வர்ணம் மறைந்து விடும். அல்லாஹ்வோ உள்ளங்களில் இஸ்லாம் எனும் வர்ணம் தீட்டுகிறான். அது நிலையானது என்று பதில் கூறும் வகையில் இவ்வசனம் (2:138) அருளப்பட்டது.

Leave a Reply