408. மலைகள் உருவானது எப்போது?

408. மலைகள் உருவானது எப்போது?

திருக்குர்ஆன் பல வசனங்களில் பூமியைப் பற்றிக் குறிப்பிடும்போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.

41:9 வசனத்தில் பூமியைப் படைத்ததைப் பற்றி இறைவன் கூறிவிட்டு, 41:10 வசனத்தில், அடுத்த நான்கு நாட்களில் மலைகளை நிறுவியது, உணவுகளை நிர்ணயம் செய்தது போன்ற காரியங்களைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றான்.

பூமி முதலில் உருவாகி, பிறகு மலைகள் உருவாயின என்பதைத் தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியதைத்தான் விஞ்ஞானிகள் இன்று உறுதி செய்கின்றனர்.

அதிக விபரத்திற்கு 248வது குறிப்பைக் காண்க!

Leave a Reply