414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்

414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்

குர்ஆன் என்ற சொல் பெரும்பாலும், திருக்குர்ஆனைக் குறிப்பிடுவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்களைக் குறிப்பிடும்போதும் குர்ஆன் என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும் 'குர்ஆன்' என்ற சொல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனையே குறிக்கிறது.

இவ்வசனத்தில் (15:91) குர்ஆனைக் கூறு போட்டவர்களை நாம் அழித்தது போல் இவர்களையும் அழிப்போம் என்று கூறப்பட்டுள்ளது. முந்தைய சமுதாயத்தினர் பற்றிக் கூறப்படுவதால் இது குர்ஆனைக் குறித்து சொல்லப்பட்டதல்ல. தமது வேதத்தைக் கூறு போட்டது போல் என்ற கருத்தில் தான் இவ்வசனத்தில் குர்ஆன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குர்ஆன் என்ற சொல்லை முந்தைய வேதத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.

தாவூத் நபிக்கு, குர்ஆன் ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 3417)  

தாவூத் நபி காலத்தில் குர்ஆன் அருளப்பட்டிருக்கவில்லை. அவருக்கு ஸபூர் என்ற வேதம் தான் வழங்கப்பட்டிருந்தது. ஸபூர் வேதத்தைத்தான் அவர் ஓதியிருக்க வேண்டும். எனவே இந்த ஹதீஸில் குர்ஆன் என்ற வார்த்தைக்கு ஸபூர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

Leave a Reply