421. விரிவடையும் பிரபஞ்சம்

421. விரிவடையும் பிரபஞ்சம்

வ்வசனத்தில் (51:47) வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

நாம் வாழ்கின்ற பிரபஞ்சம், தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

உதாரணமாக, சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. நாளொன்றுக்கு இரண்டு கோடி கி.மீ. தூரத்தைக் கடந்து ஓடுகின்றது. அதற்கேற்ப இப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது.

அது படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தினமும் 2 கோடி கி.மீ. தொலைவுக்கு ஓடுவதிலிருந்து இப்பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை விளங்கலாம். இனியும் இது போல் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லி, தன்னைத் தானே இறைவேதம் என திருக்குர்ஆன் நிரூபிக்கின்றது.

Leave a Reply