448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

ஸா நபியைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் உயரத்தில் வைப்பான் என்று இவ்வசனம் (3:55) கூறுகிறது.

ஈஸா நபியைப் பின்பற்றும் மக்கள் என்பது கிறித்தவ மதத்தினரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஈஸா நபி உயர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே பவுல் என்பவரால் ஈஸா நபியின் மார்க்கம் மாற்றப்பட்டு விட்டது. ஈஸா நபி போதித்த ஒரு கடவுள் கொள்கை மாற்றப்பட்டு முக்கடவுள் கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டது. ஈஸா நபிக்குச் சம்மந்தம் இல்லாத இந்தக் கொள்கையில் இருப்பவர்கள் ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களாக ஆக மாட்டார்கள்.

ஈஸா நபி எந்தக் கொள்கையை இவ்வுலகில் போதனை செய்தார்களோ அந்தக் கொள்கையைத்தான் முஹம்மது நபியும் சொன்னார்கள். இஸ்லாம் தான், ஈஸா நபி போதித்த கொள்கையாகும். இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் தான் ஈஸா நபியின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றுகின்றனர்.

ஈஸா நபியின் கொள்கை தான் இஸ்லாம் என்பதை விளக்கமாக அறிந்திட 459வது குறிப்பையும் பார்க்கவும்.

Leave a Reply