51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?
இந்த வசனத்தில் (2:189) பிறைகள் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நிலவுதானே இருக்கிறது. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
பிறைகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் 'ஹிலால்' எனும் மூலச்சொல்லின் பன்மையான அஹில்லா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது பூமியின் துணைக் கோளான நிலவைக் குறிக்காது. நிலவில் ஏற்படும் வளர் நிலை, தேய் நிலைகளைக் குறிப்பதாகும். ஒவ்வொரு நாளும் ஒரு நிலை என அதிகமான நிலைகள் நிலவுக்கு உள்ளதால் பிறைகள் எனப் பன்மையாகக் கூறப்படுகிறது.