52. அரபுகளின் மூட நம்பிக்கை

52. அரபுகளின் மூட நம்பிக்கை 

ஜ் மற்றும் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இஹ்ராமுடன் இருக்கும்போது அன்றைய அரபுகள், முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வராமல் கொல்லைப்புறமாக வருவார்கள்.


இது போன்ற மூட நம்பிக்கைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கும் அவர்கள், கஅபாவில் கும்மாளம் போட்டு சீட்டியடித்துக் கொண்டிருப்பார்கள். இறைவனை அஞ்ச மாட்டார்கள். இந்த மூட நம்பிக்கையே இங்கே (2:189) கண்டிக்கப்படுகின்றது. (பார்க்க: புகாரீ 1803, 4512)

Leave a Reply