510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்?

510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்?

வ்விரு வசனங்களும் (24:24, 36:65) ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றலாம்.

24:24 வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும், 36:65 வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும் என்றும் கூறுவதால் மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடு போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

இவ்வுலகில் அனைத்து உறுப்புக்கள் மூலம் செய்யப்பட்ட காரியங்கள் குறித்து அந்த உறுப்புக்கள் பேசாது. நாவு தான் பேசும்.

ஆனால் மறுமையில் ஒவ்வொரு உறுப்பும் தான் செய்தவை பற்றி சாட்சியமளிக்கும். இதனால் வாய்க்கு முத்திரை இடப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் நாவு மூலம் செய்யப்பட்ட காரியங்களை அதில் சம்மந்தப்பட்ட நாவு தான் பேசும். நாவு சாட்சி சொல்லும் என்பது இதைத் தான் குறிப்பிடுகிறது.

மற்ற உறுப்புக்களின் செயல்களைப் பேசமுடியாமல் தான் நாவுக்கு முத்திரை இடப்படும். நாவு பேசியது குறித்து நாவு தான் சாட்சி சொல்லும்.

நாவு பேசும் என்று கூறும் வசனம் அவதூறு கூறுவது குறித்து பேசுகிறது. இது நாவால் நடப்பதாகும். நாவால் நிகழ்த்தப்பட்ட அவதூறை நாவு தான் பேச முடியும். எனவே தான் இந்த இடத்தில் நாவு பேசும் எனக் கூறப்படுகிறது.

அதாவது அனைத்தையும் பேசும் சர்வாதிகாரம் படைத்திருந்த நாவின் அதிகாரம் பறிக்கப்பட்டு தான் செய்தது பற்றி மட்டும் பேசும் அளவுக்குக் குறைக்கப்படும் என்பது தான் இரண்டு வசனங்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் பொதுவான கருத்தாகும். இதில் முரண்படு ஏதுமில்லை.

Leave a Reply