160. மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்
இவ்வசனத்தில் (6:61) பாதுகாவலர்கள் என்று கூறப்படுவது வானவர்களைக் குறிக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய தவணை வருவதற்கு முன் அவனைக் காப்பாற்றும் பணிக்கென வானவர்கள் உள்ளனர்.
ஒரு விபத்தில் பலரும் பலியாகும்போது சிலர் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டதாகக் கூறுகின்றனர். அவர்களுக்கான மரண நேரம் வராததால் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கும் வானவர்கள் அவர்களை மட்டும் காப்பாற்றுகின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அதுதான் இங்கே கூறப்படுகிறது.