225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா?

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா?

வ்வசனங்களில் (11:107,108) "வானங்களும், பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்" என்று சொல்லப்படுகிறது.

அதாவது வானமும், பூமியும் எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை இது தருகிறது.


ஆனால் 55:26,27 வசனங்கள் உலகம் அழிக்கப்படும்போது வானங்கள், பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்று கூறுகின்றன.

வானமும், பூமியும் அழிக்கப்படும் என்று 55:26,27 வசனங்கள் கூறுவதற்கு முரணாக வானமும், பூமியும் நிலையாக இருக்கும் என்று 11:107,108 வசனங்கள் கூறுவதாகக் கருதக்கூடாது.

முரண்பாடு இல்லாமல் எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை பின்வரும் வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பூமி வேறு பூமியாகவும், வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும் என்று 14:48, 21:104, 39:67 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அதாவது வானமும், பூமியும் அழிக்கப்படும் என்று கூறும் வசனங்கள் இப்போது உள்ள வானம், பூமியைப் பற்றிப் பேசுகின்றன.

வானம், பூமி நிலையாக இருக்கும் என்று கூறும் வசனங்கள் புதிதாக மறுபடியும் உருவாக்கப்பட உள்ள வானம், பூமியைப் பற்றிப் பேசுகின்றன. எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை.

மேலும் விபரத்துக்கு 453வது குறிப்பையும் பார்க்கவும்.

Leave a Reply