316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல்

இவ்வசனத்தில் (58:2,3) அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்த மூட நம்பிக்கையை அல்லாஹ் கண்டித்து திருத்துகிறான். அன்றைய அரபுகள் மனைவியரைப் பிடிக்காதபோது "உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்'' எனக் கூறுவர். தாய் என்று சொல்லி விட்ட காரணத்தினால் மனைவியோடு குடும்ப வாழ்க்கை …

316. மனைவியரைத் தாயுடன் ஒப்பிடுதல் Read More

315. மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் மக்காவில் இருந்து ஜெருசலத்துக்கும், அங்கிருந்து விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அல்லாஹ்வின் ஏராளமான அத்தாட்சிகளை அவர்கள் பார்த்து விட்டு திரும்பி வந்ததாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தப் பயணம் மிஃராஜ் என்று சொல்லப்படுகிறது. தவறான …

315. மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம் Read More

314. பால்குடிப் பருவம் எது வரை?

2:233, 31:14 ஆகிய வசனங்களில் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், 46:15 வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும்போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

314. பால்குடிப் பருவம் எது வரை? Read More

313. ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது உலகில் இரு வல்லரசுகள் இருந்தன. ஒன்று, கிறித்தவர்கள் ஆளுகையிலிருந்த ரோமாபுரி சாம்ராஜ்யம். இன்னொரு வல்லரசு, நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீகர்களின் சாம்ராஜ்யம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்விரு வல்லரசுகளும் மோதிக் …

313. ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு Read More

312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:112, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி Read More

311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு

இவ்வசனம் (28:85) மக்காவில் இருந்து விரட்டப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.

311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு Read More

310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு

இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனிவர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் என இவ்வசனம் …

310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு Read More

309. மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

இவ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது. ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

309. மஹராக எட்டு ஆண்டு உழைப்பு Read More

308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

உலகம் அழிக்கப்படும் காலம் நெருங்கும்போது பல அதிசய நிகழ்வுகள் உலகில் ஏற்படும். அவற்றில் ஒரு அதிசயம்தான் இவ்வசனத்தில் (27:82) கூறப்படுகிறது. இதுவரை மனிதர்கள் பார்த்திராத ஒரு உயிரினம் பூமியில் இருந்து வெளிப்படுத்தப்படும். அது மனிதர்களிடம் பேசும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம் Read More

307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை

இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில் சிலவற்றைச் செவியுறுவோராக இருந்தனர். இறைவன் அதைத் …

307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை Read More