சூரியன் மேற்கில் உதிக்கும் போது உலகம் அழிக்கப்படுமா?

சூரியன் மேற்கில் உதிக்கும் போது உலகம் அழிக்கப்படுமா?

கேள்வி

கியாமத் நாளில் சூரியன் மேற்கில் உதித்த சில மணித் துளிகளில் சூர் ஊதப்பட்டு உலகம் அழிக்கப்படும் என்று ஒரு நூலில் படித்தேன். பூமியின் ஒரு பாதி பகலாகவும், மறு பாதி இரவாகவும் இருக்கின்றது. எனவே ஒரு பாதியில் சூரியன் மேற்கில் உதித்தால் இன்னொரு பாதி இரவாக இருக்கும். அப்படியானால் அந்நேரத்தில் இரவுப் பகுதியில் உள்ள மக்கள் அழிக்கப்படுவார்களா?

பதில்: 

சூர் ஊதப்பட்டவுடன் அனைவரும் அழிக்கப்பட்டு விடுவர் என்று குர்ஆன் கூறுகின்றது.

وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ (68)الزمر : 6839

ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.

திருக்குர்ஆன் 39:68

சூரியன் மேற்கிலிருந்து உதித்தவுடன் சூர் ஊதப்படும் என்று நாம் அறிந்தவரை எந்த ஹதீஸிலும் கூறப்படவில்லை.

சூரியன் மேற்கிலிருந்து உதித்த பிறகு மக்கள் உடனே அழிக்கப்பட்டுவிட மாட்டார்கள். இதன் பிறகு இன்னும் பல அடையாளங்கள் ஏற்பட்டு முடிவடையும் வரை மக்கள் உயிருடனே இருப்பார்கள். இவ்வாறு பின்வரும் செய்திகள் கூறுகின்றன.

5234 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ أَبِي حَيَّانَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ أَنْسَهُ بَعْدُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَوَّلَ الْآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى وَأَيُّهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا فَالْأُخْرَى عَلَى إِثْرِهَا قَرِيبًا رواه مسلم

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியதை நான் கேட்டேன்: (மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவதாக வெளிப்படும் அடையாளம், சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும், (பூமியிலிருந்து) ஒரு (அதிசயப்) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும். இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும்.

நூல் : முஸ்லிம் 5637

صحيح مسلم
2901 ( 39 )   حدثنا  أبو خيثمة زهير بن حرب ،  وإسحاق بن إبراهيم ،  وابن أبي عمر المكي  – واللفظ لزهير – قال إسحاق : أخبرنا، وقال الآخران : حدثنا  سفيان بن عيينة ، عن  فرات القزاز ، عن  أبي الطفيل ، عن  حذيفة بن أسيد الغفاري ، قال :  اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر، فقال : " ما تذاكرون ؟ " قالوا : نذكر الساعة. قال : " إنها لن تقوم حتى ترون قبلها عشر آيات ". فذكر الدخان، والدجال، والدابة، وطلوع الشمس من مغربها، ونزول عيسى ابن مريم صلى الله عليه وسلم، ويأجوج ومأجوج، وثلاثة خسوف : خسف بالمشرق، وخسف بالمغرب، وخسف بجزيرة العرب. وآخر ذلك نار تخرج من اليمن، تطرد الناس إلى  محشرهم . 

புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா (அலை) இறங்கி வருவது, யஃஜுஜ் மஃஜுஜ், கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது, இவற்றில் இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூல் : முஸ்லிம்.

சூரியன் உதித்திருக்கும் போது தான் அழிவு ஏற்படும் என்ற கருத்து தவறானது என்பதை இந்தச் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

Leave a Reply