திருக்குர்ஆனின் சிறப்புக்ள்

ஏகத்துவம் ஜூலை 2006

திருக்குர்ஆனின் சிறப்புக்ள்

மைமூனா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப்பற்றியும் இக்குர்ஆனைவேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல்இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப்பற்றி அறிந்து அதன் படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ பெயர்தாங்கிகளாக இருந்து வருகின்றார்கள்.

இன்னும் சிலர் "குர்ஆன் என்றால்அதை ஓர் உறையில் போட்டுப் பத்திரமாக ஓரிடத்தில்வைக்க வேண்டும்; இறந்தவர்களுக்காக ஃபாத்திஹாஓதும் போது மட்டும் அதைப்பயன்படுத்த வேண்டும்” என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றார்கள்.எனவேமுஸ்லிம்களுக்கே குர்ஆனைப்பற்றி விளக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நாம்தள்ளப்பட்டு இருக்கின்றோம்.

குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டு வதற்காக இறைவனால்நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதமாகும். இதை அல்லாஹ் தனதுதிருமறையில் கூறும் போது,

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழிகாட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக்காட்டும்.

(அல்குர்ஆன் 2:185)

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது”என்று நற்செய்தியும் கூறுகிறது.

(அல்குர்ஆன் 17:9)

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்குஎச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

(அல்குர்ஆன் 25:1)

இந்தக் குர்ஆனுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.

ஒன்றுக்குப் பத்து நன்மை

இந்த உலகத்தில் எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால்அதற்காக சில கஷ்டங்களை அனுபவித்த பிறகே அதன் பலனை அனுபவிக்கமுடிகின்றது. ஆனால் அவை எல்லாமே இந்த உலகத்துடன் அழிந்து போய் விடுகின்றன.எந்த அளவிற்கு என்றால், ஒரு சில காரியங்களை நாம் மிகவும் சிரமப்பட்டுச்செய்கின்றோம். ஆனால் அதன் பலன் ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ அல்லதுஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிந்து விடுகின்றது. இந்த அளவிற்குத்தான் அதன் பலன்கள் நிலையற்றவையாக உள்ளன.

ஆனால் நிலையானதும், மிகவும் எளிதாக நன்மையைப் பெற்றுத் தருவதுமான செயல்ஒன்று இருக்கும் என்றால் அது வல்ல ரஹ்மானின் திருமறைக் குர்ஆனை ஓதுவதில்தான் இருக்கும். இந்தக் குர்ஆனை ஓதுவதற்காக நாம் எந்த ஒரு சிரமத்தையும்மேற்கொள்ளத் தேவையில்லை.

அதாவது தொழுகை என்ற வணக்கத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில்தொழ வேண்டும்; உளூச் செய்ய வேண்டும்; ஆண்களாகயிருந்தால் பள்ளிக்குச் சென்றுஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கின்றன. இதன்அடிப்படையில் செய்தால் தான் தொழுகையின் முழுமையான நன்மைகளை அடையமுடியும்.

குர்ஆன் ஓதுவதைப் பொறுத்த வரையில் இது போன்ற எந்த ஒரு நிபந்தனையும்இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அதிகமான நன்மைகளை அள்ளிவிடலாம். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய சில பொன்மொழிகளைப்பார்ப்போம்.

"அல்லாஹ்வின் வேதத்தி-ருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மைஉண்டு! ஒருநன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். "அ-ஃப், லாம், மீம்’ என்பதை ஓர்எழுத்துஎன்று சொல்ல மாட்டேன். மாறாக, அ-ஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்துஎன்றுதான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி)

நூல்: திர்மிதி 2910

மறுமையில் பரிந்துரை

இன்றைய முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குரங்கு கையில் பூமாலை என்பது போன்றுஇந்தக் குர்ஆனுடைய அருமை, பெருமை தெரியாமல் இருக்கின்றார்கள். தங்களுடையநேரங்களை இதுபோன்ற நல்ல வழியில் செலவழிக்காமல் பொய், புறம், கோள், அவதூறுபேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த உலக வாழ்க்கைக்காக என்னென்ன முயற்சிகள் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் சிரமம் பார்க்காமல் செய்கின்றார்கள். உதாரணமாகஒரு வேலை வேண்டும் என்றால் அதற்காகப் பல மனிதர்களை சிபாரிசுக்காகத் தேடிஅலைகின்றார்கள். நிலையற்ற உலகிற்குஇப்படி முயற்சி செய்கின்றார்கள். ஆனால்நிலையான மறுமை வாழ்க்கைக்கு சிபாரிசாக வரக் கூடிய குர்ஆனை மறந்துவிடுகின்றார்கள். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,

"நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச்சார்ந்தவருக்குப்பரிந்துரையாக வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: முஸ்லிம் 804

இரு மடங்கு நன்மை

குர்ஆன் ஓதத் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கும் மார்க்கம் ஒரு நற்செய்திகூறுகின்றது. அதாவது முயற்சி திருவினையாக்கும் என்பது போன்று, ஒரு மனிதன்குர்ஆனை ஓதுவதற்கு முயற்சி செய்கின்றான்; அதன் மூலம் அவனுக்குப் பல சிரமங்கள்ஏற்படுகின்றன; அதையும் பொருட்படுத்தாமல் அவன் திக்கித் திணறி ஓதுகின்றான்என்றால் அதற்காக அவனுக்கு இரு மடங்குகூலி இருக்கின்றது.

"குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக்கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டுதட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூ-கள் இருக்கின்றன” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்-ம் 798

மனிதரில் சிறந்தவர்

இந்த உலகில் நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பாராட்டினால் மகிழ்ச்சியாகஇருக்கின்றது. ஆனால்நம் அனைவருக்கும் உயிரை விடவும் மேலான நபி (ஸல்)அவர்களின் வாயால் சிறந்தவர் என்ற பாராட்டைப்பெற வேண்டும் என்றால் அதுதிருக்குர்ஆன் மூலமே கிடைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத்தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர் தான்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூல்: புகாரி 5027

அல்லாஹ்வின் அருள்

குர்ஆனை ஓதும் போது நன்மைகள் கிடைப்பது போன்று பிறர் ஓதுவதைக் கேட்கும்போதும் நன்மை கிடைக்கும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள்செய்யப் படுவீர்கள்!

(அல்குர்ஆன் 7:204)

ஷைத்தானை விரட்டும் மருந்து

நமக்கெல்லாம் ஜென்ம விரோதியாக இருக்கின்ற ஆணவம் கொண்ட ஷைத்தானைவிரட்டும் ஒரு மருந்தாக இந்தக் குர்ஆன் இருக்கிறது.

"உங்கள் வீடுகளை மண்ணறை களாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகராஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 780

பாதுகாப்பு கிடைப்பது

உலகில் பிறந்த அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது.அதிலும் குறிப்பாக ஷைத்தானை விட்டு பாதுகாப்புப் பெறுவது மிகவும் அவசியமானஒன்றாகும். அவன் எல்லா நேரத்திலும் மனிதனை ஆட்டிப் படைப்பதில் குறிக்கோளாய்இருப்பான்.

உதாரணமாகச் சொல்வதென்றால், ஒரு மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரக் கூடியதூக்கத்திலும் கெட்ட கனவை ஏற்படுத்தி, அதன் மூலம் நம்முடைய நிம்மதியைக்கெடுப்பான். இது போன்ற ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் பாதுகாக்கக் கூடியதாககுர்ஆன் வசனம் அமைந்துள்ளது.

"நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன்ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான்உங்களை நெருங்க மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3275

அழகிய உதாரணத்துக்குரியவர்

இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒருநல்ல உதாரணமாக இருப்பதற்குத் தான்விரும்புவார்கள். கெட்டவனாக இருந்தாலும் கெட்ட உதாரணமாக இருப்பதற்கு விரும்பமாட்டான். இப்படி எல்லோருமே விரும்பக் கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெறவேண்டும் என்றால் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இந்தச் சிறப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும்.அதன்சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர்,பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது.தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச்செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு!தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும்கிடையாது.

அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 5020

இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும்அதன் சிறப்புக்களை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit