களியக்காவிளை விவாதம் சத்தியம் வென்றது

ஏகத்துவம் ஜூலை 2006

களியக்காவிளை விவாதம் சத்தியம் வென்றது

கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.சி.

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்

சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக்காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில்விவாதம் செய்வதாகும்.இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கிஅழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன்தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர்வழி பெற்றோரையும்அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும்ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்துஅசத்திய வாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாகநம்முடைய தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைநாம் கூறலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரச்சாரம்முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன்குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர்கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர்கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில்சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்றுஇப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

(2:258)

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்கஉண்மையாளராகவும், நபியாகவும்இருந்தார்.

"என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன்வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக

(19:41,42)

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள்கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவைபேசக் கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக்கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதிஇழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.

"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத்தீங்கும் தராதவற்றையும் வணங்குகின் றீர்களா?” என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றிநீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? என்றுகூறினார்.

(21:62-67)

மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தம்தந்தையிடமும், சமுதாயமக்களிடமும் விவாதத்தின் மூலம், விவாதப் போங்கில்சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில்விவாதம் செய்துள்ளார்கள். நபிநூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமானவாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது "நூஹே! எங்களுடன் தர்க்கம்செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர்எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.

(11:32)

இதே அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொள்ளும் இணைவைப்புக் காரியங்களை செய்யக் கூடியவர்களுக்கும் களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் அமைந்திருந்தது.

சத்தியவாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அசடுவழிந்ததையும், வியர்த்து விறுவிறுத்ததையும் அந்த விவாத சிடிக்களைப் பார்க்கக் கூடியயாரும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதனால் தான் அவர்கள்தங்களுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட இந்த விவாதத்தை இந்தக் கட்டுரைஎழுதப்படுகின்ற வரை ஒளிபரப்பவில்லை.

மவ்லித் ஓதலாமா?

விவாதத்தின் முதல் தலைப்பு மவ்லித் ஓதலாமா? என்பதாகும்.

தமிழகத்தில் சில முஸ்லிம்களால் புனிதமாகக் கருதி ஓதப்பட்டு வரும் சுப்ஹானமவ்லித், முஹ்யித்தீன் மவ்லித், ஷாஹுல் ஹமீத் மவ்லித், யாகுத்பா, புர்தாபோன்றவற்றில் மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களும், பொய்களும் உள்ளனஎன்பதும், இதை வணக்கமாகக் கருதி ஓதுவது குற்றம் என்பதும், சிலர் வயிற்றுப்பிழைப்புக்காகவே உருவாக்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என்பதும், எனவே மவ்லித்ஓதக்கூடாது என்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

சுப்ஹான மவ்லித், முஹ்யித்தீன் மவ்லித், ஷாஹுல் ஹமீத் மவ்லித்,யாகுத்பா, புர்தாஇவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸிற்கு உடன்பட்டது என்பதும்,இதை ஓதக் கூடாது என்று மறுப்பவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்றுசொல்லிக் கொண்டுவயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதும்,அவர்கள் கூறுவதெல்லாம் பொய்என்பதும் சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலைப்பாடாகும்.

நாம் நம்முடைய நிலைப்பாட்டின் அடிப்படையில் தலைப்பிற்கு உட்பட்டு வாதங்களைஎடுத்து வைக்கத் துவங்கினோம்.

ஸ் ஷாஹீல் ஹமீத் என்ற அவ்லியா தன்னுடைய வளர்ப்பு மகனுக்குப் பெண் பார்க்கச்செல்லும் போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களில்மூத்தவளின் தலையைத் தடவினாள் என்று அவர்களுடைய மவ்லிதில் வரக்கூடியஆபாசத்தை முதல் வாதமாக எடுத்து வைத்தோம்.

ஆனால் இந்த ஆபாசத்தில் அவர்கள் வசமாக மாட்டிக் கொண்டதின் காரணத்தினால்அதில் வரக்கூடிய "ஸகீரதன்” என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு இதன் பொருள்சிறுமி தான். எனவே ஷாஹுல் ஹமீத் தடவியது சிறுமியின் தலையைத் தான் என்றுவாதிட்டார்கள்.

"ஸகீரதன்” என்ற வார்த்தைக்குச்சிறுமி என்ற பொருள் இருந்தாலும் அது பருவ வயதைஅடைந்த இளம் பெண்களுக்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அலீ (ரலி) அவர்கள்ஃபாத்திமாவைப் பெண் கேட்கும் போது அங்கும் "ஸகீரதன்” என்ற வார்த்தைபயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹதீஜா (ரலி) அவர்களின் மகள்.நபியவர்கள் நபியாவதற்கு முன்பாகவே பிறந்தவர்கள். நபியவர்கள் மக்காவில்பத்தாண்டுகள் இருந்தார்கள். மதீனாவிற்கு வந்து இரண்டாவது ஆண்டு தான் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. எனவே "ஸகீரதன்” என்ற வார்த்தை திருமணவயதை அடைந்த இளம் பெண்களுக்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

இங்கு ஷாஹுல் ஹமீத் பெண் பார்த்து, உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டும்என்ற எண்ணத்தில் செல்கிறார். அப்படியானால் இங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைஇளம் பெண்ணைத் தான் குறிக்கும் என்று ஹதீஸை ஆதாரம் காட்டி சொன்ன பிறகும்நாம் வைத்த வாதத்திற்கோ, ஹதீஸிற்கோ பதில் கூறாமல் எங்கெங்கோ சுற்றினார்கள்.இதை விவாத சிடிக்களைப் பார்க்கின்ற யாரும் புரிந்து கொள்ளலாம்.

பிறகு பல கேள்விகளைத் தொடர்ந்துகேட்டோம்

ஸ் யூதர்கள் ஒவ்வொரு அரபி எண்ணிற்கும் ஒரு நம்பரை வைத்துள்ளார்கள். இதற்குஅப்ஜத் முறை என்று கூறுவார்கள். இந்த அடிப்படையில் ஷாஹுல் ஹமீத் என்றஅவ்லியா நம்பரை வைத்து ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று தீர்மானித்துள்ளார்.இதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?

ஸ் முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் அவர் காட்சிதருவார்என்று முஹைதீன் மவ்லிதில் வருகிறது. எங்கே அவரை அழைத்துக் காட்டுங்கள் என்றுகேட்டோம்.

அதற்கு அவர்களின் பதில் "நீங்கள் அல்லாஹ்வை அழைத்துக் காட்டுங்கள். நாங்கள்முஹைதீனை அழைத்துக் காட்டுகிறோம்” என்று கூறினார்கள். இது இவர்கள் எந்தஅளவிற்கு இணை வைப்புக் காரியங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதைத்தெளிவாகஉணர்த்தியது.

சுன்னத் வல் ஜமாஅத்தைக் சார்ந்தவர்களே காரி உமிழக் கூடிய வகையில் இவர்களின்இந்தக் கேள்வி அமைந்திருந்தது. அல்லாஹ்வை நாம் அவனை அழைத்தால் நாம்அறியாத விதத்தில் உதவி செய்வான் என்பதை நாமும் ஏற்றுக் கொண்டுள்ளோம்,அவர்களும் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். மேலும் அல்லாஹ்வை அழைத்தால்நேரடியாக வருவான் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை.

ஆனால் முஹைதீன் மவ்லித் என்ற குப்பையில் "முஹைதீனே வாருங்கள் ஆஜராகிவிடுங்கள்” என்று அந்தக் கவிஞன் அழைக்கின்றான். இந்தக் குப்பைகளைநியாயப்படுத்துவதற்காக இவர்கள் குர்ஆன் வரிகளைக் கூட பொய்யெனக் கருதுவதற்குத்துணிந்து விட்டார்கள்.

இறைவனுடைய வரிகளுக்கு நிகராக ஒரு கேடு கெட்ட கவிஞனின் வரிகளைக்கருதுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட குஃப்ரில் இருக்கிறார்கள் என்பதை நாம்புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ் "ஷாஹுல் ஹமீத் என்பவர் கீழக்கரைசென்று அங்கு உள்ளவர்களிடம்குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டாராம். அவர்கள் உப்புத் தண்ணீரைக் கொடுத்தார்கள்.எனவே அந்த ஊரில் இனி நல்ல தண்ணீரே இல்லாமல் ஆகக்கடவது என்று சபித்துவிட்டாராம். அன்றிலிருந்து அங்கு உப்புத் தண்ணீர் தான் வருகிறதாம். ஒருவன்எவ்வளவு தாகத்தோடு சென்றாலும் நல்ல தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாதாம்”என்று மவ்லிதில் வருகிறது. இப்படி ஒரு அவுலியா சபிக்கலாமா? சிலர் செய்ததவறுக்காக காலம் காலமாக மக்கள் பாதிக்கப்படலாமா? இது இஸ்லாமியஅடிப்படைக்கே மாற்றமானதாகி விட்டதே?

ஸ் ஷாஹுல் ஹமீத் நத்தம் என்ற ஊரில் ஒரு வீட்டாரிடம் சென்றுதன்னுடையமான் குட்டிக்கு பால் கேட்டாராம். அவர்கள் பாலை வைத்துக் கொண்டே கொடுக்கவில்லையாம்.இதனால் "இந்த வீட்டில் இனிமேல்பாலே இருக்காது” என்று சபித்துவிட்டாராம். அவர்கள் இன்று வரை பாலே குடிக்க முடியாதவர்களாகி விட்டார்களாம்என்று மவ்லிதில் ஒரு கப்ஸா வருகிறது. இப்படி ஒரு அவ்லியா சபிக்கலாமா? ஒருவீட்டார் செய்த தவறுக்காக அந்தக் குடும்பத்தினரை காலம் காலமாக பால் குடிக்கமுடியாமல் ஆக்கலாமா? இது மார்க்கத்திற்கு மாற்றமானதே என்றுகேட்டோம்

ஸ் முஹைதீன் ஆண்டவர் அனைத்து அவ்லியாக்களின் பிடரியிலும் கால் வைத்தகதை?

ஸ் முஹைதீன் 12 வருடங்கள் இரவில் தூங்காமலும், பகலில் தொடர் நோன்புவைத்ததாகவும் இடம் பெறும் கப்சா

ஸ் முஹைதீன் ஆண்டவர் ஒரு பறவைக் குஞ்சு சப்தமிட்டதற்காக தலை வேறு உடல்வேறாக பிரித்ததாக மவ்லிதில் வரக்கூடிய கப்சா

ஸ் ஷாஹுல் ஹமீதும் அவரது பக்கீர்களும் இரக்கமேயில்லாமல் வியாபாரியின்தோலைப் பறித்த அநியாயம்

ஸ் சூரியன், வருடம், மாதம், வாரம், நாள் ஆகியவை முஹைதீனிடம் சென்றுஅன்றைக்கு நடந்தவற்றைஎல்லாம் முறை யிடுகிறது என்ற அண்டப் புழுகல்

இன்னும் பல கேள்விகளை அடுக்கடுக்காக எடுத்து வைத்தோம். இதற்கெல்லாம்அவர்களுடைய பதில் உளறலைத்தவிர வேறொன்றும் இல்லை.

அல்லாஹ் நரகத்தில் காலை வைப்பான் என்று ஹதீஸில் வரவில்லையா? அது போல்தான் முஹைதீன் அவ்லியாக்களின் பிடறியில் காலை வைத்ததை விளங்கிக் கொள்ளவேண்டும் என்று பகிரங்க ஷிர்க்கான வாதங்களையும் எடுத்து வைத்தார்கள்.

சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் கூறி இந்தக் கப்சாக்களையும், அநியாயங்களையும்நியாயப்படுத்த முயன்றார்கள். இவ்வாறாக முதல் தலைப்பின் முதல் பாதிமெதுவாகவும், இரண்டாவது பாதி விறுவிறுப்பாகவும் நிறைவடைந்தது.

இறந்தவர்களிடம் உதவி தேடலாமா?

விவாதத்தின் இரண்டாவது தலைப்பு இறந்தவர்களிடம் உதவி தேடலாமா? என்பதாகும்.

"இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். எத்தனை பேர் அழைத்தாலும், எங்கிருந்துஅழைத்தாலும், எந்தமொழியில் அழைத்தாலும், உள்ளத்தால் அழைத்தாலும்,அனைத்தையும் ஒரே நேரத்தில் செவியுற்று பிரித்தறிந்து, அனைத்திற்கும் பதில்அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிரஅவனது எந்தப் படைப்புகளுக்கும்இல்லைஎன்பதும், எனவே அவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்பதும், அழைப்பிற்குப் பதில்சொல்ல மாட்டார்கள் என்பதும், எனவே இறந்தவர்களிடம் அழைத்து உதவி தேடக்கூடாது என்பதும் நம்முடைய தவ்ஹீத்ஜமாஅத்தின் நிலையாகும்.

இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதும், எத்தனை பேர் அழைத்தாலும், எங்கிருந்துஅழைத்தாலும், எந்தமொழியில் அழைத்தாலும், அனைத்தையும் ஒரே நேரத்தில்செவியுற்று பிரித்தறிந்து, அனைத்திற்கும் பதில் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வால்இறந்த இறைநேசர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்பதும், எனவே இறந்தவர்களிடம்உதவி தேடலாம்என்பதும் சுன்னத் ஜமாஅத் என்றுசொல்பவர்களின் நிலையாகும்.

இந்தத் தலைப்பில் நாம் பல்வேறு திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துவைத்தோம்.

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்டகாலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கேஅதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும்அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பைஅவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும்உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததைஅவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல்உமக்கு எவரும் அறிவிக்கமுடியாது.

(35:13,14)

மேற்கண்ட வசனத்தில் நேரடியாக உயிரோடு உள்ள ஒருவரை அழைப்பதைப் பற்றிஇறைவன் பேசவில்லை. ஏனென்றால் நாம் நேரடியாக ஒருவரை அழைத்தோம் என்றால்அவர் நம்முடைய அழைப்பைச் செவியேற்பார். இங்கு இறைவன் "செவியேற்கமாட்டார்கள்” என்றும் "பதிலளிக்க மாட்டார்கள்” என்றும் குறிப்பிடுகிறான்.அப்படியென்றால் நாம் இது இறந்தவர்களையும், சிலைகளையும், மறைவாகஉள்ளவர்களையும் பிரார்த்தனை செய்வதைப் பற்றித் தான் கூறுகிறது என்பதைஅறிவுடைய ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். பின்வரும் வசனங்களையும்கூறினோம்.

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தோரை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப் படுவார்கள் (6:36)

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போதுஉயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(16:21)

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும்செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

(27:80)

மேற்கண்ட வசனங்கள் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் எதையும் செவியேற்கமுடியாது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எதிர் தரப்பினர் மய்யித்செருப்போசையைக்கேட்கிறது, நபியவர்கள் பத்ருப்போரில் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்களுடன்பேசியுள்ளார்கள், மிஃராஜ் பயணத்தில்இறந்து விட்ட மூஸா நபி, முஹம்மத் (ஸல)அவர்களுக்கு உதவி செய்துள்ளார்கள் என்பது போன்ற ஹதீஸ்களைக் காட்டினார்கள்.அதற்கு நம்முடைய தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது தான் திருமறைக் குர்ஆனும்நபிமொழிகளும் போதிக்கின்ற,நம்முடைய அறிவும் ஒத்துக் கொள்கின்ற பொதுவானவிதியாகும். ஆனால்சில விதி விலக்குகளும் உள்ளன.

இவ்வுலகில் உள்ள அனைவரும் ஒரே ஆண் பெண்ணிலிருந்தே பிறந்தார்கள்என்பதுபொதுவான விதியாகும். ஆனால் ஆதம் நபியவர்களுக்கும், ஹவ்வா (அலை)அவர்களுக்கும், தாயும்,தகப்பனும் இல்லை. அதே போன்று ஈஸா (அலை)அவர்களுக்குத் தந்தை இல்லை. எனவே ஒருவன் ஆதம் நபிக்கு தந்தையில்லை. எனவேஉலகில் எந்த மனிதருக்கும் தந்தையிருக்க முடியாது என்று சட்டம் எடுத்தால் அவனைநாம் பைத்தியக் காரன், கிறுக்கன் என்று தான் கூறுவோம்.

இது போன்று தான் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது பொதுவானவிதியாகும். அதே நேரத்தில் "மக்கள் மய்யித்தை அடக்கம் செய்து விட்டு திரும்பிச்செல்லும்போது செருப்போசையைக் கேட்கிறது” (முஸ்லிம் 5116) என்று நபியவர்கள்கூறியுள்ளார்கள் என்றால் எப்போதும் கேட்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளலாகாது.அப்படி நாம் விளங்கக் கூடாது என்பதற்காகத் தான் நபியவர்கள் "திரும்பிச் செல்லும்போது செருப்போசையைக்கேட்கிறது” என்று கூறுகிறார்கள். திரும்பிச் செல்லும் போதுஎன்ற வார்த்தை எப்போதும் கேட்காது, திரும்பிச் செல்லும் போது மட்டும் தான் கேட்கும்என்பதையும்தெளிவுபடுத்துகிறது. எனவே இதிலிருந்து இறந்தவர்கள் எப்போதும்கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள் பல்வேறு திருமறை வசனங்களையும்,ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த ஹதீஸைஆதாரமாகக் காட்டுபவர்கள் வசதியாக ஒன்றை மறைத்து விடுவார்கள்.

மக்கள் திரும்பிச் சென்றவுடன் மலக்குமார்கள் இறந்தவரிடம் வந்துவிசாரணைசெய்கிறார்கள். அவர் மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டால் மலக்குகள்அவரை நோக்கி "அல்லாஹ் அவரை அவருடைய படுக்கையிலிருந்து எழுப்புகின்ற வரைநெருக்கமான வர்களைத் தவிர வேறு யாரும் எழுப்ப முடியாதே அப்படிப்பட்ட புதுமாப்பிள்ளை போன்று தூங்கு என்று கூறி விடுவார்கள். தீயவராக இருந்தால் அவருக்குகியாமத் நாள் வரை வேதனை செய்யப்படும் என்பதையும் நாம் ஹதீஸ்களில்காண்கிறோம்.

(திர்மிதி 991)

இறந்தவர்களை இறைவன் கியாமத் நாளில் தான் எழுப்புவான். எனவே இறந்துவிட்டநல்லடியார்கள் கியாமத்நாள் வரை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள்எதையும் அறிய மாட்டார்கள் என்பதைத் தான் நாம் இந்த ஹதீஸிலிருந்துதெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் பத்ருப் போரில் இறந்த காஃபிர்களை நோக்கி நபியவர்கள் பேசியதாக வரக் கூடியசெய்தியும் இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளமுடியாததாகும். நபியவர்கள் கூறிய பதிலிலிருந்தே இதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

நபியவர்கள் கிணற்றில் போடப்பட்டகாஃபிர்களை நோக்கி பேசும் போதுஉமர் (ரலி)அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே உயிரில்லாத உடல்களிடம்என்ன பேசுகிறீர்கள்?”என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள்பதிலளிக்கும் போது "நான் அவர்களிடம்கூறுவதை இப்போது அவர்கள் கேட்கிறார்கள்” (நஸயீ 2049) என்று கூறுகிறார்கள்.

இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்றிருக்குமானால் நபியவர்கள் இறந்தவர்கள்கேட்கிறார்கள் என்று பொதுவாகக் கூறியிக்க வேண்டும். ஆனால் அவ்வாறுகூறவில்லை. "இப்போது கேட்கிறார்கள்” என்றுதான் கூறுகிறார்கள்.

எனவே அந்த நேரம் தவிர எப்போதும், வேறு யாரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள்என்பதைத் தான் நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனவே இது பத்ருப் போரில்கொல்லப்பட்ட காஃபிர்களுக்கு மட்டும் தான் உரியதே தவிர அனைத்துஇறந்தவர்களுக்கும் உரியது கிடையாது.

மேலும் இந்த ஹதீஸில் ஒரு பகுதியை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.இந்த ஹதீஸின் மூலம்இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்ற இல்லாதகருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய இவர்கள் நபியவர்கள் இதனைத் தொடர்ந்து"அவர்கள் கேட்டாலும் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்” (முஸ்லிம் 5121) என்றுகூறுகின்றவாசகத்தை மறைத்து விடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸிலிருந்து இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்றுவைத்துக் கொண்டாலும் "அவர்கள் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்” என்றும்வருகிறது. ஆனால் நபியவர்களின் இந்தக்கூற்றுக்கு மாற்றமாக இவர்கள் இறந்தவர்கள்பதிலளிப்பார்கள் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது மாபெரும் இணை வைப்புக்காரியமாகும் என்று நம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இவ்வாறு தான் மிஃராஜ் தொடர்பான சம்பவத்திலும் நபியவர்களுக்கு மூஸா மற்றும்மற்ற நபிமார்களை இறைவன் நபியவர்களுக்கு நேரடியாகவும் உடலோடும் உயிரோடும்எடுத்துக்காட்டினான். அப்போது தான் நபியவர்கள் மூஸா நபியோடு உரையாடினார்கள்என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இவர்கள் உயிரோடு இருப்பதாகக் கருதுகின்ற நல்லடியார்கள் யாரும்உயிரோடும், உடலோடும் எடுத்துக் காட்டப்படவில்லை. அப்படி இவர்கள் நம்பக்கூடியஅவ்லியாக்கள்எனப்படுவோர் எடுத்துக் காட்டப்பட்டால் நாமும் தாராளமாகப்பேசுவோம்.

யாராக இருந்தாலும் உயிரோடும் உடலோடும் இருந்தால் தான் அவர்களிடம்பேசமுடியும் என்பதைத் தான் மேற்கண்ட சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மேலும்இந்த இரண்டு சம்பவங்ளும் இறைவனுடைய வல்லமைக்குத் தான் சான்றே தவிரஇறந்தவர்கள் கேட்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் மூஸா (அலை) அவர்களோடு நபியவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸில்வருவதால் நாம் நம்பிக்கை கொள்கிறோம். இதே போன்று முஹைதீனோ,மற்றஅவ்லியாக்களோ கேட்கிறார்கள் என்று எந்த ஹதீஸில் வந்துள்ளது? என்று நாம் கேட்டகேள்விக்கு அவர்கள் எந்த பதிலும் தரவில்லை.

மேலும் மிஃராஜில் மூஸா நபியிடம்பேசிய நபியவர்கள் உலகிற்கு வந்தவுடன் மூஸாநபியிடம் பிரார்த்தனை செய்தார்களா? கஷ்டம் ஏற்படும் போது அவர்களிடம்முறையிட்டார்களா? அதற்கு எங்கே ஆதாரம் இருக்கிறது என்று கேட்டோம். அதற்கும்அவர்கள் உளறலைத் தவிர எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் நபியவர் களுக்குமறைவான ஞானம் உண்டா? இல்லையா? என்பது தொடர்பாக இந்த தலைப்பில் ஏற்பட்டசர்ச்சைகளுக்கும் பல ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையும் ஆதாரமாகக்கொண்டு நபியவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த விஷயங்களைத் தவிரமறைவாக உள்ள எதையும் அறியும் ஆற்றல் கிடையாது. எனவே இறந்தவர்கள்மறைவானவற்றை ஒரு போதும் அறியமுடியாது என்றும் ஆணித்தரமாகவும்தெளிவாகவும் நிரூபிக்கப்பட்டது.

மத்ஹபைப் பின்பற்றலாமா?

தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஷாஃபி, ஹனஃபி மத்ஹபுகளின் சட்ட நூற்களில்குர்ஆன் ஹதீஸிற்கு முரணானவையும் குர்ஆனின் ஆதாரமோ, ஹதீஸின் ஆதாரமோஇல்லாத ஏராளமான விஷயங்களும் உள்ளன. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றக்கூடாது என்பதும், இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமேபின்பற்ற வேண்டும் என்பதும், மற்றஎந்த அமைப்பையோ, குழுவையோ, தனிநபரையோ பின்பற்றக் கூடாது என்பதும் நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின்நிலைப்பாடாகும்.

தமிழகத்திலுள்ள, மத்ஹபை மறுக்கும் சில பிரிவினர் கூறுகின்ற ஏராளமான சட்டங்கள்குர்ஆன், ஹதீஸிற்கு முரணானவை என்பதும், அவர்களுடைய நூல்களில் முன்னுக்குப்பின்முரணான சட்டங்கள் உண்டு என்பதும், ஆகவே தமிழகத்தின் அனைத்து தவ்ஹீத்ஜமாஅத்தைப் பின்பற்றக் கூடாது என்பதும் சுன்னத் வல் ஜமாஅத் என்றுசொல்பவர்களின் நிலையாகும்

நாம் யாரையும் பின்பற்றக்கூடாது, குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்என்று கூறிய பிறகும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பின்பற்றக்கூடாது என்று இவர்கள்தலைப்பிட்டிருப்பதிலிருந்து இவர்களால் மத்ஹப் குப்பைகளில் உள்ள ஆபாசங்களுக்குப்பதிலளிக்க முடியாது என்பதினால் தான் அதைப் பற்றி விவாதம் செய்வதற்குமுன்வரவில்லை.

சென்ற இரண்டு தலைப்புகளில் பதில் கூறுகிறோம் என்ற பெயரில் ஏதாவதுஉளறியவர்கள் இந்தத் தலைப்பில் எந்த ஒன்றிற்கும் பதில் கூறவில்லை. ஒரு சிலவிஷயங்களுக்கு பதில் என்ற பெயரில் அனைவரும் சிரிக்கக்கூடிய வகையில் உளறித்தள்ளினார்கள்.

ஸ் தொழுகை நடத்தும் இமாமின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும்? உயர்ந்தகுலமாக இருக்க வேண்டும்? அழகிய மனைவி உடையவராக இருக்க வேண்டும். உறுப்புசிறியதாக இருக்க வேண்டும்.

ஸ் மிஸ்வாக் குச்சியை நீளவாக்கில் தேய்க்கக் கூடாது; அகலவாக்கில் தேய்க்கவேண்டும்; படுக்கை வசமாக வைக்கக் கூடாது; இதுநுரையீரல் வீக்கத்தை ஏற்படுத்தும்;அதைக் கடித்தால் மூலவியாதிவந்துவிடும்; ஒரு ஜான் அளவை விட நீளமாக இருந்தால்ஷைத்தான் அதில் பயணம் செய்வான்; அதை நட்டி வைக்க வேண்டும்;இல்லையென்றால் பைத்தியம் பிடிக்கும் என்பது போன்ற தமாஷான செய்திகள்.

ஸ் சிறுமியுடனோ, செத்த பிணத்துடனோ, ஒரு நாள் குழந்தையுடனோ,விலங்குடனோ உறவு கொண்டால் உலூ முறியாது, நோன்பு முறியாது என்று வரக்கூடியஆபாசக் களஞ்சியங்கள்

ஸ் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்து விட்டு தன்னுடைய மனைவிஎன்று கூறினால் தண்டனையில்லை.

ஸ் அடிமைக்கு முன்னால் மனைவியோடு உடலுறவு கொள்ளலாம்.

ஸ் ஆலிம்கள் மட்டும் குறைந்த அளவு கஞ்சா, அபின் சாப்பிடலாம் என்று வரக்கூடியசட்டம்

ஸ் மஃக்ரிபிற்கு முன் சுன்னத் இல்லை, கிரகணத் தொழுகையில் பயான் கூடாது.மழைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழக்கூடாது என்று வரக்கூடிய மார்க்கமுரணான சட்டங்கள்

ஸ் உண்ணத்தக்க பிராணியும்,மற்றோர் உண்ணத்தக்க பிராணியும்உடலுறவுகொண்டு ஆண் குழந்தை பிறந்தால் அவன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தலாம்,தொழுகை முடிந்த பின் அவனையே தூக்கிப் போட்டு அறுக்கலாம் என்று வரக்கூடியநகைச்சுவைத் துணுக்குகள்

ஸ் கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடிக்கும் போது ஒரு பைத்தியக்காரனையோ,சிறுவனையோ வைத்துக் கொண்டால் அனைவருக்கும் தண்டனையில்லை. ஒருவன்வீட்டில் உள்ளபொருட்களை வெளியில் எடுத்துப்போட மற்றொருவன் வெளியில்கிடப்பதை எடுத்துச் சென்றால் இருவருக்கும் தண்டணை இல்லை, ஒருவனுடையஆட்டை அறுத்து மாமிசத்தைக் கொண்டு சென்றால் அது திருட்டாக ஆகாது, நகைஅணிந்த குழந்தையை தூக்கிச் சென்றால் அது திருட்டுக் குற்றம் கிடையாது என்பதுபோன்ற கொள்ளையடிக்கும் சட்டங்கள்

இன்னும் இது போன்ற அதிகமான விஷயங்களை மத்ஹப் குப்பைகளிலிருந்து எடுத்துக்கூறி இவையெல்லாம் மார்க்கத்திற்கு மாற்றமானவை, எனவேமத்ஹப் குப்பைகளைப்பின்பற்றக் கூடாது என தெளிவாக எடுத்துரைத்தோம். இதில் எந்த ஒன்றிற்கும் அவர்கள்பதில் கூறவில்லை. மழுப்புவதற்காக அரபியில் படியுங்கள், மூல புத்தகத்தைத்தாருங்கள் என்றார்கள். அரபியில் படித்த பின்பும், மூல புத்தகங்களைக் காட்டிய பின்பும்அவர்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை

ஸ் ஜும்ஆவின் முன்சுன்னத் தொடர்பாக நாம் எழுதிய விஷயங்கள்

ஸ் பன்றியின் இறைச்சி தொடர்பாக முன்னால் எழுதப்பட்ட விஷயங்கள்

ஸ் பெண்கள் பள்ளிக்கு வருதல்

ஸ் ஆண்களின் தொடைப்பகுதி கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதியல்ல என்பதுதொடர்பாக நாம் கூறியவை

ஸ் நபிகள் நாயகம் அவர்களுக்கு சூனியம் வைக்கப் பட்டதாக வரக்கூடிய ஹதீஸைநாம் பலவீனம் என்று கூறுவது

ஸ் ஜும்ஆவிற்கு ஒரு பாங்குகூறுவது

ஸ் ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறுவது கூடாது என்று நாம்கூறுவது

ஸ் நெஞ்சில் கை கட்டக்கூடிய ஹதீஸ், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதற்கு நாம்ஆதாரமாகக் காட்டுகின்ற ஹதீஸ்

போன்ற சில வாதங்களை எடுத்து வைத்தார்கள். இவை அனைத்திற்கும் குர்ஆன் ஹதீஸ்அடிப்படையில் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.

தர்ஹாவிற்குச் செல்லலாமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் தான் ஸியாரத் செய்யவேண்டும். கப்ரின் மீது மண்ணைக் குவித்து வைக்கலாமே தவிர அதைக் கட்டுவதோ,பூசுவதோ, கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதோ, தர்ஹாவை ஸியாரத் செய்து அவர்களிடம்உதவி தேடுவதோ உரூஸ், கந்தூரி எடுப்பதோ நபி (ஸல்)அவர்கள் காட்டித் தந்தவழியல்ல என்பதால் கூடாது” என்பது நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையாகும்.

அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த முறையில் தான் ஸியாரத் செய்ய வேண்டும்என்பதும், பொதுக் கப்ரின் மீது கட்டடம் கட்டக் கூடாது என்பதும், வலிமார்களின் கப்ரில்கட்டலாம் என்பதும், தர்ஹா ஸியாரத் செய்து அவர்களிடம் உதவி தேடலாம் என்பதும்,உரூஸ், கந்தூரி விழா எடுக்கலாம் என்பதும் இவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள்காட்டித் தந்த வழிக்கு எதிரானதல்ல என்பதும் சுன்னத் வல் ஜமாஅத் என்றுசொல்லக்கூடியவர்களின் நிலைப்பாடாகும்.

இந்த தலைப்பு தொடர்பான விவாதத்தில் அவர்கள் தங்களின் தலைப்பிற்கு உட்பட்டுஎந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்க வில்லை என்பதே உண்மையாகும்.தலைப்பைத் திசைதிருப்புவதற்காக சம்பந்தமில்லாத வகையில் மூஸா நபி கப்ரில்தொழுதார்; நபிகள் நாயகத்திடம் பாவமன்னிப்பு கோரலாம் என்பது போன்றவிஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் தலைப்பிற்குஅப்பால்சென்றாலும் அவர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் நம் தரப்பில் தெளிவானபதில் எடுத்து வைக்கப்பட்டது.

தர்ஹா கட்டக்கூடாது என்பதற்கு நாம் வலுவான ஆதாரங்களாக மூன்று ஹதீஸ்களைஎடுத்து வைத்தோம்

கப்ரைப் பூசுவதையும், அதன் மீதுஉட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டுவதையும்நபியவர்கள் தடை செய்தார்கள்.

(முஸ்லிம் 1610)

யூதர்களையும், கிறிஸ்தவர் களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள்தங்கள்நபிமார்களின் சமாதிகளையெல்லாம் வணங்கும் இடமாக ஆக்கிக் கொண்டார்கள் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி 1330)

உம்மு ஹபீபா (ரலி)யும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீஸீனியாவில்கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்)அவர்களிடம்தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) "அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்துமரணித்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத்தலத்தை அவர்கள்எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள்.மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும்கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

(புகாரி 427)

யூத, கிறிஸ்தவர்கள் நபிமார்களின் சமாதிகளில் கட்டிய கட்டடங்களைத் தான்நபியவர்கள் "மஸ்ஜித்” (வணக்கத்தலம்) என்ற வார்த்தையைக் கொண்டு சுட்டிக்காட்டுகின்றார்கள். இன்றைக்கு நாம் தொழுகைக்காக கட்டுகின்றோமே அந்தப்பள்ளிவாசல் என்ற அர்த்தத்தில் அல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்து வைத்து தர்ஹாகட்டக் கூடாது என்றோம்.தர்ஹா கட்டக்கூடாது என்று வந்து விட்டாலே அங்கு ஜியாரத்செய்யலாமா? கூடாதா? அங்கு கந்தூரி உரூஸ் கொண்டாடலாமா? கூடாதா? என்றகேள்வியே வராது.

நம்முடைய வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் எங்கெல்லாமோ தலைப்பிற்குவெளியே சென்று பேசிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சத்தியம் மேலோங்கியதுஎன்பதை விவாத சிடிக்களின் தொகுப்பைக் காண்கின்ற யாரும் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம்.

விவாத அரங்கில் பதில் கூற முடியாமல் திணறியவர்கள் அரங்கிற்கு வெளியில்வந்தவுடன் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கப்சாவிடுவதோடுமட்டுமல்லாமல் அரங்கத்தில் வைக்காத வாதங்களை எல்லாம் கூறி "நாங்கள் அதைக்கேட்டோம்பதில் கூறவில்லை” "இப்படிக் கேட்டோம் பதில் கூறவில்லை” என்று பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். விவாதக் களத்தில் அவர்கள் தட்டுத் தடுமாறியதைஅதன் தொகுப்பு சிடிக்களைக் காண்கின்ற யாரும் சந்தேகமற விளங்கிக் கொள்ளலாம்.

விவாதம் முடிந்து தன்னுடைய தாயாரைப் பார்ப்பதற்காகச் சென்ற சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்களும்,அவருடன் சென்ற சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்,டிரைவராக இருந்த சகோதரர் சில்மி அவர்களும் விபத்துக்குள்ளானார்கள்.

இவர்கள் விபத்துக்குள்ளான காரைப் பார்க்கின்ற யாரும் அதில் பயணம் செய்தவர்கள்உயிர் பிழைத்திருக்க முடியாது என்றே கருதுவர்.ஆனால் இறையருளால் அவர்கள்மூவரும் லேசான காயங்களுடன் நலமாக உள்ளனர். இந்த விபத்துஅசத்தியவாதிகளுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளதை அவர்கள் வெளியிட்டுள்ளபிரசுரங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உண்மையில்அசத்தியவாதிகளுக்கு அப்படித் தான் இருக்கும் என்பதை இறைவன் தன்னுடையதிருமறையில் தெளிவாகக் கூறுகின்றான்.

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக்கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும்தராது. அவர்கள் செய்வதைஅல்லாஹ் முழுமையாக அறிபவன்.

(3:120)

ஒரு முஃமினுக்கு ஏற்படக்கூடிய அனைத்து இன்பங்களும், துன்பங்களும் இறைவனின்நாட்டப்படி தான். ஒருவனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு விட்டால் அவன் கொண்டகொள்கை தவறு என்பது இஸ்லாத்திற்கே மாற்றமானதாகும்.

எத்தனையோ நபிமார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். எத்தனையோ நபிமார்கள்பொய்யெனக் கருதப் பட்டுள்ளனர். ஏன்? நம்முடைய நபி நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள்கூட தாயிஃப் நகரிலும், மக்கமா நகரிலும் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துஉள்ளனர்.கடுமையான நோயாலும் கூடஅவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எத்தனையோஸஹாபாக்கள் கோரமான விபத்தில் மரணமடைந்துள்ளனர். இதனால் அவர்கள்கொண்ட கொள்கை தவறு என்று கூறி விட முடியுமா?

இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் கேடு கெட்ட மௌலிது குப்பைகளும், மத்ஹப்ஆபாசங்களும், தர்ஹா மடாலயங்களும் ஒரு போதும் மார்க்கமாகி விடாது.இவையெல்லாம் நரகத்தின் வாயில்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது”என்றும் கூறுவீராக!

(17:81)

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனேபொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (21:18)