ஏகத்துவம் நவம்பர் 2006 தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு எம். ஷம்சுல்லுஹா மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாதுஎன்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணைகற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15:94) என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும், சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப்பிடிப்பது. 2. இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது சமுதாயத்தில் எதிர்ப்பலைகள்சமுத்திரமாகத் திரண்டெழுந்து வரும். அவற்றை எதிர் கொள்ளும் போது பிழைப்புக்குமட்டும் பாதகம் வருவதில்லை. புகழுக்கும் சேர்த்துப் பாதகம் வரும் என்பதால்பரேலவிகளுக்கு எதிராக அவர்கள் பொங்கி எழவில்லை. ஆனால் 1980களில், அந்தச் சமுதாயத்தில் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள், "இப்படி எவரேனும் வர மாட்டார்களா?'' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்; ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்போது யாரும் கிளம்பி வரவில்லை. அது மட்டுமின்றிஜமாஅத்துல் உலமாவே பரேலவிஸத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியிருந்தது. அந்தச் சமயத்தில் சகோதரர் பி.ஜே. தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின்செயலாளராகவோ, துணைச் செயலாளராகவோ இருந்தார். நான் துணைச் செயலாளராகஅல்லது செயற்குழு உறுப்பினராக இருந்தேன். அப்போது 1985ல் தஞ்சாவூரில்"வலிமார்கள் மாநாடு'' என்ற பெயரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. நானும், மறைந்த மேதை பி.எஸ். அலாவுதீன், பி.ஜே., யூசுப் மிஸ்பாஹி, மாயவரம்அலீஸ் கைலி சென்டர் உரிமையாளர் மன்சூர் ஆகியோரும் அந்த வலிமார்கள் மாநாட்டில்பார்வை யாளர்களாகக் கலந்து கொண்டோம். அப்போது அந்த மாநாட்டில் பரேலவிஸத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஒருதரப்பு ஆலிம்களும், அதை எதிர்த்து மற்றொரு தரப்பு ஆலிம்களும் உரையாற்றினர். பரேலவிஸத்திற்கு வக்காலத்து வாங்கிப் பேசிய ஆலிம்கள், அல்லாஹ்வின் தகுதியைஅவ்லியாக்களின் தகுதியோடு ஈடாக்கி, இணையாக்கி, ஷிர்க்கை அரங்கேற்றிப்பேசினார்கள். இதைக் கண்டு பொறுக்க முடியாத நாங்கள் அதற்கு ஒரு மறுப்பு வெளியிடவேண்டும் என்று விரும்பினோம். அப்போது பொருளாதாரத்தில் ஓரளவு வசதி பெற்றிருந்த சகோதரர் மன்சூர் அவர்கள், நான்என் பெயர் போட்டு வெளியிடுகின்றேன் என்று குறிப்பிட்டார். அதற்கு சகோதரர் பி.ஜே.அவர்கள், "அப்படி வெளியிட்டால் அதனால் வரும் எதிர்ப்பலைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது'' என்று குறிப்பிட்டு, தானே வெளியிடுவதாகச் சொன்னார். அது போல்தன் பெயரைப் போட்டு ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதற்காக அப்போதைய அவரதுமாதச் சம்பளம் 300 அல்லது 350 ரூபாயை அர்ப்பணித்தார். அந்தப் பிரசுரம் இதோ: ஒரு நாடகம் அரங்கேறியது நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிடும் சோழ வள நாட்டின் தலைநகர் தஞ்சையில் மக்கள்மனங்களில் நஞ்சைக் கலந்திடும் எண்ணத்துடன் "வலிமார்கள் சிறப்பு மாநாடு'' என்றபெயரில் திட்டமிட்டு ஒரு நாடகம் அண்மையில் அரங்கேறியது. பெரியார்களின்பெயர்களால் தில்லுமுல்லுகளும், திருகு தாளங்களும் மலிந்து விட்ட இக்காலத்தில்,மாநாட்டில் ஆற்றப்படவிருக்கும் உரைத் தலைப்புகளில் ஒன்றாக, "தர்ஹாக்களின் பலாபலன்கள்'' என்பதும் அச்சிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு மனங்குமுறிய பன்னூற்றுக் கணக்கான சன்மார்க்கப் பேரறிஞர்கள்மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொண்ட, "தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களின் ஜமாஅத்துல் உலமா சபை''யினுடைய அப்போதையபொதுச் செயலாளர் மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களிடம் விளக்கம்கேட்ட போது, "தரீக்காக்களின் பலா பலன்கள்'' என்பது தான், "தர்ஹாக்களின் பலாபலன்கள்'' என்று தவறாக அச்சாகி விட்டது என்று சொல்லி நழுவப் பார்த்தார். …
தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு Read More