போரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா?

போரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா?

போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று நாம் சொல்வது பொய்யா?

(இது குறித்து சையது இபராஹீம் அவர்கள் எழுதிய மறுப்பை இங்கே பதிவு செய்கிறோம்.)

சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரமலானில் தொடர் உரை நிகழ்த்திய போது ஒரு செய்தியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பொய் பேச நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் என்று சொல்லி கீழ்க்கண்ட ஹதீஸைக் குறிப்பிட்டார்.

2605 ( 101 ) حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي يُونُسُ ، عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ – وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَأَخْبَرَتْهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ : " لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا ". قَالَ ابْنُ شِهَابٍ : وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِي شَيْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلَّا فِي ثَلَاثٍ : الْحَرْبُ، وَالْإِصْلَاحُ بَيْنَ النَّاسِ، وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார் என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல் : முஸ்லிம்

இணக்கத்திற்காக கணவன் மனைவியர் தமக்கிடையில் பொய் சொல்வதற்கு நபிகளார் அனுமதியளித்துள்ளார்கள் என்பதை விளக்கி பீஜே அவர்கள் பேசிய 7 நிமிடம் உள்ள முழு நீள வீடியோவின் 30 நொடியை மட்டும் துண்டாக வெட்டி தற்போது அவதூறு பரப்பி வருகின்றனர் சில வயிற்றெரிச்சல் பேர்வழிகள்.

பீஜே பேசிய முழு வீடியோவை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.

மேற்கண்ட செய்தியை பீஜே குறிப்பிடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரின் போது பொய் சொல்ல அனுமதியளித்துள்ளார்கள். போரின் போது நபி அவர்களே பொய் சொல்லுவார்கள் என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அரபு மூலத்துடன் பீஜே சொல்லிக் காட்டினார்.

அந்த ஹதீஸ் இதோ:

2947 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، قَالَ : أَخْبَرَنِيعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ، قَالَ : سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدُ غَزْوَةً إِلَّا وَرَّى بِغَيْرِهَا.

2947. கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்த போது இதை அவர்கள் கூற கேட்டேன் என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த – அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) அறிவித்தார்.

நூல் : புகாரி 2947

3029 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَصْرَمَ ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : سَمَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَرْبَ خَدْعَةً.

3029 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் போரை சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்கள்.

3030 حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ ، عَنْ عَمْرٍو ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْحَرْبُ خَدْعَةٌ ".

நூல் : புகாரி

3030 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3030

போருக்குச் செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொய் சொல்வார்கள் என்று ஹதீஸ் ஆதாரத்துடன் மேற்கோள்காட்டி பீஜே அவர்கள் சொன்ன விஷயத்தை, அவர் சொன்ன ஹதீஸ் ஆதாரங்களையெல்லாம் வெட்டிவிட்டு வெறுமனே 30 நொடி வீடியோவாக வெட்டிப் போட்டதே இவர்களது பித்தலாட்டத்திற்குச் சரியான சான்று.

இருந்த போதிலும் தக்க சான்றுகளுடன் சொன்ன சரியான செய்தியை பாரதூரமான செய்தி போல பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்து கப்ர் வணங்கிகளும், சலஃபுக்கும்பலும் தற்போது பரப்பி வருகின்றனர்.

நாம் போர் செய்யும் போது எதிரி ஒருவன் வந்து நம்மிடம் நீ என்னென்ன போர்த்தளவாடங்கள் வைத்துள்ளாய் என்று கேள்வி கேட்டால், நம்மிடம் உள்ளது 20 துருப்பிடித்த வாள்களும், 15 துருப்பிடித்த கேடயம் மட்டும்தான் என்று வைத்துக் கொள்வோம்; அந்த உண்மையை அவனிடத்தில் சொன்னால் அந்த இடத்திலே நமது கதை முடிந்துவிடும்.

இதைக் கவனத்தில் கொண்டுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் என்பது சூழ்ச்சியாகும் என்றும், போரில் பொய் சொல்லலாம் எனவும் வழிகாட்டியுள்ளார்கள்.

போரின் போது பொய் சொல்வதை உலகத்தில் எந்த ஒரு ஒழுக்க சீலரும் தவறென்று சொல்லமாட்டார். போரின் போது பொய் சொல்லக்கூடாது; உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும் என்று சொல்பவன் கட்டாயம் பைத்தியக்காரனாகத் தான் இருக்க வேண்டும்; அல்லது அவன் நம்மை அழிக்க வந்த எதிரியாக இருக்க வேண்டும்.

பீஜே சொன்னதை மறுப்பவர்கள் முக்கியமான ஒரு கேள்வியை வைக்கிறார்கள். கஅப் பின் மாலிக் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸில் பொய் என்ற வாசகம் இல்லை. பாசாங்கு என்று தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே பீஜே சொன்னது தவறு என்பது இவர்களின் வாதம். பொய் என்பது வாயால் சொல்வதில் மட்டும் தான் வரும். செயலில் பொய் வராது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொல்லவில்லை; பாசாங்குதான் செய்தார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

போருக்குச் செல்வதாக இருந்தால் போருக்குச் செல்வதைச் சொல்லாமல் வேறு ஏதோ ஒரு பகுதிக்குச் செல்வதுபோல நபிகளார் பாசாங்கு காட்டுவார்கள் என்று தெளிவாக வருகின்றது.

அப்படியானால் இதற்குப் பெயர் என்ன?

பாசாங்கு என்பது பொய் அல்லாமல் வேறு என்ன?

ஒருவர் தான் முழு உடல் நலத்துடன் இருக்கும் நிலையில் தனக்கு உடல் நலம் சரியில்லாதது போல் பாசாங்கு செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இவரைப் பற்றி என்ன சொல்லுவோம். பொய்யாக நடிக்கின்றார் எனக் கூறுவோம். அப்படியானால் பொய் என்பது சொல்லிலும் உண்டு; செயலிலும் உண்டு என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

இல்லை; இல்லை; தனது உடல் நலம் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் போதும் தான் உடல் நிலை சரியில்லாதவர் போல பாசாங்கு செய்பவர் பொய் சொல்லவில்லை என இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபுக் கும்பல்களும் சொல்லப் போகின்றார்களா?

பொய் என்பது சொல்லில் மட்டும் தான் உண்டு. சொல் அல்லாததில் பொய் என்பது வராது என்று கூறுவார்களானால் கீழ்க்கண்ட வசனத்திற்கு இவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.

12:18 வசனத்தில் பொய்யான இரத்தத்தைக் கொண்டு வந்தனர் என அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

இரத்தம் என்பது சொல் அல்ல. அது ஒரு பொருள். அதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது பொய்யான இரத்தம் என்று கூறுகிறான்.

உண்மைக்கு முரணான அனைத்துமே பொய் தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பாசாங்கு செய்வது என்பதும் பொய்யின் ஒரு வகை தான் என்பதைத் தெரிந்து கொண்டே மறுக்கும் இந்தக் கூட்டத்தினர் பீஜேவின் மீது ஏதாவது அவதூறு சொல்ல வேண்டும் என்பதற்காக 6 வருடத்திற்கு முன்பு அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு பீஜே பேசிய வீடியோவை தற்போது வெட்டி எடிட் செய்து பரப்பி வருவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கப்ரு வணங்கிகளிடமும், சலஃபுக் கும்பலிடமும் நாம் கேட்பது ஒரேயொரு விஷயம்தான்.

நபிகளார் பொய் சொல்லவில்லை; பாசாங்கு செய்து நடிக்கத்தான் செய்தார்கள் என்று சொல்கின்றீர்களே! அப்படியானால் நடிப்பதற்கு பெயர் உங்களது ஊரில் என்னவென்று வைத்துள்ளார்கள். கொஞ்சம் விளக்குங்களேன்.

நபிகளார் போரின் போது எதிரிகளிடத்தில் பொய் சொன்னார்கள் என்று தக்க ஆதாரத்துடன் பீஜே சொல்வதை இந்த கப்ரு வணங்கிகளும், சலஃபுக் கும்பலும் மறுக்கக் காரணம் என்ன தெரியுமா?

இது நபிகளாரது கண்ணியத்தைக் குலைக்கும் செயலாம். நபிகளார் போரின் போது பொய் சொன்னார்கள் என்று ஏதாவது ஒரு பிறமத சகோதரர் கேட்டால் அவர் நபிகளாரைப் பற்றி என்ன நினைப்பார் என்று ரொம்ப ஆதங்கப்படுகின்றனர் இந்த கப்ரு வணங்கிகளும் சலஃபுக் கும்பலும்.

போரின் போது நபிகளார் பாசாங்கு செய்துள்ளார்களே என்று பிறமத சகோதரர் கேட்டால் நபிகளாரைப் பற்றி என்ன நினைப்பார்? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

அறிவை அடகு வைத்துவிட்டு உளறுகிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

சரி. அப்படியானால் போரின் போது நபிகளார் பொய் சொல்ல அனுமதியளித்தார்கள் என்று ஹதீஸில் தெளிவாக வருகின்றதே! இதை பிறமத சகோதரர்கள் படித்தால் நபிகளாரைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்கு இவர்கள் பதில் சொல்வார்களா?

போரின் போது பொய் சொல்ல அனுமதி வழங்குவது கண்ணியம்; அதையே நபிகளார் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருவது மட்டும் அசிங்கமா? பதில் சொல்ல வேண்டும்.

திருக்குர்ஆனின் பல இடங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றச் சொல்லி அல்லாஹ் நபிகளாருக்கு கட்டளை போடுகின்றான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

மக்களுக்கு விளக்குவதற்காக சூரியன், நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றைக் கடவுள் என்று இப்ராஹீம் நபி கூறினார்கள். இது அந்த மக்களுக்குப் புரிய வைப்பதற்காகப் பொய்யாக சொல்லப்பட்டதுதான்.

ஏனென்றால் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு போதும் இணைவைத்ததே இல்லை என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

பார்க்க : அல்குர்ஆன் 3:67 2:135, 3:67, 3:95, 6:161, 16:120, 16:123

இந்த கப்ரு வணங்கிக் கூட்டமும், சலஃபுக் கும்பலும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?

அப்படியானால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் சொன்னதாக வரும் வசனங்களின் நிலை என்ன?

இது குறித்து சகோதரர் பீஜே அவர்கள் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பின் விளக்கங்கள் பகுதியில் 162வது குறிப்பில் விரிவாக விளக்கியுள்ளார்.

மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா?

போரின் போது நபிகளார் பொய் சொன்னார்கள் என்ற செய்தியை இவர்கள் மறுக்கப் புகுந்தால் மேற்கூறிய அனைத்து வசனங்களையும் மறுக்க வேண்டும்.

இன்னும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருகின்றது. அதையும் இவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்? இதற்கு கப்ரு வணங்கிக் கூட்டமும், சலஃபுக் கும்பலும் பதிலளிக்க வேண்டும்.

போரின் போது எதிரிகளிடத்தில் பொய் சொல்வது தான் புத்தியுடையவரின் செயல் என்பதை சுய நினைவுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்; இது போல நபிகளார் பொய் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று சொல்பவர் தான் நபிகளாரின் கண்ணியத்தை கெடுப்பவர்கள் என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

போர் தந்திரங்களை அறியாதவராக நபிகளார் இருந்துள்ளார்கள் என்பது போல இந்த மூளை மழுங்கிய கூட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் காட்டப் பார்க்கின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நபிகளாரை அல் அமீன்; சாதிக் என்றெல்லாம் மக்கள் சொல்லியுள்ளார்களே! அப்படியானால் போரில் நபிகளார் பொய் சொல்வார்கள் என நம்புவது மிகவும் வேதனைக்குரியது என்று ரொம்பவும் வேதனைப்படுகின்றனர் சலஃபுக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இது பைத்தியக்காரத்தனமான உளறல்.

அமீன் என்றெல்லாம் மக்கள் சொல்லி இருக்க நபியவர்கள் பாசாங்கு செய்தார்கள் என்று சொல்வது வேதனைக்குரியது என்று சொல்வார்களா?

அமீன் என்று பெயரெடுத்த நபிகளார் மற்றவர்களைப் பொய் சொல்லத் தூண்டினார்கள் என்று கூறுவது வேதனைக்குரியது என்பார்களா?

ஒரு கிராமவாசியிடத்தில் ஒரு குதிரையை நபிகளார் விலைக்கு வாங்கியதைப் பார்க்காத ஒரு நபித்தோழர் தான் பார்த்ததாக பொய் சாட்சி சொன்னதை அப்படியே சிலாகித்து நபிகளார் ஏற்றுக் கொண்டதாகவும், அப்படி பொய் சாட்சி சொன்ன நபரை இரண்டு சாட்சிக்கு நிகரானவர் என்று சொல்லி நபிகளார் அங்கீகரித்ததாக வரும் கட்டுக்கதையை மட்டும் அப்படியே நம்புவார்களாம். அப்போது மட்டும் அல் அமீன்; அஸ்ஸாதிக் என்ற நபிகளாரின் பட்டம் அப்படியே கண்ணியம் கூடுமாம். இதுதான் சலஃபுக் கும்பலின் உண்மை முகம்.

என்னதான் இவர்கள் இதுபோல படம் காட்டினாலும், அவதூறு கூறினாலும் கெட்டிக்காரனின் புளுகுமூட்டை எட்டு நாளைக்குத் தான் என்பதுபோல சில நாட்களில் இவர்களது வேடம் கலைந்து முகத்திரை கிழியும் என்பது இந்த விஷயத்திலும் உண்மையாகியுள்ளது.

அதே நேரத்தில் நம்மை நோக்கி இந்தக் குற்றச்சாட்டை வைக்க அறவே தகுதியற்றவர்கள் தான் இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபு பேர்வழிகளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆம்!

நபிகளார் ஒரு யூதன் வைத்த சூனியத்தால் 6 மாத காலங்கள் மனநோயாளியாக இருந்தார்கள் எனச் சொல்லும் இந்தக் கூட்டம்.

நபிகளார் அந்நியப் பெண்ணிடத்தில் தனித்திருந்தார்கள் என அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டும் இந்தக் கூட்டம்.

நபிகளார் அந்நிய ஆடவனை அந்நியப் பெண்ணிடத்தில் பால்குடிக்கச் சொல்லிக் கட்டளையிட்டார்கள் என்று சொல்லி அவர்களது ஒழுக்கத்தையும், நற்குணத்தையும் கேவலப்படுத்தும் இந்தக் கூட்டம்

தற்போது ஏதோ நபிகளாருக்குக் கண்ணியம் தேடித் தருவதுபோல பில்டப்புகளைக் கொடுத்து படம் காட்டுவது கொடுமையிலும் கொடுமை.

مجموع فتاوى ابن باز (7/ 371)

وقد وقع في يوم الأحزاب من الخديعة للمشركين واليهود والكيد لهم على يد نعيم بن مسعود – رضي الله عنه – بإذن النبي صلى الله عليه وسلم ما كان من أسباب خذلان الكافرين وتفريق شملهم واختلاف كلمتهم وإعزاز المسلمين ونصرهم عليهم

அஹ்ஸாப் போரின் போது நபியவர்கள் இணைகற்பிப்பவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக மோசடியும் சூழ்ச்சியும் செய்தார்கள் என்று சவூதி நாட்டு மார்க்க அறிஞர் பின் பாஸ் கூறுகிறார். சூழ்ச்சியும் மோசடியும் பொய்யை விட பாரதூரமானதாகும்.

அரபு நாட்டு சல்லிக்கு சிங்கி அடிக்கும் சலபிக்கும்பல் பின் பாஸ் மேலே சொன்னவாறு எழுதியுள்ளாரே அதைப் பற்றி பேசத் தயாரா?

18.02.2016. 0:55 AM

Leave a Reply