மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகள்

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005

இம்ரானாவை அவளது மாமனார் கற்பழித்து விட்டதால் அந்தப் பெண் தன் கணவருடன்வாழக் கூடாது என்று தேவ்பந்த் மதரஸா ஆலிம்கள் தீர்ப்பளித்தது குர்ஆன், ஹதீஸ்அடிப்படையில் தவறு என்பதை இந்த இதழில் தனிக் கட்டுரையாக விளக்கியுள்ளோம்.

திருக்குர்ஆனின் 4:22 வசனத்தில் இடம் பெற்றுள்ள நிகாஹ் என்ற வார்த்தையின்அடிப்படையில் தான் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக தேவ்பந்த் ஆலிம்களும், அதற்குவக்காலத்து வாங்கும் பாக்கியாத் ஆலிம்களும் கூறியுள்ளனர்.

நிகாஹ் என்பதற்குத் திருமணம் என்று மட்டும் பொருள் இல்லை; உடலுறவு என்றபொருளும் உள்ளது; எனவே இம்ரானாவுடன் அவளது மாமனார் உடலுறவு கொண்டுவிட்டதால் அவரது மகனுடன் இருந்த திருமண உறவு முறிந்து விட்டது என்று விளக்கம்அளித்திருந்தனர். இவர்களின் இந்த விளக்கம் தவறானது என்பதை அந்தக் கட்டுரையில்விளக்கியுள்ளோம்.

இப்போது நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்பும் செய்தி என்னவென்றால், இம்ரானாவிவகாரம் செய்தியாக்கப்பட்டு விட்டதால் தான் அதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் காட்டமுன் வருகின்றார்களே தவிர, மத்ஹபுகளிலுள்ள எத்தனையோ சட்டங்கள் குர்ஆன்ஹதீசுக்குச் சம்பந்தம் இல்லாதவையாக, பைத்தியக் காரத்தனமானவையாக உள்ளன.அவற்றுக்கெல்லாம் இவர்கள் எந்த விளக்கமும் தர முடியாது என்பது தான் உண்மை.

இம்ரானா விவகாரத்தில் மாமனார் உடலுறவு கொண்டதால் திருமண உறவு முறிந்ததுஎன்று குர்ஆன் வசனத்தை வளைத்து விளக்கமளித்தார்கள்.

ஆனால் இது போன்று உடலுறவு ஏற்பட்டால் திருமண உறவு முறியும் என்று மட்டும்மத்ஹபுகள் கூறவில்லை. திருமண உறவை முறிக்கும் காரியங்களாக மத்ஹபுகள்கூறும் சட்டங்களைக் கேட்டால், இந்தக் குப்பைகளையா நாம் பின்பற்றுகிறோம் என்று எண்ணி ஹனபி மத்ஹபினர் ஒவ்வொருவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலைஏற்படும்.

மார்க்கத்தில் இல்லாததைப் புகுத்தும் மத்ஹபுச் சட்டங்கள்

ஒரு பெண்ணை அவளது மாமனார் ஆசையுடன் தொட்டால் கூட அவளை அவளதுகணவரிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்று மத்ஹபு கூறுகின்றது.

உடலைக் கூட தொட வேண்டாம்; முடியைத் தொட்டால் கூட திருமண உறவு முறிந்துவிடும் என்று கூறுகின்றது.

முடியைக் கூட தொட வேண்டாம்; முடிக்கு மேல் இருக்கும் முக்காட்டைத் தொட்டால்கூட கணவன் மனைவியைப் பிரித்து விட வேண்டும் என்று மத்ஹபுச் சட்டங்கள்கூறுகின்றன.

ஒரு பெண்ணின் மர்ம உறுப்பை அவளது மாமனார் பார்த்தாலும் திருமண உறவு முறிந்துவிடும் என்று மத்ஹபு கூறுகின்றது.

நேரடியாகக் கூட பார்க்க வேண்டாம்; கண்ணாடியிலோ, தண்ணீரிலோ தெரியும் அவளதுமர்ம உறுப்பை மாமனார் பார்த்தால் கூட கணவன், மனைவிக்கு இடையேயுள்ளதிருமண உறவு முறிந்து விடும் என்றும் மத்ஹபுச் சட்டங்கள் கூறுகின்றன.

நிகாஹ் என்ற வார்த்தைக்கு, திருமணம் என்று மட்டும் பொருள் இல்லை; உடலுறவுஎன்ற பொருளும் உண்டு; எனவே தான் இவ்வாறு தீர்ப்பளித்தோம் என்று விளக்கம்அளித்தவர்கள் மத்ஹபுகளின் இந்தக் கேலிக்கூத்தான சட்டங்களுக்கு என்ன விளக்கம்அளிக்கப் போகின்றார்கள்? மத்ஹபுகளிலுள்ள இது போன்ற கிறுக்குத்தனமானசட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

முடியைத் தொட்டாலும் ஏற்படும் திருமணத் தடை!

இச்சையுடன் ஒரு பெண், ஓர் ஆணைத் தொட்டால், தொட்டவளின் தாயும், மகளும்அவனுக்குத் தடையாகி விடுவர். (அதாவது அவ்விருவரையும் அவன் திருமணம்முடிப்பது தடை செய்யப்பட்டு விட்டது)

நூல்: ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 192

(தான் மணமுடித்த பெண்ணின் தாயை (மாமியாரை) ஒருவர் திருமணம் செய்வதுதடையாகும் என்ற) திருமணச் சட்டத்தின் படி தன்னால் விபச்சாரம் செய்யப்பட்டபெண்ணின் தாயைத் திருமணம் முடிப்பது இவனுக்குத் தடையாகும். இவன்இச்சையுடன் தொட்ட பெண்ணின் தாயை இவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவன்தொட்ட பகுதி உஷ்ணத்தைத் தடுக்காத திரையுடன் கூடிய தலையின் ஒரு முடியாகஇருந்தாலும் சரியே! திருமணம் முடிக்கத் தடை தான்! அவனைத் தொட்டு விட்டபெண்ணின் தாயையும் அவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவனது ஆணுறுப்பைப்பார்த்தவளின் தாயும் அவனுக்குத் தடை! அவன் எவளது வட்ட உள்ளுறுப்பைப்பார்த்தானோ அவளது தாயும் இவனுக்குத் தடை! அவளது உறுப்பை அவன்கண்ணாடியிலோ அல்லது அவள் தண்ணீரில் நிற்கும் போது பார்த்தாலும் சரி! அவளதுதாய் அவனுக்குத் தடை தான். மேற்கண்ட பெண்ணின் தாய் அவனுக்குத் தடையானதுபோல், அவளது மகளும் அவனுக்குத் திருமணம் முடிக்கத் தடை!

நூல்: துர்ருல் முக்தார் பாகம் 3, பக்கம் 32

முடியைத் தொட்டாலும் திருமணத் தடை ஏற்படும் என்று திருக்குர்ஆனின் எந்தவசனத்தில் உள்ளது? எந்த ஹதீஸிலிருந்து இந்தச் சட்டத்தை எடுத்தார்கள்? மத்ஹபுக்குவக்காலத்து வாங்கும் உலமாக்கள் பதில் சொல்வார்களா?

மாதத்தில் மூன்று நாள் குடும்பக் கட்டுப்பாடு

மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு இரவிலும் உடலுறவுகொள்வது வெறுப்பிற்குரியதாகும். காரணம் இந்நாட்களில் உடலுறவு கொள்ளும் போதுஷைத்தான் விஜயம் செய்கின்றான் என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில்பதிவாகியுள்ளது.

நூல்: இஆனா பாகம் 3, பக்கம் 273

மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று இந்தமத்ஹபுச் சட்டம் கூறுகின்றது. ஆனால் அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்றுபாருங்கள்.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவேமாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக்கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள்தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம்செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாகஇருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 2:222)

மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும்இல்லறத்தில் ஈடுபடலாம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இந்த நூலாசிரியர்தனக்கு ஏதோ வஹீ வந்தது போன்று தன் இஷ்டத்திற்கு சில நாட்களைக் குறிப்பிட்டுஇல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கின்றார்.

அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ தடுக்காத ஒன்றை, இவர்கள் தங்களது மனோஇச்சைப்படி தடை செய்கின்றனர். இது போன்று ஆயிரம் நிபந்தனைகளைக் கூறினாலும்அவை அனைத்தும் வீணானவையே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறுகின்றார்கள்.

"அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்னநேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையைவிதிக்கின்றார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாது) அவர்கள்நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனை தான்நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரீ 2155

மேலும் அல்லாஹ் தடை செய்யாதவற்றைத் தங்கள் இஷ்டத்திற்குத் தடை செய்வதைஅல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

"இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது” என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும்பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீதுபொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:116)

"அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக்கொண்டு வாருங்கள்!”’என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால்அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக்கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம்இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர். (அல்குர்ஆன் 6:150)

குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான மத்ஹபுச் சட்டங்கள்

அடிமைப் பெண் முன்னிலையில்…

அடிமைப் பெண் நேரடியாகப் பார்க்கும் விதத்தில் ஒருவன் தன் மனைவியுடன் உடலுறவுகொள்வதில் தவறில்லை. ஆனால் மனைவி நேரடியாகப் பார்க்கும் நிலையில் அடிமைப்பெண்ணிடம் உடலுறவு கொள்வது கூடாது.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 6, பக்கம் 423

வெட்கம் ஈமானில் உள்ளது என்று சொன்ன இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படி ஒருசட்டத்தை எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறுவதைப் பாருங்கள்.

ஓர் ஆண் மற்றொரு ஆணின் மர்ம உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு பெண் மற்றொருபெண்ணின் மர்ம உறுப்பைப் பார்க்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் மாலிக் (ரலி) ,

நூல்: முஸ்லிம் 512

பால்ய விவாகம்

வயதுக்கு வராத சிறுவர், சிறுமியை தகப்பன் அல்லது பாட்டன் திருமணம் முடித்துவைத்து விட்டால் வயதுக்கு வந்ததும் அவ்விருவருக்கும் சுய விருப்பம் கிடையாது. (அதாவது அந்தத் திருமண உறவை முறிக்க முடியாது)

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198

சிறுவர், சிறுமியின் பால்ய விவாகம் கூடும்.

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198

பால்ய விவாகம் கூடும் என்று மத்ஹபு கூறுகின்றது. ஆனால் இஸ்லாத்தில் பால்யவிவாகத்திற்கு அனுமதி இல்லை.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர்மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக்கொள்ள முடியும்?

(அல்குர்ஆன் 4:21)

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன்கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதைஅடைந்தால் தான் ஏற்படும். ஆனால் மத்ஹபோ சிறுவர், சிறுமியிடம் அதுவும் அவர்கள்அறியாத நிலையிலேயே அந்த ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று கூறுகின்றது.

பருவ வயதை அடைந்த பெண்ணாக இருந்தாலும், அவளது விருப்பம் இல்லாமல்திருமணம் செய்து வைத்தால் செல்லாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது.

"கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக்கூடாது. கன்னி கழிந்த பெண்ணிடம் உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்துவைக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6968

ஆனால் அறியாத பருவத்தில், அவர்களது விருப்பம் என்ன என்பதே தெரியாத நிலையில்திருமணம் முடித்து வைக்கலாம் என்று மத்ஹபு கூறுகின்றது.

மிரட்டல் திருமணம்

திருமணம், விவாகரத்து, விவாகரத்தைத் திரும்பப் பெறுதல், மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தல், போர் இன்றியே எதிரிகளிடமிருந்துகிடைக்கும் வெற்றிப் பொருளை எடுத்துக் கொள்ளுதல், லிஹார் (மனைவியைத் தாய்க்குஒப்பாக்குதல்), அடிமையை விடுதலை செய்தல், பழிக்குப் பழி வாங்காது மன்னித்தல்,சத்தியம், நேர்ச்சை ஆகிய பத்து காரியங்களையும் நிர்ப்பந்தப்படுத்தி செய்யலாம்.

நூல்: ஷரஹ் பத்ஹுல் கதீர் பாகம் 3, பக்கம் 489

திருமணம், விவாகரத்து உள்ளிட்ட காரியங்களை நிர்ப்பந்தப்படுத்தி செய்தால் அதுசெல்லும் என்று மத்ஹபு கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணின் தந்தையைக்கத்தியைக் காட்டி மிரட்டி, உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்கா விட்டால்கொன்று விடுவேன் என்று கூறி, அவளைத் திருமணம் செய்தால் அந்தப் பெண்அவனுக்கு மனைவியாகி விடுவாள் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

அதே போல் கணவன், மனைவி ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் போது, யாரேனும் ஒருவர் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நீ தலாக்விடு என்று கூறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் கணவன் தன்மனைவியைத் தலாக் விட்டால் அந்தத் தலாக் செல்லுபடியாகும், அதன் பிறகு கணவன்மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி யாரும், யாருடைய மனைவியையும் அல்லதுஎந்தப் பெண்ணையும் நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம்சரியானது என்று வைத்துக் கொண்டால் ஊரில் எந்தப் பெண்ணும் நிம்மதியாக நடமாடமுடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

ஹனபி மத்ஹபை நியாயப்படுத்தும் ஆலிம் ஒருவரை யாரேனும் மிரட்டி அவரதுமனைவியை தலாக் விடச் சொன்னால் அவர் மனைவியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிடுவாரா? அல்லது நிர்ப்பந்தத்தில் தலாக் என்று கூறினாலும் அது தலாக் ஆகாது என்றுகூறுவாரா?

மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் சொல்லிக் கொண்டு,தங்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் அந்த மத்ஹபைத் தூக்கி எறிந்து விடுவது தான்இந்த மத்ஹபு ஆலிம்களின் நிலைபாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முகலாய மன்னர்கள் தாங்கள் விரும்பிய பெண்களை எல்லாம் நிர்ப்பந்தப்படுத்திதிருமணம் செய்தல், அடுத்தவன் மனைவியை நிர்ப்பந்தமாக தலாக் விடச் சொல்லிதிருமணம் செய்தல் போன்ற காரியங்களைச் செய்து வந்தனர். அவர்களைத்திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை தான் மத்ஹபுச் சட்டங்கள் என்பதற்கு ஹனபிமத்ஹபின் இந்த ஒரு சட்டமே போதுமான சான்றாக உள்ளது.

இஸ்லாத்தைப் பொறுத்த வரை நிர்ப்பந்தத்திற்கு அனுமதி உள்ளது என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் நிர்ப்பந்தத்தில் செய்யப்படும் ஒரு காரியம் நிரந்தரமாகாது என்பதுதான் திருக்குர்ஆன் வழங்கும் தீர்ப்பாகும்.

உதாரணமாக நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தனது மனைவியைத் தலாக் கூறிவிட்டார் என்றால், அது வெறும் வாயளவில் சொன்னதாகத் தான் ஆகுமே தவிரஉண்மையில் தலாக் ஆகாது.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில்தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும்உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப் பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.

(அல்குர்ஆன் 16:106)

நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ்வை மறுத்து, குஃப்ரான வார்த்தைகளைச் சொல்லிவிட்டால் கூட அதனால் அவர் காஃபிராகி விட மாட்டார் என்பதை இந்த வசனம்விளக்குகின்றது. எனவே திருமணம், தலாக் என்று சொல்லி விடுவதால் மட்டுமேதலாக்காகவோ, திருமணம் முடித்ததாகவோ ஆகி விடாது என்பதை இந்தவசனத்திலிருந்து அறியலாம்.

சகுனத்தை நியாயப்படுத்தும் மத்ஹபு

இப்போது நம்முடைய காலத்தில் புதன் கிழமையன்று நோயாளியை நலம்விசாரிப்பதைக் கெட்ட சகுனமாகக் கருதுகின்றார்கள். புதன் கிழமையன்று நோயாளியைவிசாரிக்கச் செல்வதால் அவருக்கு இதன் மூலம் இடையூறு ஏற்பட்டால் அதை விட்டுவிடுவது அவசியமாகும்.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 6, பக்கம் 388

இஸ்லாத்தில் சகுனம் பார்ப்பதற்குத் துளியும் அனுமதியில்லை. சகுனம் பார்ப்பதைஇறை மறுப்பு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால்இந்த மத்ஹபுச் சட்டமோ சகுனத்தை ஆதரிப்பதோடு, அதனால் தீங்கு ஏற்படும் என்றும்கூறுகின்றது.

30 நாளில் 60 தடவை குர்ஆன் ஓதி முடித்தல்

ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமளானில்அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தொழுகையிலேயே(இவ்வாறு) ஓதி முடிக்க வேண்டும்.

நூல்: இஆனா, பாகம் 1, பக்கம் 16

ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும், அதுவும்தொழுகையிலேயே ஓதி முடிக்க வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறம்இருக்கட்டும். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்பதைக் கூட இந்த நூலாசிரியர்சிந்திக்கவில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஒருகுர்ஆனை ஓதி முடிப்பதற்குத் தடை விதித்தார்கள் என்ற செய்தி புகாரியில் 1978வதுஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்களோ ஒரு நாளைக்கு இரண்டுதடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள்.

ஆலிம்கள் மட்டும் போதைப் பொருள் சாப்பிடலாம்

கொஞ்சம் (போதைப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னவெனில், அதுஅறிவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அது போதையூட்டக்கூடியதாகவும், தளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருப்பினும் சரியே!

அதிகம் என்பதன் கருத்து, அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பைஏற்படுத்துவதாகும். எனவே மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்பதுடன் கொஞ்சம்சாப்பிடுவது கூடும். இது ஹராம் ஆகாது. ஆனால் இதைக் கண்டிப்பாகப் பொதுமக்களிடம் மறைத்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என்று எண்ணிக்கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள்.

நூல்: இஆனா, பாகம் 4, பக்கம் 156

போதைப் பொருளைக் கொஞ்சமாக சாப்பிடலாம்; ஆனால் பொது மக்களிடம் இதைச்சொல்லக் கூடாது என்று இந்த நூல் கூறுகின்றது.

போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: புகாரி 6124

"அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது(ஹராம்) தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513

போதையூட்டக் கூடிய எந்தப் பொருளாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும்,குறைவாக இருந்தாலும் அது தடை செய்யப்பட்டது தான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

ஆனால் போதைப் பொருளைக் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மத்ஹபு கூறுகின்றது.அதையும் ஆலிம்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டுமாம். மக்களிடம் சொல்லி விடக்கூடாதாம். ஏனென்றால் அவர்கள் அதிகம் சாப்பிட்டு விடுவார்களாம். என்னேபேணுதலான சட்டம்?

தொழுகையில் விளையாட்டு

வேண்டுமென்றே காற்று விட்டுத் தொழுகையை முடித்தல்

தொழுகை முடிந்ததும் (ஸலாம் கொடுக்காமல்) தொழுகையில் செய்யக் கூடாதசெயலைச் செய்தோ, அல்லது பேசக் கூடாத பேச்சைப் பேசியோ, அல்லது தனக்குவிருப்பமான செயலை ஏதாவது ஒரு விதத்தில் செய்தோ தொழுகையை விட்டுவெளியேறலாம்.

உதாரணமாக, அந்தத் தொழுகை முடிந்த மாத்திரத்தில் ஒரு ஃபர்ளானதொழுகையையோ, அல்லது ஒரு நஃபிலான தொழுகையையோ தொழத் துவங்குவது,அல்லது அஹ்ஹஹ்ஹா என்று வெடிச் சிரிப்பு சிரிப்பது, அல்லது வேண்டுமென்றேகாற்று விடுவது, அல்லது பேசுவது, அல்லது அப்படியே எழுந்து சென்று விடுவது,அல்லது யாருக்காவது ஸலாம் சொல்வது இது போன்ற செயல்களைச் செய்துதொழுகையை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 1, பக்கம் 448, 449

தொழுகையை எந்த அளவுக்குக் கேலிக் கூத்தாக ஆக்கி விட்டார்கள் என்று பாருங்கள்.

"தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்)ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம்ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56

தொழுகையின் முடிவு ஸலாம் கொடுத்தல் தான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக்கூறியிருக்கும் போது, ஹாஹாஹா என்று சிரித்தும், காற்று பிரித்தும் தொழுகையைமுடிக்கலாம் ஹனபி மத்ஹபு கூறுகின்றது. தொழுகையையே விளையாட்டாக இந்தமத்ஹபுகள் ஆக்கி விட்டன.

தேமதுரத் தமிழில் திருக்குர்ஆன் ஓதலாம்

பாரசீக மொழியில் கிராஅத் ஓதிக் கொள்ளலாம். அல்லது தவ்ராத்தையோ, பைபிளையோஓதலாம். ஆனால் அந்த வசனங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்பவையாக இருக்கவேண்டும். சரித்திரங்களாக இருக்கக் கூடாது. சரித்திரங்களாக இருந்தால் தொழுகைகெட்டுப் போய் விடும்.

நூல்: துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 485

பாரசீக மொழியில் கிராஅத் ஓதலாம் என்றும், பைபிளையும், தவ்ராத்தையும்தொழுகையில் ஓதலாம் என்று மத்ஹபு நூல் கூறுகின்றது.

மத்ஹபு ஆலிம்களிடத்தில் தொழுகையில் தமிழில் துஆச் செய்யலாமா? என்றுகேட்டால் கூட, அதைக் கூடாது என்று மறுத்து விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் விரும்பியதைக் கேட்கலாம் என்று அனுமதித்த துஆவைக் கூட தமிழில்கேட்கக் கூடாது; அரபியில் தான் கேட்க வேண்டும் எனும் போது, கிராஅத்தை பாரசீகமொழியில் ஓதலாம் என்று கூறும் மத்ஹபு நூல்களை என்ன செய்யப் போகின்றார்கள்?

பாரசீக மொழியை விடச் சிறந்த, செம்மொழியான தமிழில் ஏன் கிராஅத் ஓதக் கூடாது?என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்வார்களா?

தொழுகையில் தவ்ராத்தையும், இஞ்சீலையும் ஓதலாம் என்று முடிவு செய்ததற்குஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில்தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றறிந்த பலர் இஸ்லாத்தை ஏற்றனர். நீங்கள்தொழுகையில் தவ்ராத்தையும் இஞ்சீலையும் ஓதுங்கள் என அவர்களிடம் நபிகள்நாயகம் (ஸல்) கூறினார்களா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்தச் சட்டம்உருவாக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்வார்களா?

தொழுகையில் நாயையும், பூனையையும் அழைக்கலாம்

இவர்கள் தொழுகையைக் கேலிக் கூத்தாகக் கருதுகின்றார்கள் என்பதற்கு ஆதாரமாகஅமைந்துள்ள மற்றொரு மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

நாய் அல்லது பூனையை, இச் கொட்டி அன்புடன் அழைத்தாலோ, அல்லது ஒருகழுதையை ஓட்டினாலோ தொழுகை வீணாகி விடாது. காரணம், அது எழுத்துவடிவிலான வார்த்தை அல்ல. அத்தஹிய்யாத் இருப்பு அளவிற்கு அவர் உட்கார்வதற்குமுன்னால் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இரண்டும் சமம் தான்.இக்காரியத்தை மறந்தோ, அல்லது உறங்கிக் கொண்டோ, அல்லது அறிந்தோ, அல்லதுதவறியோ, அல்லது நிர்ப்பந்தமாகவோ செய்தாலும் தொழுகை வீணாகி விடாது.

நூல்: துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 614

தொழுகையில் நாய், பூனையை அழைக்கலாம் என்று மத்ஹபு கூறுகின்றது.

"இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பதுஇறைவனைத் துதிப்பதும், பெருமைப் படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி),

நூல்: முஸ்லிம் 836

தொழுகையில் பேசுவதற்கு அனுமதியில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.ஆனால் மத்ஹபுச் சட்டமோ தொழுகையில் நாயை அழைப்பதும், கழுதையைவிரட்டுவதும் கூடும் என்று கூறுகின்றது.

கிராமத்தில் ஜும்ஆ இல்லை

ஜும்ஆ நிறைவேறுவதற்கு ஏழு நிபந்தனைகள் வேண்டும்.

அதில் ஒன்று ஜும்ஆ நடக்கும் ஊர் பட்டணமாக இருக்க வேண்டும். தொழுகைகடமையாக்கப்பட்ட அவ்வூர்வாசிகளை, அந்த ஊரிலுள்ள பெரிய பள்ளிவாசல்கொள்ளாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதே அதற்கான அளவுகோலாகும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 2, பக்கம் 137

கிராமத்தில் ஜும்ஆ கிடையாது என்பதற்கும், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள்இருக்க வேண்டும் என்பதற்கும் என்ன ஆதாரம்? அல்லாஹ்வோ, அவனது தூதரோஇவ்வாறு கூறியுள்ளார்களா?

விசுவாசிகளே! ஜும்ஆ நாளில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப் பட்டால் அல்லாஹ்வைநினைவு கூர்வதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!

(அல்குர்ஆன் 62:9)

என்று அல்லாஹ் கூறுகிறான். ஜும்ஆத் தொழுகை முஃமின்கள் அனைவர் மீதும் கடமைஎன இவ்வசனம் தெளிவாக அறிவிக்கிறது. இதில் கிராமம், நகரம் என்றெல்லாம்வேறுபடுத்திக் கூறவில்லை. பெண்கள், நோயாளிகள், பயணிகள் போன்றோருக்குவிதிவிலக்கு அளித்து ஹதீஸ்கள் உள்ளன. இவர்களைத் தவிர அனைத்து முஃமின்கள்மீதும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்.

ஹதீஸ்களை நாம் ஆராய்ந்து பார்த்தாலும் நகரங்கள் மட்டுமின்றி கிராமத்தில்வசிப்போருக்கும் ஜும்ஆ கடமை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த கால கட்டத்தில் அவர்கள் ஜும்ஆதொழுகையை நிறைவேற்றவில்லை. இரகசியமாகப் பிரச்சாரம் நடத்தி வந்ததால்மக்களைக் கூட்டமாகத் திரட்டி தொழுகை நடத்த முடியவில்லை.

ஆயினும் மதீனாவைச் சேர்ந்த சில நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களை மக்காவில்சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர். அவர்கள் மதீனா சென்றவுடன் ஜும்ஆத் தொழுகையைநிறைவேற்றி வந்தனர்.

எனது தந்தை கஅபு அவர்களின் பார்வை மங்கிய பிறகு அவருக்குப் பாதை காட்டுபவனாகநான் இருந்தேன். அவர்களை நன் ஜும்ஆவுக்கு அழைத்துச் செல்லும் போதுபாங்கோசையைக் கேட்டால் அஸ்அத் பின் ஸராரா (ரலி) அவர்களுக்காக பாவமன்னிப்புத்தேடுவார்கள். ஏன் இவ்வாறு அஸ்அத் அவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புத்தேடவேண்டும் எனக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு முன் அவர்தான் எங்களுக்கு ஜும்ஆ தொழுகை நடத்தினார். பனூ பயாலா கூட்டத்தினர் வசித்தநகீவுல் கல்மாதீ என்ற இடத்தில் எங்களுக்கு ஜும்ஆத் தொழுகை நடத்தினார்.

அறிவிப்பாளர் : கஅப் (ரலி) யின் மகன் அப்துர்ரஹ்மான்

நூற்கள் : அபூதாவூத் 903

மதீனாவுக்கு ஒரு மைல் தொலைவுடைய நகீவுல் கல்மாத் என்ற கிராமத்தில் ஜும்ஆதொழுகை நடத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே இதுநடந்துள்ளது.

இது தவறு என்று இருக்குமானால் அல்லாஹ்வின் மூலம் இது நபியவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு தடுக்கப்பட்டிருக்கும். எனவே கிராமத்திலும் ஜும்ஆ தொழுகை உண்டுஎன்பது இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் செய்தியாகும்.

மதீனாவில் ஜும்ஆ நடந்த பின் அடுத்த படியாக ஜும்ஆ நடந்த இடம் பஹ்ரைனில் உள்ளஜுவாஸா எனும் இடமாகும். அப்துல் கைஸ் கூட்டத்தினரின் பள்ளிவாசலில் ஜும்ஆநடத்தப்பட்டது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 892

அப்துல் கைஸ் கூட்டத்தினர் வசித்து வந்த ஜுவாஸா என்பது சிற்றூரா? பெருநகரமா?

அபூதாவூதில் இடம் பெற்ற மற்றொரு ஹதீஸ் இக்கேள்விக்கு விடையளிக்கிறது. அதுஒரு சிற்றூர் தான் என்று அபூதாவூதின் 902வது அறிவிப்பில் தெளிவாகவேகுறிப்பிடப்பட்டுள்ளது.

சிற்றூரில் ஜும்ஆ நடத்தலாம் என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

இந்தச் சான்றுகளை மேலோட்டமாகப் பார்த்தாலே ஜும்ஆத் தொழுகை நடத்தபெருநகரம் ஒரு நிபந்தனை அல்ல என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால்இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையைப் பாழாக்கும் வகையில் கிராமத்தில் ஜும்ஆஇல்லை என்று மத்ஹபு தீர்ப்பளிக்கின்றது.

இமாமின் மனைவி அழகாக இருக்க வேண்டும்

முகம் அழகானவராக இருக்க வேண்டும். பிறகு அதிகமான குடும்ப பாரம்பரியம்மிக்கவராக இருக்க வேண்டும். அடுத்து சிறந்த குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.பிறகு சிறந்த குரல் வளம் மிக்கவராக இருக்க வேண்டும். பிறகு அழகிய மனைவிஉள்ளவராக இருக்க வேண்டும். பிறகு அதிக பொருளாதாரம் உள்ளவராக இருக்கவேண்டும். அடுத்து அந்தஸ்து உள்ளவராக இருக்க வேண்டும். அடுத்து ஆடைதூய்மையானவராக இருக்க வேண்டும். பிறகு தலை பெரிதானவராக இருக்க வேண்டும்.உறுப்பு சிறிதானவராக இருக்க வேண்டும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 558

தொழுகையில் இமாமத் செய்வதற்கும் அழகிய மனைவி உடையவராக இருக்கவேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு? இவ்வாறு துர்ருல் முக்தார் ஆசிரியர்கூறுவதற்கு உரிய ஆதாரம் என்ன?

இது எப்படி இமாமின் தகுதியில் வருகிறது?

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஹனபி மத்ஹபு பள்ளிவாசலில் ஒருவரை இமாமாகநியமிக்கும் போது இமாமின் மனைவியின் அழகு பற்றி கருத்துக் கேட்பதில்லையே! இமாமின் மனைவி அழகாக இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அந்த முக்கியமானகட்டளையை எல்லா ஜமாஅத்துகளும் மீறுகிறார்களே! இதை மத்ஹபு ஆலிம்கள்கடுமையாகக் கண்டிக்க வேண்டாமா? அத்தகையோர் பள்ளிவாசலை நிர்வகிக்கத்தகுதியற்றவர்கள் என்று பத்வா கொடுக்க வேண்டாமா?

பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் அறியாமையின் காரணமாக இந்தச் சட்டத்தைப்பேணுவதில்லை. இமாமாகச் சேரப் போகும் மவ்லவியாவது இதை வற்புறுத்தவேண்டாமா?

என் மனைவியின் அழகு பற்றி அறியாமல் என்னை நீங்கள் இமாமாகச் சேர்க்கக் கூடாது!எனது மனைவி அழகியாக இருந்தால் மட்டுமே என்னைப் பணியில் சேருங்கள் என்றுவலியுறுத்திக் கூற வேண்டமா?

அடுத்ததாக இமாமத் செய்வதற்கும் தலை பெரிதாக இருப்பதற்கும் என்ன தொடர்பு?

அல்லாஹ் உங்கள் தோற்றத்தைப் பார்க்க மாட்டான். மாறாக உங்கள் உள்ளங்களைத்தான் பார்ப்பான் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4651

அல்லாஹ் உடலமைப்பைப் பார்க்க மாட்டான் என்ற அடிப்படைக்கு மாற்றமாக தலைபெரிதாக இருப்பதையும் உறுப்பு சிறிதாக இருப்பதையும் இமாமத்துக்கு அளவு கோலாகக்குறிப்பிட்டுள்ளனர்.

அப்பட்டமாக அபத்தம் என்று தெரியக் கூடிய, ஆபாசமாகத் தோற்றமளிக்கக் கூடிய,யாராலும் நடைமுறைப்படுத்த முடியாத, வக்காலத்து வாங்க முடியாத,பைத்திக்காரத்தனமான உளறல்கள் தான் மத்ஹபுச் சட்டங்களாக அமைந்துள்ளனஎன்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

மேலும் இமாம் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், சிறந்த பாரம்பரியம்உள்ளவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் துர்ருல் முக்தார் கூறுகின்றது.

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று வர்க்க பேதம் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் துளியும்அனுமதியில்லை. பிற மதங்களில் இருக்கும் வர்ணாசிரமக் கொள்கையைப் போல்,ஜாதியை ஊக்குவிக்கும் வேலையைத் தான் இந்த மத்ஹபுகள் செய்கின்றன.

உங்கள் தலைவரின் தலை உலர்ந்த திராட்சை போல் இருந்தாலும் அவர்அபீசீனியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்டுப்படுங்கள் என்பது நபிமொழி

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 7142

தலை பெரியதாக இருப்பதையும், அழகாக இருப்பதையும், உயர்ந்த குலமாகஇருப்பதையும் இமாமத்துக்கு அளவு கோலாக துர்ருல் முக்தார் கூறுகின்றது.

ஆனால் தலை சுருங்கிப் போய் இருந்தாலும், கருப்பு இனத்தைச் சேர்ந்த அடிமையாகஇருந்தாலும் தலைவருக்குக் கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறுவதன் மூலம் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்துக் கட்டுகின்றார்கள். மாநபிவழிக்கும் மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

குர்ஆனை இழிவு படுத்தும் மத்ஹபுகள்

சின்னி மூக்கு உடைந்து விட்டால் தன்னுடைய நெற்றியிலும், மூக்கிலும் இரத்தத்தைக்கொண்டு ஃபாத்திஹா அத்தியாயத்தை எழுதிக் குணமாகும் எனில் அவ்வாறுகுணமாவதற்காக எழுதுவது கூடும். மூத்திரத்தில் எழுதினால் குணம் கிடைக்கும்என்றால் ஃபாத்திஹா அத்தியாயத்தை மூத்திரத்தில் எழுதுவதும் தப்பில்லை.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 1, பக்கம் 210

திருக்குர்ஆனின் தாய் என்று போற்றப்படும் அல்ஹம்து அத்தியாயத்தை எந்த அளவுமதிக்கிறார்கள் பாருங்கள்!

அல்லாஹ்வின் வேதத்தை மூத்திரத்தில் போடச் சொல்லும் இந்தக் குப்பைகளைத்தூக்கிப் பிடிப்பது அவசியம் தானா? மத்ஹபு ஆதரவாளர்களே சிந்தியுங்கள்.

விபச்சாரத்தைத் தூண்டும் மத்ஹபுகள்

இஸ்லாம் விபச்சாரத்தை மிகக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும்இருக்கிறது.

(அல்குர்ஆன் 17:32)

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள்ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம்ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒருகூட்டம் பார்த்துக் கொண் டிருக்கட்டும்.

(அல்குர்ஆன் 24:2)

திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரி- 2649, 2696)

ஆனால் மத்ஹபுகள் கூறுவதைப் பாருங்கள்.

வாடகை விபச்சாரம்

கூலிக்குப் பிடிக்கப்பட்டவளின் விபச்சாரத்திற்குத் தண்டனை இல்லை.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 4, பக்கம் 29

காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வது தான் கூடாது. காசு கொடுத்துவிட்டால் அதற்குத் தண்டனை இல்லை என்று உண்மையிலேயே அபூஹனீபா இமாம்கூறினார்களா? அல்லது அவர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்களா?

விபச்சாரம் செய்யும் முஸ்லிம் மன்னர்களைக் காப்பாற்றுவதற்காக இவ்வளவுஅசிங்கமாகக் கற்பனை செய்தீர்களா? உலமாக்களே! உங்கள் நெஞ்சைத் தொட்டுஅல்லாஹ்வுக்கு அஞ்சி பதில் சொல்லுங்கள். இத்தகைய சட்டங்களை எழுதியவர்களைஉண்மையிலேயே உங்களால் அங்கீகரிக்க முடிகிறதா?

விபச்சாரியை மனைவி என்று சொன்னால் தண்டனை இல்லை

(விபச்சாரம் செய்யும் போது பிடிபட்டவன் விபச்சாரியை) இது எனது மனைவி அல்லதுஎன்னுடைய அடிமைப் பெண் என்று சொன்னால் அவனுக்குத் தண்டனை இல்லை.இதற்கு சாட்சி சொன்னவர்கள் மீதும் தண்டனை இல்லை.

பஹ்ர் என்ற நூலில் இடம் பெற்ற செய்தி: தன்னுடன் (பிடிபட்ட) அந்தப் பெண்அடுத்தவரின் மனைவியாக இருந்தாலும் சரி! அவன் அவளைத் தன் மனைவி என்றுவாதிட்டால் தண்டனை கிடையாது.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 4, பக்கம் 29

விபச்சாரம் செய்யும் போது மாட்டிக் கொண்டு விட்டால் பிரச்சனையே இல்லை.அவளைத் தன் மனைவி என்று சொல்லி விட்டால் போதும். ஹனபி மத்ஹபின் படிஅவர்களைத் தண்டிக்கக் கூடாது.

இன்றைக்கு லாட்ஜ்களில் விபச்சாரம் செய்து போலீஸில் மாட்டிக் கொள்ளும் போது,ரெடிமேட் தாலியைக் காட்டி, இவள் என் மனைவி என்று கூறுகின்றார்களே! ஹனபிமத்ஹபின் இந்தத் தந்திரத்தைத் தான் அவர்கள் கையாள்கின்றார்களோ என்ற ஐயம்ஏற்படுகின்றது.

ஊமை விபச்சாரத்தில் ஊமையாகும் சட்டம்

ஒருவன் ஓர் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால் இருவரில் எவர் மீதும்தண்டனை இல்லை.

நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம் 5, பக்கம் 20

(ஊமையல்லாத) ஒருவன் ஓர் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்து விட்டால்அல்லது ஓர் ஊமையானவன், (ஊமையல்லாத) ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்துவிட்டால் தண்டனை இல்லை.

தான் விபச்சாரம் செய்ததாக சைகை அல்லது எழுத்து மூலம் ஒப்புக் கொண்டாலும்அல்லது விபச்சாரம் செய்ததாக சாட்சிகள் அவனுக்கு எதிராக சாட்சி சொன்னாலும்விபச்சாரத் தண்டனையினாலோ அல்லது மற்ற தண்டனைகளில் எதனைக் கொண்டும்அவன் தண்டிக்கப்பட மாட்டான்.

ஆனால் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள், "அவனுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.காரணம், அவன் குருடன் அல்லது கைநொண்டியை அல்லது கால்நொண்டியைப்போன்று தண்டனை பெறுவதற்குத் தகுதியானவன் தான்” என்று கூறுகின்றார்கள்.

இமாம் ஷாஃபியின் வாதத்திற்கு நாம் அளிக்கும் பதில் இது தான்.

(ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்கு அவனது வாக்குமூலம் மிக மிக அவசியமானஒன்றாகும்) ஊமை தனது குற்றத்தை சைகை மூலம் தான் ஒப்புக் கொள்கிறான். வாக்குமூலத்திற்குப் பதிலாக வந்து நிற்கும் இந்த சைகையை வைத்துக் கொண்டு இவனைத்தண்டிக்க முடியாது. தண்டனை நிறைவேற்றப் படும் வேளையில் ஒருவன், தான்விபச்சாரம் செய்ததாகத் தெளிவான வாக்குமூலம் அளிப்பது மிகவும் இன்றியமையாதஒன்றாகும்.

இது ஊமையின் சைகையில் பெறப்படுவதில்லை. இவனுடைய சைகையின் மூலம்பெறப்படுவது உடலுறவு என்பது மட்டும் தான். எப்படி, வாய் பேசக் கூடிய ஒருவன் கூடஇதே வார்த்தையைச் சொல்லி விடுவதால் தண்டனை கடமையாகி விடாதோ அதுபோல் ஊமையின் சைகை மூலமும் தண்டனை கடமையாகி விடாது.

இது போலத் தான் ஊமையின் எழுத்துப்பூர்வமான விண்ணப்பம். ஏனெனில் எழுத்து(சரியான கருத்தைத் தெரிவிக்காமல்) தடுமாறும். இவ்வாறு வாக்கு மூலத்திற்குப்பதிலாக வந்து நிற்கும் இந்த எழுத்தைக் கொண்டெல்லாம் தண்டனை வழங்கக் கூடாது.

அது போலவே விபச்சாரம் செய்தான் என்று அவனுக்கு எதிராக சாட்சிகள் சாட்சிசொன்னாலும் ஊமை தண்டிக்கப்பட மாட்டான். ஏனெனில் அந்த ஊமை வாய் திறந்துபேசினால் சட்டப்படி தன்னைப் பிடிக்க முடியாத வாதத்தை எடுத்து வைத்து, தன்னைத்தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் அல்லவா?

அவன் தன்னுடைய மனதில் பட்டதையெல்லாம் சைகை மூலம் வெளிப்படுத்தமுடியாதல்லவா? இதன் பின்னரும் நாம் தண்டனை நிறைவேற்றினால்,தண்டனையிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அவனுக்குஇருந்தும் அவனை நாம் (முறையற்று) தண்டித்ததாக ஆகி விடும்.

குருடர், நொண்டியின் நிலை இது போன்றதல்ல. காரணம், அவர்களுக்குத் தங்களைதண்டனையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

நூல்: மப்ஸுத், பாகம் 9, பக்கம் 98

சிறுமியிடம் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை

உடலுறவுக்குத் தகுதியில்லாத சிறுமியிடம் ஒருவன் விபச்சாரம் செய்து, உள்ளேசெலுத்தி விட்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஏனெனில், முதலாவதாக,விபச்சாரத்திற்கான தண்டனை உறுதி பெறுவது முழுமையான உடலுறவு மூலமாகத்தான். முழுமையான உடலுறவு முழுக்கத் தகுதியான இடத்திலேயே தவிர ஏற்படாது.இரண்டாவதாக, தண்டனை விதியாக்கப் படுவது அச்சுறுத்துவதற்காகவே! அச்சுறுத்தல்என்பது மனித மனம் மையல் கொள்ளும் போது தான் அவசியமாகும். அறிவாளிகளின்மனம், பார்த்தால் ஆசை வராத, உடலுறவுக்குத் தகுதியில்லாத சிறுமியிடம் உடலுறவுகொள்ள விரும்பாது. எனவே சிறுமியிடம் விபச்சாரம் செய்தவனுக்குத் தண்டனைஇல்லை.

நூல்: மப்ஸுத், பாகம் 9, பக்கம் 75

முஸ்லிமல்லாதவருடன் விபச்சாரம் செய்தால்….

அபயமளிக்கப்பட்ட எதிரி நாட்டைச் சேர்ந்தவன் அல்லது இஸ்லாமியக் குடியரசின் கீழ்வாழும் பிற மதத்தினன் முஸ்லிம் பெண்ணிடம் விபச்சாரம் செய்தால் முஸ்லிம்பெண்ணுக்குத் தான் விபச்சாரத் தண்டனை! அவனுக்குக் கிடையாது.

இது இமாம் அபூஹனீஃபாவின் கருத்தாகும்.

இருவரில் எவருக்கும் தண்டனை கிடையாது என்பது இமாம் முஹம்மதின் கருத்தாகும்.

நூல்: மப்ஸுத், பாகம் 9, பக்கம் 55

ஹனபி மத்ஹபினருக்கு விபச்சாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்ஊமைகள், சிறுமிகள், முஸ்லிமல்லாதவர்கள் ஆகியவர்களிடம் போய் செய்துகொள்ளலாம் என்று இந்தச் சட்டங்கள் கூறுகின்றன.

கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு மிகக் கடுமையான குற்றமாகக்கருதும் விபச்சாரத்தைக் கூட மத்ஹபுச் சட்டங்களில் ஹலால் ஆக்கி விட்டார்கள்.மேலும் எப்படியெல்லாம் விபச்சாரம் செய்யலாம் என்று வழியும் சொல்லிக்கொடுக்கின்றார்கள் என்பதையே மேற்கண்ட மத்ஹபுச் சட்டங்கள் காட்டுகின்றன.

பகிரங்கமாக விபச்சாரம் செய்யத் தூண்டும் இந்த மத்ஹபு நூல்களையும் மார்க்கஆதாரங்கள் என்று கூறுவது தான் ஆச்சரியமாக உள்ளது.

ஆபாசக் களஞ்சியம்

ஹஜ் செய்யும் பெண்ணைக் கொச்சைப்படுத்துதல்

இவ்வாறே ஒருத்தி தன் பெண்ணுறுப்பில் கழுதையின் ஆணுறுப்பைத் திணித்தாலோ,அல்லது துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பைத் திணித்தாலோ ஏகோபித்த முடிவின் படிஅவளது ஹஜ் வீணாகி விடும்.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 2, பக்கம் 559

மத்ஹபு நூலாசிரியர்கள் எந்த அளவுக்கு வக்கிர புத்தி கொண்டவர்கள் என்பதற்கு இந்தச்சட்டம் (?) உதாரணமாக அமைந்துள்ளது. புனிதமான ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்களைஇவ்வளவு கேவலமாகவும், அசிங்கமாகவும் சித்தரித்து எழுதியுள்ள இந்த மத்ஹபுச்சட்டங்களை குறைந்த பட்ச மார்க்கப் பற்று உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இந்த ஆபாசக் களஞ்சியங்களைத் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள் என்று கூறி மத்ஹபுஅறிஞர்கள் இதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

சுவனத்தில் ஹோமோ செக்ஸா?

சரியான கருத்துப்படி, சுவனத்தில் ஆணுக்கு ஆண் உறவு கொள்தல் இல்லை. ஏனெனில்அல்லாஹ் அதை அருவருக்கத் தக்கதாக ஆக்கி, அதை அசிங்கம் என்றுகுறிப்பிடுகின்றான். சுவனம் இத்தகைய அசிங்கத்தை விட்டும் தூய்மையாக்கப்பட்டதாகும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 4, பக்கம் 28

நல்லடியார்களுக்குப் பரிசாக வழங்கும் சுவனத்தைப் பற்றிக் கூறும் போதும் இந்தமத்ஹபு நூலாசிரியர்கள் தங்கள் வக்கிர புத்தியை விடவில்லை. சொர்க்கத்தில்ஹோமோ செக்ஸ் உண்டா? என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தஉலகத்தில் அதில் ஆர்வம் உள்ளவர்கள் தான் மறுமையில் அதற்கு அனுமதி உள்ளதா?என்று ஆய்வு செய்வார்கள். மத்ஹபு நூலாசிரியர்களின் அற்பப் புத்தியிலிருந்து சுவனம்கூட தப்பவில்லை.

பெற்ற மகளைப் பெண்டாள வைக்கும் கொடுமை?

தந்தை தனது மகளின் பெண்ணுறுப்பை இச்சையுடன் பார்ப்பதால் அவருடைய மனைவிஅவருக்குக் கண்டிப்பாக தடையாகி விடுவாள். (இனி அவர் தம் மனைவியுடன் சேர்ந்துவாழ முடியாது) இது போலவே மகள், திடுக்கிட்டுத் தனது தந்தையின் படுக்கை நோக்கிநிர்வாணமாகச் சென்று அதனால் தந்தைக்கு இச்சை கிளம்பி விடுமாயின் அவளது தாய்(அதாவது அவரது மனைவி) இவருக்குத் தடையாகி விடுவாள்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 3, பக்கம் 37

மிருகங்களுக்குக் கூட தோன்றாத இந்தச் செயலை, மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில்எழுதி வைத்துள்ளனர். குர்ஆன், ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூடக்கேட்க முடியாத அளவுக்குக் கொச்சையான, அருவருக்கத்தக்க, ஆபாசக்களஞ்சியங்களாகத் திகழும் இந்த மத்ஹபு நூல்களைக் குப்பையில் கொண்டு போய்போட வேண்டாமா?

ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன்தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காகஅவனுக்குத் தண்டனை கொடுக்கப் படும்.

நூல்: இஆனா, பாகம் 4, பக்கம் 143

ஒரு நாய் அல்லது பன்றி, மனித இனத்தைச் சார்ந்த பெண் மீது பாய்ந்து உடலுறவுகொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்று விட்டால் அந்தக் குழந்தை அசுத்தம்தான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன்மீது கடமையாக்கப் பட்டு விட்டன.

நூல்: பத்ஹுல் முயீன், பாகம் 1, பக்கம் 94

ஒருவன் தன் ஆணுறுப்பை ஒரு மிருகத்திடம் அல்லது இறந்து விட்ட பெண்ணிடம்இந்திரியம் வெளிப் படாதவாறு செலுத்தினால் அல்லது மிருகத்தின் (பெண்) உறுப்பைத்தொட்டால் அல்லது அதை முத்தமிட்டு இந்திரியம் வெளிப்பட்டு விட்டால் அல்லதுதன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டவிட்டு, அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைத்தாலும் சரி நமது மத்ஹபின் படி(நோன்பு முறியாது)

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 2, பக்கம் 399

சிறுமியிடம் உடலுறவு கொண்டால்…

பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் உடலுறவு கொள்வதால் குளிப்பு கடமையாகாது.உளூவும் நீங்காது.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 1, பக்கம் 146

மார்க்கக் கடமைகள் விதியாக்கப் பட்ட வயதினன், தனது ஆணுறுப்பை ஒரு சிறுமியின்பெண்ணுறுப்பில் நுழைத்து விடுகின்றான். அந்தச் சிறுமி ஒரு நாள் குழந்தையாகஇருப்பினும் அவ்வாறு நுழைத்ததற்காக அவனுக்கு (விபச்சாரத்திற்கான) தண்டனைவழங்கப்படும்.

அது போல் ஒரு பெண் தனது பெண்ணுறுப்பில் ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பைநுழைத்து விட்டால் அந்த சிறுவன் ஒரு நாள் வயதுப் பையனாக இருப்பினும் அவ்வாறுஅவள் நுழைத்ததற்காக அவளுக்கு விபச்சாரத்திற்காக தண்டனை வழங்கப்படும்.

நூல்: இஆனா, பாகம் 1, பக்கம் 143

இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா?

கற்பனை செய்யலாம் என்றே வைத்துக் கொள்வோம். இந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாகஅமைந்த குர்ஆன் வசனங்கள் யாவை? அல்லது ஹதீஸ்கள் யாவை?

இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்ககாரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இது ஒரு பாவமான காரியம் என்ற கருத்து இதில்அடங்கியிருக்கவில்லை.

இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால்குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?

அடுத்து இவர்கள் குறிப்பிடுவது மிருக ஜாதிக்கு மட்டுமே தோன்றக் கூடிய கற்பனைஎன்று அடித்துக் கூறுகிறோம். தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில்… என்றுஎழுதியுள்ள மிருக ஜாதியினர் இது சாத்தியமா என்று கூட சிந்திக்கவில்லை.

இந்த ஆபாச நூலாசிரியர்கள் நோன்பையும் விட்டு வைக்கவில்லை. நோன்பு வைத்துக்கொண்டு மிருகத்துடன் புணர்ந்தால்… என்றெல்லாம் கற்பனை செய்வதற்கு எப்படித் தான்இவர்களுக்கு மனம் வந்ததோ? நோன்பு வைத்திருப்பவன் நிச்சயம் இப்படியெல்லாம்செய்ய மாட்டான். இது போன்ற தீய எண்ணங்களைத் தடுக்கத் தான் நோன்புகடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பு வைத்துக் கொண்டு இவ்வாறு செய்தால் நோன்பு முறியாது என்று எழுதிவைத்ததன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? இந்தப் பாவத்தைச் சாதாரணமானகாரியமாகச் சித்தரிக்கவில்லையா? நோன்பின் புனிதத்தைப் பாழாக்கவில்லையா?

அப்படியே ஒருவன் நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இந்தச் சட்டத்தை இவர்கள் எந்தஆதாரத்திலிருந்து அறிந்து கொண்டார்கள்?

பைத்தியக்காரத்தனமான உளறல்கள்

ஹவ்வாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டது ஏன்?

மாதவிடாய் ஏற்பட்டதற்கான காரணம், (தடுக்கப்பட்ட) மரத்தில் உள்ளதை ஹவ்வாசாப்பிட்டதால் தான். அதனால் தான் அல்லாஹ்வின் இந்தச் சோதனை துவங்கியது.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 283

தடுக்கப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்டதால் தான் மாதவிடாய் ஏற்பட்டது என்றுஅல்லாஹ்வோ, அவனது தூதரோ எங்காவது கூறியிருக்கின்றார்களா? அதைச்சாப்பிட்டதால் என்ன ஏற்பட்டது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள்அவர்களுக்குத் தெரிந்தன.

(அல்குர்ஆன் 7:19)

வெட்கத் தலங்கள் வெளியாகின என்று தான் அல்லாஹ் கூறுகின்றானே தவிர இதனால்தான் மாதவிடாய் ஏற்பட்டது என்று கூறவில்லை. மேலும் இந்த வசனத்தில் இருவருமேமரத்திலிருந்து சுவைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களது இந்த அற்புதமானகண்டுபிடிப்பின் படி பார்த்தால் ஆதம் (அலை) அவர்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கவேண்டும்.

மத்ஹபு நூல்களை எழுதியவர்கள் குர்ஆன் வசனங்களைக் கூட சரியாக விளங்காமல்இந்தக் கருத்தை எழுதியுள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.

பைத்தியமாக்கும் பல் குச்சி

பல் துலக்கும் குச்சியைக் கொண்டு அகல வாட்டத்தில் பல் துலக்க வேண்டும். நீளவாட்டத்திலும், படுக்கை வாட்டத்திலும் பல் துலக்கக் கூடாது. ஏனெனில் இதுகல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அதைக் முழுக் கையால் பற்றிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் அது மூல நோயைஉருவாக்கி விடும்.

அதை வாயில் வைத்து சப்பக் கூடாது. ஏனெனில் அது பார்வையைக் குருடாக்கி விடும்.

அதைக் கழுவி விட வேண்டும். கழுவவில்லை என்றால் அதை வைத்து ஷைத்தான் பல்துலக்குவான்.

அதை ஒரு ஜான் அளவில் தான் வைத்திருக்க வேண்டும். அதை விட நீளமாகவைத்திருந்தால் ஷைத்தான் அதில் சவாரி செய்வான்.

அதைக் கீழே கிடத்தி விடாது நட்டியே வைக்க வேண்டும். இல்லையேல் பைத்தியம்பிடித்து விடும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 114, 115

இந்த அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு என்ன ஆதாரம்?

வாயில் வந்ததையெல்லாம் எழுதி வைத்து விட்டு, மார்க்கச் சட்டங்கள் என்று கூறும்இந்த மத்ஹபு நூல்களை ஆதரிப்பவர்கள் உண்மையில் சுய நினைவோடு தான்ஆதரிக்கிறார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தச் சட்டங்களை ஆதரிப்போர் உண்மையில் இது சரி என்பதற்காக நிச்சயம் ஆதரிக்கமாட்டார்கள். ஏனென்றால் மார்க்கத்தில் குறைந்த பட்ச அறிவு உள்ளவர்கள் கூட மத்ஹபுநூலாசிரியர்களின் இந்த உளறல்களை, ஆபாசக் கற்பனைகளை சரி என்று வாதிடமாட்டார்கள்.

ஆனால் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லப்படுவோர் இந்தச் சட்டங்களைஆதரிக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம், இதை மக்களிடம் சொன்னால்தங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதைகள் போய் விடும் என்பது தான்.

மத்ஹபுச் சட்டங்கள் கேலிக் கூத்தானவை என்பதை இந்த ஆலிம்கள் விளங்கிவைத்துள்ளார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம், இது குறித்து விவாதம் செய்யவாருங்கள் என்று நாம் அழைக்கும் போது, இவர்கள் அலறி அடித்துக் கொண்டுஓடுகின்றார்கள்.

மத்ஹபுச் சட்டங்கள் பற்றி விவாதம் செய்வோம் என்று நாம் அழைத்தால், பி.ஜே.கருப்பா? சிவப்பா? என்று விவாதம் செய்வோமா? என்று புலம்புவதற்குக் காரணம் இதுதான்.

இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகக் களத்தில் வந்து பேசுவதற்கு யாருக்குத் தான்துணிச்சல் வரும்?

தங்கள் சுயநலனுக்காக இந்த மத்ஹபுகளை ஆதரிக்கும் வறட்டுக் கவுரவம் பிடித்தஆலிம்களின் போதனைகளைக் கேட்டு, மார்க்கம் அறியாத அப்பாவிப் பொது மக்கள்ஏமாந்து விடக் கூடாது. இந்த இதழில் நாம் எழுதியிருக்கும் இந்தச் செய்திகள் பொய்என்று யாரேனும் கூறினால் அவர்களை இது குறித்து விவாதம் செய்வதற்கு அழைத்துவர வேண்டும். அவ்வாறு விவாதத்திற்கு வராமல் நழுவுபவர்களைப் பொய்யர்கள் என்றுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.