குர்ஆனைத் திரித்துக் கூறும் பாக்கியாத் ம தரஸா

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005

குர்ஆனைத் திரித்துக் கூறும் பாக்கியாத் மதரஸா

இம்ரானா விவகாரம் :

இம்ரானா விவகாரத்தில் தேவ்பந்த் மதரஸா வழங்கிய தீர்ப்பு சரி தான் என்று வாதிட்டு,வக்காலத்து வாங்கி ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

இம்ரானா விவகாரம் என்று நாம் குறிப்பிடும் இந்தப் பிரச்சனை ஒரு தனிப்பட்டஇம்ரானாவுக்குரியது மட்டுமல்ல. இம்ரானாவைப் போல் பாதிக்கப்படும் ஒவ்வொருமுஸ்லிம் பெண்ணுக்கும் உரியதாகும். எனவே இதை மனதில் பதிய வைத்துக் கொண்டுமத்ஹபுவாதிகளின் இந்தப் பிரசுரத்தை நாம் ஆராய்வோம்.

இந்தப் பிரசுரத்தில் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா சரி என்று வாதிடுவதற்கு ஆதாரமாகஎடுத்து வைக்கும் வசனம் இது தான்.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! (அல்குர்ஆன் 4:22)

இந்த வசனத்தை மையமாக வைத்துத் தான் தேவ்பந்த் மதரஸா தனது தீர்ப்பைவெளியிட்டுள்ளது.

தங்கள் தீர்ப்பை நியாயப்படுத்த மூன்று விதமான வாதங்களை மத்ஹபுவாதிகள் முன்வைக்கின்றனர்.

முதல் ஆதாரம்

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! (அல்குர்ஆன் 4:22)

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள "மாநகஹ ஆபாவுகும்” என்பது தான் இவர்களின்முக்கியமான அடிப்படை ஆதாரமாகும். அந்த ஒரு ஆதாரத்தின் மீது தான் மற்ற இரண்டுஆதாரங்களையும் எழுப்பி இருக்கின்றார்கள்.

அந்த வசனத்தில் உள்ள அரபி வாசகங்களுக்கு முதலில் அர்த்தம் பார்ப்போம்.

நிகாஹ் என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1. ஒப்பந்தம் 2. உடலுறவு

இந்த வசனத்தில், மாநகஹ ஆபாவுகும் என்ற வாக்கியத்திற்கு, "உங்களுடைய தந்தையர்மணம் முடித்தவர்கள்” (திருமண ஒப்பந்தம் செய்தவர்கள்) என்று பொருள் கொடுக்காமல்"உங்களுடைய தந்தையர் உறவு கொண்டவர்கள்” என்று பொருள் கொள்ள வேண்டும் எனஇந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வசனம் இஸ்லாத்திற்கு முன் அறியாமைக் காலத்தில் இருந்து வந்த ஒரு கெட்டபழக்கத்தை முன்னிட்டு இறக்கப்பட்ட போதிலும் உஸூலே தப்ஸீரின் (வசனம்இறக்கப்பட்ட தனிப்பட்ட சம்பவத்தை மட்டும் கவனிக்காமல் அதில் இடம் பெற்றுள்ளபொதுவான வார்த்தை யைத் தான் கவனிக்க வேண்டும் என்ற) பொது விதியின்அடிப்படையில் நிக்காஹ் என்ற வார்த்தைக்கு உறவு கொள்ளுதல், திருமண ஒப்பந்தம்செய்தல் ஆகிய இரு பொருள்களும் அகராதியிலும் தப்ஸீர்களிலும் வந்துள்ளது.

இவ்வாறு அந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

1. வலா தன்கிஹூ – நீங்கள் மணம் முடிக்காதீர்கள்.

2. மாநகஹ ஆபாவுகும் – உங்கள் தந்தையர் உடலுறவு கொண்டவர்களை.

இப்படித் தான் இந்த வசனத்திற்கு அந்தப் பிரசுரத்தில் ஹனஃபி மத்ஹபினர் பொருள்கொடுக்கச் சொல்கின்றார்கள்.

மேற்கண்ட வசனத்தில் "லா தன்கிஹூ” என்பதிலும் "மாநகஹ” என்பதிலும் "நிகாஹ்”என்ற வேர்ச் சொல்லைக் கொண்ட வார்த்தைகள் தானே இடம் பெற்றுள்ளன.இப்படியிருக்கையில் முந்தையதற்கு "மணம் முடித்தல்” என்ற அர்த்தத்தையும்,இரண்டாவதற்கு "உடலுறவு கொள்ளுதல்” என்றும் ஏன் பொருள் கொடுத்தீர்கள்?

இந்தக் கேள்வியைத் தான் நாம் இவர்களை நோக்கி எழுப்புகின்றோம்.

ஒரே வசனத்தில் இடம் பெறும் முதல் வார்த்தைக்கு "மணம் முடித்தல்” என்றும்,இரண்டாவது வார்த்தைக்கு "உடலுறவு கொள்ளுதல்” என்றும் இரு விதமாகப் பொருள்கொள்ள முடியுமா? பிந்தியதற்கு "உடலுறவு கொள்ளுதல்” என்று பொருள் கொடுத்தால்முந்தியதற்கும் அதே பொருள் தான் கொள்ள வேண்டும்.

லா தன்கிஹூ – நீங்கள் உடலுறவு கொள்ளாதீர்கள்

மாநகஹ ஆபாவுகும் – உங்கள் தந்தையர் உடலுறவு கொண்டவர்களை

என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு பொருள்கொள்ளவில்லை. இவர்கள் மட்டுமல்ல! வேறு யாருமே அந்தப் பொருள் கொள்ளமுடியாது. ஏனென்றால் அவ்வாறு "உங்கள் தந்தையர் உடலுறவு கொண்ட பெண்களுடன்நீங்கள் உடலுறவு கொள்ளாதீர்கள்” என்று பொருள் கொண்டால், இதைத் தவிர மற்றபெண்கள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம் என்ற அபாயகரமான அர்த்தம் தோன்றிவிடும். எனவே இவ்வாறு பொருள் கொள்ள முடியாது.

ஆனால் இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் "மணம் முடித்தல்” என்று பொருள்கொள்ளும் போது ஒன்று, மற்றொன்றுடன் பொருந்திப் போகின்றது.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை நீங்கள் மணக்காதீர்கள்! (அல்குர்ஆன் 4:22)

இதன்படி தந்தை ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து உறவு கொள்ள வேண்டும் என்றுதேவையில்லை. திருமண ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டாலே அப்பெண் மகனுக்குத்தடையாகி விடுவாள் என்ற தெளிவான கருத்து கிடைத்து விடுகின்றது. இந்தக்கருத்துக்கு எதிராக யாரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

உடலுறவு பற்றிய வியாக்கியானம்

இத்துடன் அந்தப் பிரசுரம் நின்று விடவில்லை. உடலுறவின் வகைகளையும் பட்டியல்போட்டுக் காட்டுகின்றது.

உடலுறவு என்று சொல்லும் போது, 1. திருமண அடிப்படையில் ஒரு பெண்ணிடம் உறவுகொள்ளுதல், 2. யூகத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளுதல், 3.விபச்சாரத்தின் அடிப்படையில் உறவு கொள்ளுதல், 4. அடிமை என்ற அடிப்படையில்உறவு கொள்ளுதல் ஆகிய நான்கையும் எடுத்துக் கொள்ளும் என்று வியாக்கியானம்கூறியுள்ளனர்.

இவ்வசனத்தில் வந்துள்ள நிகாஹ் என்ற வார்த்தை திருமண ஒப்பந்தம் செய்வது,ஹலால் அல்லது ஹராமான உறவு கொள்வதையும், மனைவி என்ற யூகத்தின்அடிப்படையில் பிற பெண்ணை உறவு கொள்வதையும், தன் அடிமைப் பெண்ணை உறவுகொள்வதும் ஆக அனைத்தையும் இவ்வசனம் குறிக்கும்.

எனவே தந்தை ஒரு பெண்ணைத் திருமணத்தின் மூலம் உறவு கொண்டிருந்தாலும்அல்லது ஒரு பெண்ணை விபச்சாரம் செய்திருந் தாலும், அடிமையாக்கி உறவுகொண்டிருந்தாலும் அப்பெண் மகனுக்கு ஹராமாகும். மகன் ஒரு பெண்ணைத்திருமணம் முடித்த பின் உறவு கொண்டாலும் அவ்வாறே! இதற்குத் தான் ஃபுகஹாக்கள்திருமண உறவினால் ஏற்படும் திருமணத் தடை என்று குறிப்பிடுகின்றார்கள். மூத்தஸஹாபாக்கள், தாபியீன்களால் கொடுக்கப்பட்ட இதே விளக்கத்தைத் தான் ஹனபிஅறிஞர்கள் தருகின்றார்கள்.

இவ்வாறு தேவ்பந்த் ஃபத்வாவுக்கு வக்காலத்து வாங்கும் அந்தப் பிரசுரம் கூறுகின்றது.

இம்ரானா தன் கணவருடன் சேர்ந்து வாழக் கூடாது என்று வழங்கிய தீர்ப்புக்காக இவர்கள்இழுத்துப் பிடித்துக் கொண்டு வரும் மேற்கண்ட விஷயங்களில் எதிலுமே இம்ரானாவிவகாரம் உள்ளடக்கவில்லை. காரணம், இம்ரானா விவகாரம் நிர்ப்பந்தம் என்றவட்டத்தில் வந்து விடுகின்றது.

மன்னிக்கப்படும் இறை நிராகரிப்பு

நிர்ப்பந்தத்தில் இறை நிராகரிப்பு கூட மன்னிக்கப்பட்டு விடுகின்றது.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில்தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும்உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர. (அல்குர்ஆன் 16:106)

இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும்.ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்குவழங்குகின்றான் எனும் போது இதுவெல்லாம் எம்மாத்திரம்?

பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி,நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக்கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காகஅறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்புமீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும்இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:173)

நிர்ப்பந்தத்தில் நடந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின்வாழ்க்கையைப் பறிப்பது எப்படி நியாயமாகும்? உண்மையில் இது கடைந்தெடுத்தஅநியாயமும், அக்கிரமும் ஆகும்.

புறக்கணிக்கப்படும் ஷாஃபி இமாம்

மத்ஹபுக்காரர்கள் ஒரு விஷயத்தில் ஒன்று சேர்கின்றார்கள் என்றால் அது நம்மைஎதிர்ப்பதில் தான். நம்மை எதிர்ப்பதற்காகத் தான், மத்ஹபுகள் அருட்கொடைஎன்கின்றனர். அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மக்களுக்குக்கிடைத்த அருட் கொடைகள் என்று சொல்லி வந்த இவர்கள் அந்தக் கருத்திலாவதுஉறுதியாக நிற்க வேண்டாமா? அவ்வாறு அவர்கள் உறுதியாக நிற்கவில்லை என்பதற்குஇம்ரானா விவகாரம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தந்தையின் மனைவியிடம் மகன் விபச்சாரம் செய்து விட்டாலோ, அல்லது மகனின்மனைவியிடம் தந்தை விபச்சாரம் செய்து விட்டாலோ, அல்லது ஒருவர் தன்மனைவியின் தாயிடம் விபச்சாரம் செய்து விட்டாலோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். ஆனால் பெண்ணைப் பெற்ற தாயிடம் ஒருவர் விபச்சாரம் செய்தகாரணத்தால் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது மனைவி அவருக்குத்தடையாகி (ஹராமாகி) விட மாட்டாள். அது போல் மகன் தகப்பனின் மனைவியிடம்விபச்சாரம் செய்து விட்டதால் அவள் மகனின் மனைவியாகி விட்டாள் என்றஅடிப்படையில் தகப்பனுக்கு ஹராமாகி விட மாட்டாள். அது போல் மகனின்மனைவியிடம் தகப்பன் விபச்சாரம் செய்து விட்டதால் அவள் இனி மகனுக்குத் தாயாகிவிட்டாள் என்ற அடிப்படையில் மகனுக்கு ஹராமாகி விட மாட்டாள்.

இவ்வாறு இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நான்கு மத்ஹபுகளும் சரியானவை தான் என்று சாதிப்பவர்கள் ஷாஃபி இமாம்அவர்களின் கருத்துப்படி இம்ரானாவுக்கு வாழ்க்கை கொடுத்தால் என்ன?

ஹனஃபி வெறி

இங்கு தான் ஹனஃபி மத்ஹபுக் காரர்களின் மத்ஹபு வெறி வெளிப்படுகின்றது. அக்கினிஜுவாலையாக அவர்களுடைய தலையில் பற்றி எரியும் மத்ஹபு வெறி அவர்களதுகண்களை மறைக்கின்றது. இந்த மத்ஹபு வெறியில் இஸ்லாமிய மார்க்கம், மாற்றாரின்பார்வையில் களங்கப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு ஹனஃபிமத்ஹபுக்காரர்கள் துணிந்து செயல்படுகின்றார்கள்.

இனி விஷயத்திற்கு வருவோம். எப்படிப் பார்த்தாலும் 4:22 வசனத்தில் இடம் பெற்றுள்ள, "நகஹ” என்ற வார்த்தைக்கு, "உடலுறவு கொள்ளுதல்” என்ற பொருள் தான் கொடுக்கவேண்டும் என்ற போலித்தனம் சுத்தமாக அடித்து நொறுக்கப்பட்டு விடுகின்றது.

இரண்டாவது ஆதாரம்

தேவ்பந்த் ஃபத்வாவை ஆதரித்து வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளஇரண்டாவது ஆதாரம் இது தான்.

அல்லாஹ் அனுமதித்திருக்கும் (ஹலாலான) திருமணம் என்ற அடிப்படையில் தந்தைஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதின் மூலமே ஒரு பெண் மகனுக்கு ஹராமாகிவிடும் போது, தடை செய்யப்பட்ட விபச்சாரத்தின் மூலம் தந்தை ஒரு பெண்ணுடன்சேர்ந்து விட்டால் அப்பெண் அவரது மகனுக்குப் பன்மடங்கு தடையாகி விடுகின்றாள்.

இது ஹனஃபி மத்ஹபுக்காரர்கள் பிதற்றுகின்ற இரண்டாவது ஆதாரம் ஆகும்.

நிர்ப்பந்தத்தில் நடந்த ஒரு விஷயத்தை இதில் கொண்டு வந்து சேர்க்கக் கூடாது என்றகருத்தில் ஏற்கனவே நாம் கூறிய விஷயங்கள் இதற்கும் பொருந்தும்.

ஆனால் இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தந்தை மணமுடித்த பெண்களை மகன் மணமுடிக்கக் கூடாது என்றும், மகன்மணமுடித்த பெண்களைத் தந்தை மணமுடிக்கக் கூடாது என்றும் அல்லாஹ் தடுத்துவிட்டான். அதனால் நாம் தடையாக எடுத்துக் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் சட்டம் குறித்த விஷயங்களில், அவன் இட்ட கட்டளைப் படி நாம்கட்டுப்பட்டு நடப்பது தான் நமது கடமையே தவிர, இதற்கே இப்படி என்றால், அதற்குஎப்படி இருக்கும்? என்று சொல்லி, நாமாக இணைச் சட்டத்தை உருவாக்குவதற்கு நமக்குஉரிமை இல்லை. இது அல்லாஹ்வுக்கே அறிவுரை சொல்லும் அதிகப் பிரசங்கித் தனம்என்பதை இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் இதிலும் போலியான வாதத்தைத் தான் வைக்கிறார்கள் என்பதற்கு மற்றொருஉதாரணத்தையும் நாம் கூறலாம்.

விபச்சாரம் செய்தால் கசையடி அல்லது கல்லால் அடித்துக் கொல்லுதல் ஆகியதண்டனைகள் என்று மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்ஹபு நூற்களில்,சிறுமியிடம் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை, ஏனென்றால் முழுமையானஉடலுறவு நடைபெறவில்லை என்பதால் தண்டனை வழங்கக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.

இதற்கே இப்படி என்றால் அதற்கு எப்படி? என்று ஹனஃபி மத்ஹபினர் வைக்கும்வாதப்படி, பருவ வயதை அடைந்த பெண்ணிடம் விபச்சாரம் செய்தாலே தண்டனைகொடுக்கும் போது, சிறுமியிடம் விபச்சாரம் செய்தால் அதை விடப் பன்மடங்குதண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் மத்ஹபு நூல்கள்அவ்வாறு கூறவில்லை.

அதே போல் ஊமைப் பெண்ணிடம் விபச்சாரம் செய்தால் அவனுக்கும் தண்டனைஇல்லை, ஏனென்றால் ஊமையால் என்ன நடந்தது என்று சொல்ல முடியாது என்றும்ஹனபி மத்ஹபு கூறுகின்றது.

எந்தக் குறையும் இல்லாத பெண்ணுடன் விபச்சாரம் செய்தாலே தண்டனைநிறைவேற்றும் போது, ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் கூடுதல் தண்டனைகொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கி, தண்டனையிலிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்லிக் கொடுக்கின்றார்கள். (விபச்சாரத்தைத் தூண்டும் இந்த மத்ஹபுச்சட்டங்கள் குறித்து தனியாக விளக்கப்பட்டுள்ளது.)

எனவே, அதற்கே இப்படி என்றால் இதற்கு எப்படி? என்று இவர்கள் கூறுவதும் பசப்புவாதம் தான் என்பது நிரூபணமாகின்றது.

மூன்றாவது ஆதாரம்

4:22 வசனத்தில் "தந்தை மணமுடித்த பெண்களை மணம் முடிக்காதீர்கள்” என்று சொல்லிநிறுத்தி விடாமல், இது வெட்கக் கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்என்று மூன்று தீய தன்மைகளைக் கொண்டு வர்ணிப்பதால் செயல் ரீதியிலானவிபச்சாரத்தைத் தான் இது குறிக்குமே தவிர வார்த்தை ரீதியிலான திருமணஒப்பந்தத்தை இது ஒரு போதும் குறிக்காது.

இது தான் அவர்கள் கூறும் மூன்றாவது ஆதாரமாகும்.

இதுவும் ஒரு விநோதமான வாதமாகும்.

வெட்கக்கேடானதும், வெறுப்பிற் குரியதும், கெட்ட வழியுமாகும்… என்ற வர்ணனைகள்எல்லாம் செயலைத் தான் குறிக்கும்; சொல்லைக் குறிக்காது என்ற ஒரு புதுமையானவாதத்தை முன் வைக்கின்றனர்.

வெட்கக் கேடானது என்பதற்கு "ஃபாஹிஷாத்” என்ற வார்த்தையை அல்லாஹ்பயன்படுத்துகின்றான்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் எனவிரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு.அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 24:19)

இந்த வசனத்தில் அவதூறைக் குறிப்பதற்கும் இதே வார்த்தையைத் தான்பயன்படுத்துகின்றான்.

யூதர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி, "அபுல் காஸிமே! அஸ்ஸாமு அலைக்க (உங்கள்மீது மரணம் உண்டாகட்டும்)” என்று சொன்னதும், நபி (ஸல்) அவர்கள், "வ அலைக்கும்(உங்கள் மீது தான்)” என்று சொன்னார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், "உங்கள் மீதுமரணமும் இழிவும் உண்டாகட்டும்” என்று கூறியதும், நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே!நீ ஃபாஹிஷாவாக (கெட்ட பெண்ணாக) ஆகி விடாதே!” என்று குறிப்பிடுகின்றார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: முஸ்லிம் 4028

இங்கு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள்இத்தகைய வார்த்தையைக் கூறுகின்றார்கள்.

எனவே ஃபாஹிஷாத் என்ற வார்த்தை செயலை மட்டும் குறிப்பதல்ல; சொல்லையும்குறிக்கும் என்று விளங்கிக் கொள்ளலாம்.

வெறுப்பிற்குரியது என்பதைக் குறிக்க, "மக்தன்” என்ற வார்த்தையை அல்லாஹ்பயன்படுத்தியிருக்கிறான். இதற்கு கோபம், வெறுப்பு என்ற பொருட்கள் உள்ளன. இதேவார்த்தை வேறு சில வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில்தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும்கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொருஉள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

(அல்குர்ஆன் 40:33)

நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக் குரியது.

(அல்குர்ஆன் 61:3)

இந்த வசனங்களில் எல்லாம் சொல்லுக்குத் தான் "மக்தன்” என்ற வார்த்தைபயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர செயலுக்குப் பயன்படுத்தப் படவில்லை.

எனவே பிரசுரக்காரர்களின் இந்த வாதமும் பித்தலாட்டமாக ஆகி விட்டது.

இவர்களது வாதப்படி செயலுக்குத் தான், வெட்கக் கேடானது, கோபத்திற் குரியது போன்றவார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒருவன் அந்நியப் பெண்ணை நோக்கிநான் உன்னுடன் உடலுறவு கொள்ளப் போகின்றேன் என்று சொன்னால் அது வெட்கக்கேடானது (ஃபாஹிஷத்) ஆகாதா? கோபத்துக்குரியது (மக்தன்) ஆகாதா?

நிச்சயமாக அதுவும் வெறுப்பிற்குரியதும், கோபத்திற்குரியதும் தான்.

எனவே திருக்குர்ஆனுக்கு மாற்றமாக தேவ்பந்த் ஆலிம்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாகஇவர்கள் எடுத்து வைத்த மூன்றாவது வாதமும் தவிடு பொடியாகி விடுன்றது.

மத்ஹபை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, திருக்குர்ஆனின் வசனங்களைத்திரித்துக் கூறும் மாபாதகச் செயலைச் செய்வதற்குக் கூட இவர்கள் துணிந்து விட்டார்கள்என்பதையே இந்தப் பிரசுரம் காட்டுகின்றது.