வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது?

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது?

9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள், இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது?

அக்தர்

பதில் :

பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும் போது யார் யார் உயிருடன் இருந்தனர் என்ற முழு விபரமும் சொல்ல வேண்டும். அதற்கேற்ப சட்டம் மாறுபடும்.

9600 சதுர அடிக்கு சொந்தக்காரர் இறக்கும் போது அவருக்கு தாயோ, தந்தையோ, கணவனோ, மனைவியோ இல்லாமல் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் மட்டும் இருந்தால் எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர வேறு வாரிசுகள் இருந்தால் இந்தத் தீர்ப்பு பொருந்தாது.

இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் குழந்தைக்கு இரண்டு பங்கும் பெண் குழந்தைக்கு ஒரு பங்கும் உண்டு என குர்ஆன் கூறுகின்றது.

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

திருக்குர்ஆன் 4:11

மூன்று ஆண்கள் இருப்பதால் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் ஆண்களுக்கு ஆறு பங்குகள் உண்டு. இரண்டு பெண்கள் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்கு என்ற அடிப்படையில் பெண்களுக்கு இரண்டு பங்குகள் உண்டு. ஆக மொத்தம் எட்டு பங்குகளாக சொத்து பிரிக்கப்பட வேண்டும்.

9600 சதுர அடியை எட்டு பங்குகளாக வைத்தால் ஒரு பங்கு என்பது 1200 சதுர அடியாகும். எனவே பெண்கள் ஒவ்வொருவருக்கும் 1200 சதுர அடி இடம் கிடைக்கும். ஆண்களில் ஒவ்வொருவருக்கும் 2400 சதுர அடி இடம் கிடைக்கும்.

08.03.2011. 10:04 AM

Leave a Reply