குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?

? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாது, சில கணக்குகள் ஃபிக்ஹைக் கொண்டு தான் பிரிக்க முடியும் என்று ஓர் ஆலிம் கூறுகின்றார். இது சரியா?

பதில்:

! இதன் மூலம் அவர் என்ன கூற விரும்புகின்றார்?

குர்ஆன் ஹதீஸை விட ஃபிக்ஹ் தான் உயர்ந்தது என்று கூறப் போகின்றாரா?

அல்லது குர்ஆன் ஹதீஸில் இல்லாதது ஃபிக்ஹில் தான் உள்ளது என்று கூறுகின்றாரா?

இந்த இரண்டில் எதைக் கூறினாலும் அவருக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தான் அர்த்தம்!

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு பாகப் பிரிவினை செய்ய முடியாது, ஃபிக்ஹ் மூலம் தான் முடியும் என்றால் ஃபிக்ஹ் சட்டங்களை எழுதியவர்களுக்கு வஹீ வந்து அதன் மூலம் அந்தச் சட்டங்களை இயற்றினார்களா?

இவ்வாறு கூறுவதும், நம்புவதும் தெளிவான இறை மறுப்பாகும். மத்ஹபுகளை நிலைநாட்டுவதற்காக இது போன்ற குஃப்ரான கருத்துக்களைக் கூறுகின்றனர். குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்து எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

23.12.2014. 20:10 PM

Leave a Reply