அபூஹனீஃபாவிற்கு வஹீவந்ததா?

ஏகத்துவம் 2005 டிசம்பர்

அபூஹனீஃபாவிற்கு வஹீவந்ததா?

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவனைப் பரிபாலித்துவருகின்றான். அவனை மனம் போன போக்கிலே போகவிடாமல் அவன் முறையாக வாழ்வதற்கான நேர்வழியைக்காட்டுவதற்கு மனிதர்களிலிருந்தே தூதர்களையும், வேதங்களையும் அனுப்பி வைத்தான்

அத்தூதர்களின் வரிசையில் இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி அவர்களோடு தூதுத்துவத்தை முடித்துஇஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்தினான்.

அவர்களுக்குப் பின் இந்தப் பொறுப்பை கற்றுணர்ந்தஅறிஞர்களுக்குக் கடமையாக்கினான். அவ்வாறு மார்க்கப் பணிசெய்து வந்த நல்லவர்கள், மகான்கள், இமாம்கள் ஆகியசான்றோர்களை அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் இறைத்தூதர்களின் நிலைக்குக் கொண்டு சென்றனர்.

சிலர் அவர்களை நபிமார்களின் அந்தஸ்திற்கு உயர்த்தினார்கள்என்றால் இன்னும் சிலர், படைத்த ரப்புல் ஆலமீன் நிலைக்கேகொண்டு சென்று விட்டனர். அது மட்டுமல்லாது அவர்கள் மீதுஇல்லாததையும் பொல்லாததையும் எழுதவும் பேசவும்துணிந்து விட்டனர்.

அந்த வகையில் மத்ஹப் பிரியர்கள்பிரசித்திப் பெற்ற நான்குஇமாம்களில் ஹனஃபி மத்ஹபின் இமாம் அபூஹனீஃபாஅவர்களை மிகவும் அதிகமாகத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றனர். அவருக்கு மரியாதை செய்வதாகஎண்ணிக் கொண்டு அவர் பெயரால் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும்மாற்றமான கதைகளையும் புனைமூட்டை களையும்அவிழ்த்து விடுகின்றனர்.

இமாமுல் அஃலம்

மற்ற இமாம்களைச் சொல்லும் போது இமாம் என்றுவெறுமனே தான் கூறுகிறார்கள். ஆனால் அபூ ஹனீஃபாவைப்பற்றிக் கூறும் போது இமாமுல் அஃலம் (மகத்தான இமாம்) எனறு கூறுகிறார்கள். மற்ற இமாம்களுக்கு இந்தவார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. "எல்லா இமாம்களும்சமமானவர்களே, அவர்களில் யாரை வேண்டுமானாலும்பின்பற்றலாம்” என்று வாயளவில் கூறிக் கொண்டுவருகிறார்கள். ஆனால்இமாம் அபூஹனீஃபாவை மற்றஇமாம்களைக் காட்டிலும் அதிகம் சிறப்பிக்கிறார்கள். இமாம்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றார்கள். அவர்மீது கொண்ட வெறியால் அல்லாஹ்வின் அந்தஸ்திற்கும்அவனுடைய தூதரின் அந்தஸ்திற்கும் அவரைக் கொண்டுசெல்கின்ற வகையில் பொய்களைக் கூறுகின்றார்கள்.

இறைத் தூதருக்குப் பிறகும் வஹீ வருவதாக இவர்கள் வாக்குமூலம் கொடுக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகுஅல்லாஹ் எவருடனும் பேச மாட்டான் என்பது இஸ்லாமியமார்க்கத்தின் முக்கியக் கொள்கைக் கோட்பாடாகும். ஆனால்அபூ ஹனீஃபாவிற்கு வஹீ வந்ததாக இந்த ஆலிம்கள் அழுத்தம்திருத்தமாக, ஆணித்தரமாக நம்புகின்றனர்.

இதோ அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

அவருக்கென்று ஒரு பிரபலமான சம்பவம் உண்டு. அது, அவர்கடைசியாக செய்த ஹஜ்ஜின் போது கஃபாவின் இரண்டு தூணுக்கிடையில் ஓர் இரவில்நின்றார்களாம். இடது காலை வலதுகால் மேல் வைத்து வலது காலில் நின்று அதாவதுஒற்றைக்காலில் நின்று குர்ஆனில் சரிபாதியை ஓதிதொழுதார்களாம். பிறகு ருகூஃ, சுஜூதுசெய்தார்களாம். பிறகுவலது காலைஇடது காலின் மீது வைத்துக் கொண்டு இடதுஒற்றைக் காலில் நின்றுமுழுக் குர்ஆனையும் ஓதி ஒரே இரவில்தொழுது முடித்து விட்டார்களாம். பிறகு ஸலாம் கொடுத்துமுடித்தவுடன் அழுதார்களாம்.

மேலும் தனது ரட்சகன் அல்லாஹ்விடம் உரையாடல்புரிந்தார்களாம். அப்போது அவர்கள் "இறைவா! இந்தப்பலவீனமான உன்னுடைய அடியான் உன்னைஅடி பணியும்முறையில் அடி பணியவில்லை என்றாலும் அவன் உன்னைஅறிய வேண்டிய முறையில் அறிந்து வைத்துள்ளான். எனவேஅவன் பரிபூர்ணமாக விளங்கி வைத்ததற்காக நீ அவனின்குறைகளை நிறைவு செய்வாயாக!” என்று கூறினார்களாம். அப்போதுஇறை இல்லமான கஃபாவின் ஒரு புறத்திலிருந்து"அபூஹனீஃபாவே நீ என்னை முழுமையாக அறிந்துகொண்டாய்! பணிவிடை செய்தாய்! அழகான முறையில்பணிவிடை செய்தாய்! உன்னையும் கியாமத் நாள் வரைஉன்னைப் பின்பற்றுகின்ற வர்களையும் நான் மன்னித்துவிட்டேன் என்று அசரீரி வந்ததாம். அதாவது வஹீ வந்தது.

இச்சம்பவம் துர்ருல் முக்தாரில்பாகம் 1, பக்கம் 51, 52ல்கூறப்பட்டுள்ளது.

நி ஒற்றைக் காலில் நின்று தொழுவதற்கு அனுமதிஉள்ளதா?

நி ஒரே இரவில் முழுக் குர்ஆன் ஓதித் தொழுவதுசாத்தியமா?

நி அபூஹனீஃபா அல்லாஹ்வைமுழுமையாக அறிந்துகொண்டார்களா?

நி கியாமத் நாள் வரையுள்ள ஹனபி மத்ஹபினர்அனைவரும் முன் கூட்டியே பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களா?

என்ற கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

இவ்வாறு அல்லாஹ் அசரீரியிலோ அல்லது மற்றவகையிலோ நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு மற்றவர்களிடம்பேசுவானா? இது பற்றி, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பார்ப்போம்.

வஹீ என்றால் என்ன?

வஹீ என்றால் அறிவித்தல் என்பதே பொருள். இஸ்லாமியவழக்கில் வஹீ என்பது இறைவன் தான் கூற விரும்பும்செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பதுபொருளாகும்

இஸ்லாம் நிறைவு பெற்றதுடன் இறைவனின் இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள் இறந்ததோடு இந்த வஹீ நின்று விட்டது. நுபுவ்வத் நிறைவு பெற்று விட்டதால் இனிமேல் வஹீ என்றஇறைச்செய்தி யாருக்கும் வரவே வராது. அதிலும் மார்க்கசம்பந்தமான காரியங்களிலும் அதனுடைய சட்ட சம்பந்தமானகாரியங்களிலும் இறைவன் என்னிடத்தில் உரையாடி னான்,அசரீரியில் சொன்னான் என்று யார் கூறினாலும் அது மாபெரும்புருடாவாகும். காரணம் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவுசெய்து விட்டேன்” என்று இறைவன் குர்ஆனில் கூறுவதன்மூலம் இனி எவரிடமும்அவன் பேச மாட்டான் என்பதைஉணர்த்தியுள்ளான். மார்க்க சம்பந்தமான சட்ட திட்டங்களில்நபி (ஸல்) அவர்களுக்குப் பின் யாரிடமும்பேச மாட்டான்என்று முடிவு செய்து விட்டான்.

முபஷ்ஷராத் என்ற நல்ல மூமின்களின் கனவின் மூலம் சிலமுன்னறிவிப்புகளை அறிவிப்பானே தவிர வேறு எதனையும்யாரிடமும் அறிவிக்க மாட்டான். இந்த முன்னறிவிப்புகள் கூடகனவின் மூலம் சொல்வானே தவிர நேரடியாக நாம்உரையாடுவதைப் போன்றுசொல்ல மாட்டான்.

அல்லாஹ் நேரடியாக ஒரு நபியிடம் பேசியிருக்கிறான்என்றால் அதற்குமூஸா நபியை உதாரணமாக கூறலாம். அனைத்து நபிமார்களிடத்தில் கூட அல்லாஹ் இவ்வாறுபேசியதில்லை. சில நபிமார்களுக்கே கிடைக்காத இந்த வாய்ப்புசாதாரண மனிதரான அபூஹனீஃபாவிற்குக் கிடைத்தது என்றுசொன்னால் நபிமார்களை விட அபூஹனீஃபா உயர்ந்தவர்என்றாகி விடும்.

இந்தக் கருத்தை சாதாரண அறிவு உள்ள எந்த முஸ்லிமும்ஏற்க மாட்டான். நபித்துவமும் சகல விதமான வஹீயும் நின்றுவிட்டது என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

வஹீ (இறைச்செய்தி) நின்று விட்டது

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்காவது வஹீ வரவேண்டும் என்றால் நபித் தோழர்களுக்குத் தான்வர வேண்டும். ஆனால் அவர்களே வஹீ வரவில்லை என்பதை அறிவித்துவிட்டார்கள்.

அபூபக்ர் (ரலீ) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகுஉமர் (ரலீ) அவர்களை நோக்கி, "நாம் இருவரும் உம்மு அய்மன்(ரலீ) அம்மையாரைச் சந்தித்து வருவோம்” என்றார்கள். காரணம்நபி (ஸல்) அவர்கள் அந்த அம்மையாரை அடிக்கடி சந்தித்துவருபவர்களாக இருந்தார்கள்.

அது போல அவரை அவ்விருவரும் சந்திக்கச் சென்ற போதுஅந்த அம்மணி அவ்விருவரையும் பார்த்து அழத்துவங்கினார்கள். அவ்விருவரும் "ஏன் அழுகிறீர்கள்? என்னகாரணம்? அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ்விடத்தில்நன்மைகள் தானே கிடைக்கும்” என்றார்கள்.

அதற்கு அவர் "அல்லாஹ்விடத்தில் நபி (ஸல்) அவர்களுக்குநன்மையே கிடைக்கும் என்பதை நான் அறிவேன். நான் அதுகிடைக்காது என்பதற்காக அழவில்லை. என்றாலும்வானிலிருந்து வரும் வல்லவன் அல்லாஹ்வின் வஹீ(இறைச்செய்தி) நின்று விட்டதேஎன்பதற்காக அழுகிறேன்” என்று சொன்னார்கள். அவ்வம்மையார் அவ்விருவரையும் அழவைத்து விட்டார்கள். எனவே அவரோடு அவ்விருவரும் அழத்துவங்கினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ)

நூல்: முஸ்லிம் 4492

உமர் பின் கத்தாப் அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள்வஹீயின்வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள்அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது(நபியவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்றுபோய் விட்டது.இப்போது நாம் உங்களைப் பிடித்துத்தண்டிப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்குவெளிப்படையாக தெரிபவற்றைக் கொண்டு தான்.

ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்து கின்றாரோஅவரை நம்பிக்கைக் குரியவராக்கி, கவுரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கில் எடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர்நம்மிடம் தீமையை வெளிப் படுத்துகிறோரோ அவரைக்குறித்து நாம் திருப்தியுடன் இருக்க மாட்டோம். தமதுஅந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே!

நூல்: புகாரி 2641

"நபித்துவத்தில் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) தவிரவேறெதுவும் மீதியிருக்கவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். அப்போதுமக்கள், "நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "நல்ல (உண்மையான) கனவு” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6990)

"நபித்துவம் சென்று விட்டது. (முபஷ்ஷிராத்) நற்செய்திகூறுகின்றவை எஞ்சியுள்ளன” என நபி (ஸல்) கூற நான்கேட்டேன் என உம்மு குர்ஸ் (ரலி) கூறினார்கள்.

(நூல்கள்: இப்னு மாஜா 3886, அஹ்மத் 25890, தாரமீ 2045)

ரிஸாலத்தும், நுபுவ்வத்தும் முடிந்து விட்டது. எனக்குப்பின்னால் ரசூலும் இல்லை, நபியும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் மக்களுக்கு இது கஷ்டமாகஇருந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள், ஆனால் முபஷ்ஷிராத்(சுபச்செய்திகள்) உண்டு என்று கூறினார்கள் என இதே செய்திதிர்மிதீயில் 2198வது ஹதீஸாகப் பதியப்பட்டுள்ளது.

நுபுவ்வத் என்னும் இறை வெளிப்பாடு இரண்டு அம்சங்களைக்கொண்டதாகும். முதலாவது, இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கை களையும் அதன் சட்ட திட்டங்களையும்உள்ளடக்கியதாகும்.

இரண்டாவது, இனி நடக்க இருப்பதைப் பற்றி முன்னறிவிப்புசெய்வதாகும். இந்த இரண்டு விஷயங்களையே எல்லாநபிமார்களும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்குவிளக்கினார்கள். மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்பதையும்வருங்காலத்தில் நடக்கவுள்ளவற்றில் சிலவற்றைமுன்னறிவிப்பு செய்யும் வகையிலும்அவர்களின் போதனைகள் அமைந்துள்ளன என்பதை நபிமார்களின் போதனைகளைஆராயும் போது நாம் அறியலாம்.

நுபுவ்வத்துடைய இந்த இரண்டு அம்சங்களில் எந்த அம்சம்பற்றி நபி (ஸல்) அவர்கள் இங்கே கூறியிருப்பார்கள் என்பதைநாம் முடிவு செய்தாக வேண்டும். முதல் அம்சத்தைப்பற்றிஇங்கே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கவே முடியாது. ஏனெனில் சட்ட திட்டங்களும் அடிப்படைக் கொள்கைகளும் நபி(ஸல்) அவர்களால் விளக்கப்பட்டு விட்டன.அதில் எந்தக்குறையும் வைக்கப்படவில்லை.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டேன். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனமே இதற்குப் போதியசான்றாகும். இறைவனால் நபி (ஸல்) அவர்கள் வழியாகமார்க்கம் முழுமைப்படுத்தப் பட்ட பின் எவரது கனவின்மூலமும் எந்தச் சட்டத்தையும், மார்க்கச் செய்தியும் கூறவேண்டிய அவசியம் இல்லை.

கனவுகள் மூலமும் மனிதன் இறைச் சட்டங்களைப் பெறமுடியும் என்றால்மார்க்கம் முழுமையாகி விட்டது என்பதற்குஅர்த்தம் இல்லாது போய்விடும். இன்னும் சொல்வதென்றால்நபிமார்கள் அனுப்பப்படவேண்டிய அவசியமும் இல்லைஎன்றாகி விடும். கனவுகள் மூலமே எல்லாச் சட்டதிட்டங்களையும் இறைவன் மனிதர்களுக்கு அறிவித்துவிடுவான்.

எனவே, "கனவில் நுபுவ்வத்துடைய அம்சம் உள்ளது’ என்பதற்குகனவில் சட்ட திட்டங்களைப் பெறலாம், கனவில்காட்டப்படுவது போல் நடந்து கொள்ளலாம் என்று அர்த்தம்செய்து கொள்ள முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிவிடுகிறது.

அப்படியானால் நுபுவ்வத்துடைய அம்சம் என்பதற்குஇரண்டாவது விளக்கத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு நாளை வரக் கூடியசெல்வம், குழந்தைகள், ஆபத்துகள், அனுகூலங்கள் ஆகியவற்றில் சிலவற்றைஇறைவன் சிலருக்குக் கனவின் மூலமாக காட்டிக் கொடுக்கக்கூடும் என்பதே அதன் கருத்தாக இருக்க முடியும். இதைத்தெளிவாகவே கூறக் கூடிய சான்றுகளையும் நாம் காணமுடிகின்றது.

"நுபுவ்வத்தில் நற்செய்தி கூறக்கூடியவைகளைத் தவிர வேறுஎதுவும்எஞ்சியிருக்கவில்லை” என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், "அல்லாஹ்வின்தூதரே! நற்செய்தி கூறக் கூடியவை என்றால் என்ன?” என்றுகேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நல்ல கனவுகள்” என்றார்கள்.

நுபுவ்வத்தை இரண்டு அம்சமாக நபி (ஸல்) அவர்களே இங்கேபிரித்துக்காட்டி விட்டு நற்செய்தி கூறக்கூடியவைகளைத் தவிரமற்றவை, அதாவது மார்க்கம் தொடர்பாகக் கூறும் இறைச்செய்திகள் முடிந்து விட்டன என்று திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார்கள். இந்த ஹதீஸைச் சிந்திக்கும் போது இதைநன்றாகவிளங்கலாம்.

ஆனால் அபூஹனீஃபாவுக்கு வஹீ வந்ததாக இந்தக் கதையைப்புனைந்தவர் எந்த அளவுக்கு மத்ஹப் வெறி தலைக்குஏறியிருந்தால் இவ்வாறு அல்லாஹ்வின் மீதே இட்டுக்கட்டிக்கூறியிருப்பார்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுபவன்அல்லது அவனுடைய வசனங்களை பொய்யெனக்கருதுபவனை விட அநியாயக்காரன் வேறு யார்? அநியாயக்காரர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன்6:21)

இது போன்று அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டப்பட்டபொய்களை நம்பாமல்தூய ஈமானுடன் மரணிக்கும்பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!