ஏகத்துவம் பிப்ரவரி 2007
ஈராக் போர்
வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக்கை பார்க்கும் ஆரபியா
1991ஆம் ஆண்டு "அப்பன் புஷ்’ இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் ஆண்டு "மகன் புஷ்’ ஆக்கிரமித்தான்.
சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் இராக்கில் நுழைந்தன.
ஓர் இறையாண்மை மிக்க அரபு நாட்டிற்குள் படையெடுத்துச் செல்ல வேண்டுமாயின், அதுவும் நியாயமான காரணத்தை முன்னிட்டுச் செல்ல வேண்டுமாயின் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி பெற்ற பின்னர் தான் செல்ல வேண்டும்.
ஆனால் சாத்தானிய சதிகாரன் ஜார்ஜ் புஷ் அத்தகைய அனுமதி எதுவும் பெறாமலேயே அத்து மீறி இராக்கில் நுழைந்தான். உள்ளே நுழைந்த பின் இந்த அநியாயக்காரன் செய்த அக்கிரமங்களைக் கொஞ்சம் பட்டியலிடுவோம்.
உயிர்க் கொல்லி ஆயுதங்களை சதாம் வைத்திருக்கின்றார் என்று குற்றம் சுமத்தி இராக்கில் நுழைந்த ஜார்ஜ் புஷ் அங்கு சுமார் ஆறரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து, சதாமின் ஆட்சியையும் கவிழ்த்து, அவரைச் சிறை பிடிக்கின்றான்.
ஆனால் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதையும் காண முடிந்ததா? இல்லை! இனியும் காணப் போவதில்லை.
பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்தது ஏன்? என்று கேட்கும் உலக மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக ஒரு பொம்மை நீதிமன்றத்தை புஷ் உருவாக்குகின்றான்.
போரில் கைது செய்யப் படுபவர்களை ஆக்கிரமிப்பு அரசு விசாரிக்கக் கூடாது; சர்வதேச நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளையெல்லாம் மதிக்காமல் புஷ் நியமித்த இந்தப் பொம்மை நீதிமன்றம் சதாமை விசாரிக்கின்றது.
சதாம் ஹுசைனைப் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச நீதி மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள நீதித் துறையினரும், மனித உரிமை அமைப்பினரும் விடுத்த வேண்டுகோளை உதாசீனம் செய்து விட்டு, பொம்மை நீதிமன்றத்திடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
சதாமை விசாரிக்கும் பொம்மை நீதிமன்றம் செல்ல வேண்டிய திசையையும், சொல்ல வேண்டிய தீர்ப்பையும் ஜார்ஜ் புஷ்ஷே தீர்மானிக்கின்றான்.
சதாமின் வழக்கறிஞரான அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ரம்ஸி கிளார்க் என்பவர் இந்த அநியாயத்திற்கு எதிராக வாதாடிய போது அவரை நீதிமன்றத்திற்கு வெளியே தூக்கி வீசினான்.
இந்த நீதிமன்றத்தில் முதன் முதலில் பொறுப்பேற்ற தலைமை நீதிபதி அரசியல் நிர்ப்பந்தம் என்று பகிரங்கமாகக் காரணம் கூறி பதவியை விட்டு விலகினார். நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதியும் பொறுப்பேற்க வரவில்லை. இத்தனைக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, புஷ்ஷின் கைப்பாவையானான்.
சதாமுக்காக வாதாட வந்த வழக்கறிஞர்களில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தன் வழக்கறிஞரைச் சந்திப்பதற்குக் கூட சதாம் ஹுசைனுக்குச் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
குற்றம் செய்ததற்குரிய ஆதாரங்கள் சதாமின் வழக்கறிஞர்களிடம் சமர்ப்பிக்கப்படவில்லை; அவருக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும் அனுமதியில்லை.
விசாரணை முடிவதற்குள்ளாகவே மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே, "சதாம் புத்தாண்டுக்கு முன் தூக்கில் இடப்படுவார்” என்று இராக் பொம்மை அரசாங்கத்தின் பிரதமர் நூரி மாலிக்கி அறிவிப்புச் செய்தார்.
சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பரம எதிரியும், சதாமைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பவர்களுமான ஷியாக்களிடம் ஒப்படைத்து, தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் செய்தான் இந்த ஜார்ஜ் புஷ்.
முஸ்லிம்களின் புனித நாளான பெருநாளைத் தேர்வு செய்து அந்த நாளில் சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டு, தனது முழு இஸ்லாமிய வெறுப்பையும், விரோதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான்.
எது மனித குலத்திற்கு எதிரான குற்றம்?
இந்தத் தண்டனை எதற்காக? மனித குலத்திற்கு எதிராக சதாம் ஹுசைன் குற்றமிழைத்தார் என்று இவன் கூறுகின்றான்.
துஜைல் என்ற நகரத்தில் 148 ஷியாக்கள் சதாமின் ஆட்சியைக் கவிழ்த்து, அவரைக் கொலை செய்ய முயன்றனர். அதனால் இந்த 148 பேரும் தண்டிக்கப்பட்டனர். இது தான் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறி ஜார்ஷ் புஷ் என்ற கயவனால் சதாம் ஹுசைன் படுகொலை செய்யப்பட்டார்.
148 பேரைக் கொன்றது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றால், இந்த வெள்ளை வெறியன் இராக்கில் நுழைந்த நாள் முதல் சதாமைக் கொலை செய்த காலம் வரை, இன்னும் சொல்லப்போனால் இன்று வரை கொன்று குவித்திருக்கும் உயிர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கு மேல்!
இது மனித குலத்திற்கு எதிரான குற்றமில்லையா? இதற்காகவல்லவா முதலில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்!
இப்படி உலகெங்கும் உள்ள மக்கள் கேட்கின்றனர்! ஆனால் அரபுலகத் தலைவர்கள் கேட்கவில்லை.
இன்று வரை இராக்கில் அன்றாடம் மழலைச் செல்வங்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பாகுபாடில்லாமல் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக அமெரிக்கப் படையினரால் வேரறுக்கப் படுகின்றனர். இன்னும் அம்மக்களை வேரறுக்க 21,500 படையினரை புஷ் அனுப்பி வைத்துள்ளான். இத்தனைக்குப் பிறகும் இந்த அரபுலகத் தலைவர்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
(அல்குர்ஆன் 4:75)
என்று அல்லாஹ் கேட்பதைப் போன்று இராக் மக்களுக்காகப் போர் புரிவதை விட்டு விட்டு, இந்த மாபாவி அனுப்பி வைத்திருக்கும் காண்டலீஸா ரைஸ் என்பவளுடன் அரபகத் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சதாம் ஹுசைனைக் கொலை செய்து விட்டு, ஷியாக்கள் அடைந்த மகிழ்ச்சி தான் அந்த முக்கியமான விஷயம்! யார் இந்த ஷியாக்கள்? யூதர்களின் மறு பதிப்பு தான் இந்த ஷியாக்கள்!
முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊடுறுவி, முஸ்லிம்கள் ஒருவரை மற்றொருவர் வெட்டிச் சாய்க்கும் விஷத்தைப் பரப்பி, ஏகத்துவக் கொள்கையை அடித்துத் தகர்க்கும் ஆபத்தான கொள்கை வாதிகள் தான் ஷியாக்கள்!
அந்த ஷியாக்களுடன் சதாம் ஹுசைன் 1980 முதல் எட்டு ஆண்டு காலம் போர் புரிவதற்கு முழுக்க முழுக்க உதவியவர்கள் தான் இந்த அரபக ஆட்சியாளர்கள்! துஜைலில் 148 பேர் கொல்லப்பட்ட போதும், இன்னும் சதாம் மீது என்னென்ன குற்றச்சாட்டு உள்ளதோ அத்தனையின் போதும் சதாமுக்கு உதவியாக இருந்தவர்கள் தான் அரபக ஆட்சியாளர்கள்!
எந்த யூதர்களும், ஷியாக்களும் அரபகத்தில் வலுப்பெற்று விடக் கூடாது என்பதற்காக சதாமும், மற்ற அரபுத் தலைவர்களும் போராடினார்களோ அந்த ஷியாயிஸம் இன்று தலை விரித்தாடுகின்றது.
யூத சீயோனிஸத்திற்கு ஒத்த ஷியாயிஸத்தின் இந்த வளர்ச்சியை இப்போது அரபக ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இதற்குக் காரணம் என்ன? படை நடத்தி வரும் அமெரிக்காவுக்கு எதிராகக் கிளம்பாமல் தொடை நடுங்கக் காரணம் என்ன?
இவர்களுடைய உள்ளத்தில் "வஹ்ன்’ வந்து விட்டது.
"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கி-ருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களி-ருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் "வஹ்னை’ ஏற்படுத்தி விடுவான்” என்று பதிலளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். "உலகத்தை நேசிப்பது; மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: அஹ்மத் 21363
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு இன்று நிறைவேறி வருகின்றது. மரண பயம் இந்த அரபக ஆட்சியாளர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றது.
அதனால் தான் இந்தத் தொடை நடுக்கம்! இத்தனைக்குப் பிறகும் இவர்கள் துணியவில்லை எனில் அல்லாஹ் கூறுவது போல் அவனுடைய கட்டளைக்காகக் காத்திருக்க வேண்டியது தான்.
"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:24)
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டால் அப்போது இவர்கள் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். அல்லாஹ் காப்பானாக!
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அல்லாஹ்வின் போர் வாள் மாவீரர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் தான் இந்த இராக் வெற்றி கொள்ளப்பட்டது. அதற்குக் காரணம் காலித் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. ஆனால் இன்று இவர்களோ மரணத்தைக் கண்டு பயப் படுகின்றார்கள். அதனால் தான் பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியமர்த்தியதைக் கண்டும் காணாமல் இருந்தோம்; தற்போது இராக்கையும் யூத, கிறித்தவர்களிடம் இழந்து கொண்டிருக்கின்றோம்.
இராக்கும் இஸ்லாமும் ஓரு வரலாற்றுப் பார்வை
அண்மையில் சதாம் ஹுசைன் தூக்கில் போடப்பட்ட நிகழ்வு முஸ்லிம்களின் உள்ளங்களில் பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
பயங்கரவாதத்தின் மீது போர் என்ற பெயரில் அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் ஆப்கானிஸ்தானை துவம்சமாக்கின.
அதன் பின்னர் இராக்கில் எண்ணெய் வளத்தைக் கொள்ளை அடிப்பதற்காக புஷ், டோனி பிளேர் படைகள் அத்துமீறி நுழைந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி பெறாமலேயே நடத்தப்பட்ட இந்தப் படையெடுப்பில் இது வரை பல லட்சக்கணக்கான முஸ்லிம்களை அமெரிக்கப் படைகள் கொன்று குவித்திருக்கின்றன.
ஏற்கனவே பொருளாதாரத் தடையினால் சீர் குலைந்து போயிருந்த இராக்கை இந்த ஆக்கிரமிப்புப் போர் மேலும் நாசமாக்கியது.
இராக்கில் இரசாயன உயிர்க் கொல்லி ஆயுதம் உள்ளது என்ற பொய்யைச் சொல்லி உள்ளே நுழைந்த அந்த கொள்ளைக் கூட்டத்தால் இராக்கில் எந்தவிதமான இரசாயன உயிர்க் கொல்லி ஆயுதத்தையும் கண்டெடுக்க முடியவில்லை.
பல லட்சம் உயிர்களைக் குடித்த பின், "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக உளவுத் துறை தவறான தகவல் கூறி விட்டது” என்று ஜார்ஜ் புஷ் சர்வ சாதாரணமாக அறிவித்தான். ஆனால் உண்மையில் இவனது நோக்கம் இராக்கின் எண்ணெய் வளம் தான் என்பது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமானது.
இதை மூடி மறைப்பதற்காக சதாம் ஹுசைன் மீது பல்வேறு குற்றங்களைச் சுமத்தி, அவரைத் தூக்கில் போட்டதுடன் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அதைக் காட்சிப் பொருளாக்கி, "தன்னை எதிர்ப்பவனின் கதி இது தான்’ என்ற மறைமுக மிரட்டலையும் உலகிற்கு விடுத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
இதன் மூலம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த இராக்கை இப்போது அமெரிக்கா தன் கைவசப்படுத்தி இருக்கின்றது.
இராக்கில் ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உண்மையில் இப்போது நடப்பது அமெரிக்காவின் ஆட்சி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்படி முஸ்லிம்களிடமிருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கும் இராக், இஸ்லாத்தின் பிடியில் எப்போது வந்தது? எப்படி வந்தது? இஸ்லாத்தின் மடியில் வந்த பிறகு மீண்டும் அது யாராலும் பறிக்கப்பட்டிருக்கின்றதா? அதற்குக் காரணம் யார்? இப்போது இராக் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப் பட்டதற்கு யார் காரணம்? என்ற விபரங்களைக் காண்போம்.
இஸ்லாத்தின் பிடியில் இராக் வந்த வரலாறு
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது தான் இராக் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வந்தது. எனவே இராக் குறித்த இந்த வரலாற்றுப் பார்வையில், தற்போது ஏகத்துவத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் அபூபக்ர் (ரலி) வரலாற்றில் இடம் பெற்றிருந்த சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்)
அடிமைப்பட்டுக் கிடந்த அரபு அரசுகள்
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆன கால கட்டத்தில் ரோமாபுரியும், பாரசீகமும் உலகின் இரு பெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்து கொண்டிருந்தன. சிரியா, இராக் போன்றவையும் அவற்றைச் சுற்றியுள்ள சிறு சிறு அரசுகளும் இந்த ரோமானிய, பாரசீகப் பேரரசுகளின் அடிமை நாடுகளாக இருந்தன. சிரியா மற்றும் இராக்கின் ஆட்சியதிகாரம் இவ்விரு பேரரசுகளிடம் மாறி, மாறி சுழன்று வந்தது.
கொஞ்ச காலம் பாரசீகம், சிரியாவை ரோமர்களிடமிருந்து பறித்து, தன் கைவசமுள்ள இராக்குடன் இணைத்துக் கொள்ளும். கொஞ்ச காலம், ரோமாபுரி இராக்கை பாரசீகத்திடமிருந்து பறித்து, தன் கைவசமுள்ள சிரியாவுடன் இணைத்துக் கொள்ளும். இப்படி இரு பேரரசுகளுக்கு இடையிலான போர் பல நூற்றாண்டுகளாக நீடித்துக் கொண்டிருந்தது.
இந்தப் போர் குறித்து திருக்குர்ஆன் வசனங்களும் நமக்குத் தெளிவாக்கிக் கொண்டிருக்கின்றன.
பாரசீக வெற்றியும் பரிகசிக்கும் எதிரிகளும்
ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள். முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 30:2,3,4,5)
பாரசீகப் படுதோல்வியை, ரோமாபுரியின் வெற்றியை திருக் குர்ஆன் ஏன் கூற வேண்டும்? என்ற ஐயம் எழலாம். இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் விளக்கம் இதோ:
ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. ரோம் (பாரசீகத்தால்) தோற்கடிக்கப்பட்டு விட்டது. பாரசீகர்கள், ரோமப் பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்று இணை வைப்பாளர்கள் விரும்பினர். ஏனெனில் இவர்களும் பாரசீகர்களும் சிலைகளை வணங்குபவர்கள்.
ரோமப் பேரரசு, பாரசீகத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்பினர். காரணம், (முஸ்லிம்களைப் போலவே) ரோமாபுரியினர் வேதக்காரர்கள்.
இணை வைப்பாளர்கள் தங்களது இந்த விருப்பத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரோமாபுரியினர் வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்தப் பதிலை முஷ்ரிக்குகளிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், "நமக்கும், உங்களுக்கும் மத்தியில் ஒரு தவணை குறிப்பிடுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் இன்னின்ன பொருட்களை எங்களுக்குத் தர வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இன்னின்ன பொருட்களை உங்களுக்குத் தருவோம்” என்று கூறினர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஐந்து வருடங்கள்” என்று கூறினார்கள்.
ஆனால் ரோமாபுரியினர் வெற்றி பெறவில்லை. அபூபக்ர் (ரலி) இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, "இதைப் பத்துக்குக் கீழ் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ரோம் வெற்றி பெற்று விட்டது.
இது தான், "ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது” என்ற வசனத்தில் "நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சி அடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான்” என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு விளக்கமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர்
நூல்: திர்மிதீ 3117
முஸ்லிம்களின் ஆறுதலுக்காக இந்த வசனம் அருளப்பட்டது. எனினும் இந்த வசனம் பாரசீகம் தோல்வியுறும் என்று முன்னறிவிப்பு செய்தது. அது போன்றே ரோமிடம் பாரசீகம் தோல்வியைத் தழுவி அல்லாஹ்வின் முன்னறிவிப்பு நிறைவேறியது.
நாம் இங்கே இதைக் குறிப்பிடக் காரணம், சிரியா, இராக் இன்னும் இதர அரபு நாடுகள் இவ்விரு பேரரசுகளின் பிடியில் சிக்குண்டு கிடந்தன; அந்த அளவுக்கு இவ்விரு பேரரசுகளின் ஆதிக்கம் அரபுலகத்தின் மீது நிலவி வந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.
மண்ணில் விழுந்த மணி மகுடங்கள்
இஸ்லாமிய ஒளிக்கதிர் மக்காவில் இருந்து கிளம்பிய மாத்திரத்திலேயே ஏகத்துவத்திற்கு எதிரான இந்த இலக்குகளின் மீது குறி வைக்கத் துவங்கி விட்டது. இதை நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பில் இருந்து தெளிவாக விளங்கலாம்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால் (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா எனும்) குஸ்ரூவின் கருவூவலங்கள் வெற்றி கொள்ளப் படுவதைப் பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், "(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595
இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் ஹீரா என்ற பகுதி இராக்கில் உள்ள பகுதியாகும். இராக் பாரசீகத்தின் கை வசமிருந்தது. இந்தப் பகுதியைத் தான் இஸ்லாம் வெற்றி கொள்ளும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்.
ஏகத்துவத்திற்கு எதிரான கிறித்தவ உலகமும் அதாவது ரோமப் பேரரசும் இந்த முன்னறிவிப்பை உணரத் தலைப்பட்டது.
ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானிடம் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி பற்றி சில கேள்விகளைத் தொடுக்கின்றார். அதற்கு அபூசுஃப்யான் அவர்கள் அளித்த பதிலைக் கேட்டு விட்டு மன்னர் தமது மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது:
"அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித் தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில் தான் அனுப்பப் பட்டுள்ளார்கள். "உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இந்த வாதத்தைச் செய்திருந்தால் முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கின்றார் என்று நான் கூறியிருப்பேன். "இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கின்றார்களா?’ என்று உம்மிடம் நான் கேட்ட போது இல்லை என்று சொன்னீர். இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருந்தால் தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று சொல்லியிருப்பேன். "இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா?’ என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று கூறினீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன். "மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றார்களா? அல்லது சாமானியர்களா?’ என்று கேட்டேன். சாமானிய மக்கள் தான் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தான் இறைத் தூதர்களைப் பின்பற்றுவோராய் இருந்துள்ளனர்.
"அவரைப் பின்பற்றுகின்றவர்கள் அதிகரிக்கிறார்களா? அல்லது குறைகிறார்களா?’ என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் அதிகரிக்கின்றனர் என்று நீர் குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும் வரை அப்படித் தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும்.
"அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கிறார்களா?’ என்று கேட்டேன். இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித் தான். இதயத்தில் நுழைந்து விட்ட இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது). "அவர் (எப்போதாவது) வாக்கு மீறியதுண்டா?’ என்று என நான் உம்மிடம் கேட்ட போது, இல்லை என்றீர். திருத்தூதர்கள் அப்படித் தான் வாக்கு மீற மாட்டார்கள். "அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கத்தில் இருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும், தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.
நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆட்சி செய்வார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப் பட்டாவது அவரைச் சந்தித்து இருப்பேன். நான் அவருக்கு அருகே இருந்தால் அவரது பாதங்களை நான் கழுவி விடுவேன்.
இவ்வாறு மன்னர் ஹெர்குலிஸ் குறிப்பிட்டார். (நூல்: புகாரி 7)
ரோமாபுரியின் பேரரசராக இருந்த மன்னர் ஹெர்குலிஸ் தனது ஆட்சியின் கீழுள்ள பகுதிகளை இஸ்லாம் ஆட்சி செய்யும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.
மன்னர் ஹெர்குலிஸின் இந்தக் கூற்று, ரோமாபுரி விரைவில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வரும் என்பதை கிறித்தவ உலகம் விளங்கியிருந்ததை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
வேதக்காரர்களுக்கு எதிரான முதல் போர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்து பல போர்க்களங்களைச் சந்தித்தார்கள். அந்தப் போர்க்களங்களில் முஃத்தா எனப்படும் போர், முதன் முதலாக கிறித்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராகும். முஃத்தா என்பது சிரியாவின் அருகிலுள்ள கிராமம்.
ஹிஜிரி 8, ஜமாதுல் அவ்வல் மாதம், அதாவது கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரில் தான் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் போர் வாள் என்ற பட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் பெற்றுத் தடம் பதிக்கின்றார்கள்.
"(முஃத்தா போர்க்களத்தில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் எடுத்தார். அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு ஜஃபர் எடுத்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரை வடித்துக் கொண்டு இருந்தன. "இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் பின் வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்து விட்டான்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3757
இந்தப் போருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசை எதிர்த்து நடத்திய போர் தபூக் போராகும். மக்களை முழு அளவில் தயார்படுத்தி அழைத்துச் சென்ற போரும் இந்த தபூக் போர் தான். கடும் வெயிலில், நீண்ட தூரப் பயணம் செய்து நடத்தப்பட்ட இந்தப் போர் ரோமானியப் பேரரசை, கிறித்தவ சாம்ராஜ்யத்தை எதிர்த்து நடத்திய போராகும். இது ஹிஜிரி ஒன்பதாம் ஆண்டு ரஜப் மாதம் நடைபெற்றது.
இதன் பின்னர் முஃத்தா போரில் ஜைத் பின் ஹாரிஸா (ர-), ஜாஃபர் பின் அபீதா-ப் (ர-), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ர-) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவில் உள்ள பல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ர-) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
இது நபி (ஸல்) அவர்களின் இறுதிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும்.
அந்தப் படை மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள ஜுர்ஃப் என்ற இடத்தில் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்றார்கள். அவர்களது இறப்புச் செய்தியைக் கேட்டவுடன் படையில் இருந்தவர்கள் பின் தங்கி மதீனாவிற்கு வந்து விட்டனர்.
அபூபக்ர் (ரலி) ஆட்சியில்….
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதன் முதலில் நிறைவேற்றியது உஸாமா படையை அனுப்பி வைத்தது தான். உஸாமாவின் படை அந்தப் போரை முடித்து வெற்றிகரமாகவே திரும்பி வந்தது.
இராக்கை நோக்கி இஸ்லாமியப் படை
இதன் பின்னர் தான் பாரசீகத்தின் கையில் இருக்கும் இராக்கை நோக்கிச் செல்லுமாறு ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தளபதி, அல்லாஹ்வின் போர் வாள் காலித் பின் வலீதை அனுப்பி வைக்கிறார்கள்.
இராக்கை நோக்கிச் செல்கையில் தமது போர்ப் பணியை பாரசீக வளைகுடாவின் ஒரு மூலையில் உள்ள உபுல்லா என்ற பகுதியிலிருந்து துவங்குமாறு ஆட்சித் தலைவர் அவர்கள், காலித் பின் வலீதைக் கேட்டுக் கொண்டார்கள். உபுல்லா என்பது அராபியக் கடற்கரையில், பாரசீக வளைகுடாவில் உள்ள துறைமுக ஊராகும். இங்கு சிந்துவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வணிகக் கூட்டம் வந்து செல்லும்.
இங்கிருந்து தான் பாரசீக மன்னர் ஹுர்முஸ், அரபியர்களைத் தரை மார்க்கமாகவும், இந்தியர்களைக் கடல் மார்க்கமாகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார். இது அரபியர்களுக்கு ஓர் ஆபத்தான பகுதியாக இருந்து வந்தது. எனவே இங்கிருந்து இராணுவப் பணியைத் துவக்குமாறு காலித் பின் வலீதுக்கு அபூபக்ர் (ரலி) கட்டளையிட்டிருந்தார்கள்.
மக்களிடம் அன்பு காட்டும் படியும், அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்குமாறும் காலிதிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மக்கள் இஸ்லாத்திற்கு வந்து விட்டால் சரி! இல்லையேல் அவர்களிடம் ஜிஸ்யா வரியைப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்கள். தன்னுடைய படையில் சேருமாறு எவரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும், மதம் மாறியவர் எவரிடமும் எந்த உதவியும் கோரக் கூடாது என்றும், அவர்கள் திருந்தி மீண்டும் இஸ்லாத்தில் இணைந்து இருந்தாலும் அவர்களிடம் உதவி கோரக் கூடாது என்றும் தமது உத்தரவில் அபூபக்ர் (ரலி) குறிப்பிட்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள் அனைவரையும் தமது படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.
இந்த உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு, படைத் தளபதி காலித் (ரலி) பாரசீகப் பேரரசுக்கு எதிரான தனது படையெடுப்பைத் துவங்குகின்றார்.
இராக் செல்லும் வழியில் பான்கியா, பாருஸ்மா, உல்லைஸ் என்று அழைக்கப்படும் சவாத் என்ற கிராமங்களில் காலித் தங்குகின்றார். ஜாபான் என்பவர் இவ்வூர்களின் ஆட்சியாளர் ஆவார்.
(வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் அவர்களின் கருத்துப்படி முஸ்லிம்கள், சுப்ஹ் நேரத்தில் இந்தக் கிராமங்களில் ஒரு பெருங்கூட்டத்தைத் தாக்கிக் கொன்றனர். இதன் பின்னர்) ஆயிரம் திர்ஹம் ஜிஸ்யா அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் படி ஜாபான் என்ற அந்த ஆட்சியாளருக்கும், படைத் தளபதி காலிதுக்கும் இடையில் உடன்படிக்கை கையெழுத்தானது. அவர்கள் தரப்பில் இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டவர் பஸ்பஹரா பின் சலூபா என்பவர் ஆவார்.
சாவை விரும்பும் சாகசக் கூட்டம்
பிறகு அங்கிருந்து காலித் பின் வலீத் ஹிராவுக்குச் செல்கின்றார். காலித், ஹிராவுக்கு வந்தவுடன் அங்குள்ள பெரும்புள்ளிகள் கபீஸா பின் இயாஸ் என்ற ஆட்சியாளருடன் காலிதைச் சந்திக்க வருகின்றனர். நுஃமான் பின் அல்முன்திர் என்ற ஆட்சியாளருக்குப் பின் பாரசீக மன்னர் கிஸ்ராவால் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர் தான் கபீஸா பின் இயாஸ்.
அவர்களிடம் காலித் விடுத்த கனிவான செய்தி மற்றும் எச்சரிக்கை இதோ!
"அன்புடையீர்! உங்களை நான் அல்லாஹ்வின் பக்கமும் இஸ்லாத்தின் பக்கமும் வரும் படி அழைக்கின்றேன். அந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் எனில், நீங்கள் முஸ்லிம்கள்! அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டத்தின் மூலம்) கிடைக்கும் பலன்கள் உங்களுக்கும் கிடைக்கும். அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டத்தின் மூலம்) கிடைக்கும் தண்டனைகள் உங்களுக்கும் கிடைக்கும். இதை ஏற்க மறுத்தால் இஸ்லாமிய அரசுக்கு நீங்கள் வரி கட்ட வேண்டும். வரி கட்ட மறுத்தால் நான் ஒரு கூட்டத்தைக் கூட்டி வந்திருக்கின்றேன். அந்தக் கூட்டம் சாதாரணக் கூட்டமல்ல! சாகசக் கூட்டம்! அந்தக் கூட்டம் (உங்களைப் போல்) வாழ்வதற்குப் பேராசை கொண்ட கூட்டமல்ல! சாவதற்குப் பேராசை கொண்ட கூட்டம்! இந்தச் சரித்திரக் கூட்டத்துடன் அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் ஒரு முடிவைத் தருகின்ற வரை போராடுவோம்”
இவ்வாறு இரும்புப் பாளங்களையும் பற்றி எரியச் செய்யும் திராவகச் சொற்களால் காலித் பொரிந்து தள்ளுகின்றார். அதற்கு கபீஸா பின் இயாஸ், "நாங்கள் உங்களுடன் போர் செய்வதற்கில்லை. அதே சமயம் நாங்கள் எங்கள் மார்க்கத்தையும் விடுவதற்கில்லை. அதனால் நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தி விடுகின்றோம்” என்று கூறினார்.
இதைச் செவியுற்ற காலித், "உங்களுக்குக் கேடு தான். இறை மறுப்பு என்பது தட்டலைந்து தடுமாறித் திரிய வைக்கும் ஒரு பாலைவனம். அறிவில்லாத அரபி தான் இதில் நடந்து செல்கின்றான். அவனை இருவர் சந்திக்கின்றனர். ஒருவன் அரபியன். மற்றொருவன் அந்நியன். பாலைவனத்தில் செல்லும் அரபியனோ அரபியனை நம்பாமல் (பாரசீக) அந்நியனை நம்பிச் செல்கின்றான். இது போல் உங்கள் நிலை அமைந்திருக்கின்றது” என்று கூறினார். இறுதியாக தொள்ளாயிரம் திர்ஹம் வரித் தொகை செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை செய்தார்.
இராக்கில் கிடைத்த முதல் வரி
உடன்படிக்கையின் அடிப்படையில் தொள்ளாயிரம் திர்ஹம் வரி பெறப் பட்டது. இது தான் இராக்கின் ஆளுகையிலிருந்து பெறப்பட்ட முதல் ஜிஸ்யா வரியாகும். இராக்கிலிருந்து பெறப்பட்ட நிதியும், பஸ்பஹரா பின் சலூபாவிடமிருந்து பெறப்பட்ட நிதியும் உடனே மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்துடன் ஹிரா இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
பாரசீகப் பேரரசை கலங்க வைத்த காலித் (ரலி)
இதன் பின்னர் காலித் பின் வலீத், மதாயின் நகரத்தாருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:
பாரசீக அரசுகளுக்கு காலித் எழுதிக் கொள்வது. நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு அமைதி உண்டாகட்டுமாக! நிற்க!
உங்களுடைய பணியாளர்களை ஒவ்வொருவராக உதிரச் செய்து, உங்களது ஆளுகைகளை உங்களிடம் இருந்து உருவச் செய்து, உங்களுடைய சூழ்ச்சிகளை உருக்குலைத்துக் கொண்டிருக்கின்றானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
நாம் தொழுவது போல் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்தவற்றைச் சாப்பிடுபவர் முஸ்லிம் ஆவார். எங்களுக்கு ஏற்படும் நன்மை அவர்களுக்கு உண்டு. எங்களுக்கு ஏற்படும் சோதனை அவர்களுக்கும் உண்டு. என்னுடைய கடிதம் உங்களுக்கு வந்ததும் எனக்குக் கட்டுப்படுகின்ற உறுதிப் பிரமாணத்தை எனக்கு அனுப்பி வைத்து, என்னிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாருமில்லையே அப்படிப்பட்ட அந்த நாயன் மீது ஆணையாக! நான் உங்களுக்கு எதிராக ஒரு படையை அனுப்பி வைப்பேன். நீங்கள் வாழ்வை நேசிப்பது போல் அவர்கள் சாவை நேசிப்பவர்கள்.
இது தான் காலித் எழுதிய கடிதம்.
இதைப் படித்ததும் பாரசீக அரசர்கள் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைய ஆரம்பித்து விட்டார்கள். மதாயினுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து விட்டு, காழிமா எனுமிடத்தில் களம் காணும் காரியத்தில் இறங்குகின்றார் காலித்.
யமாமாவிலிருந்து இராக்கை நோக்கிப் புறப்பட்ட தளபதி காலித் பின் வலீத் தனது படையை மூன்று படைகளாகப் பிரித்திருந்தார். முஸன்னா பின் ஹாரிஸா அஷ்ஷைபானீ என்பவரின் தலைமையில் ஒரு படையை நியமித்திருந்தார். அந்தப் படை காலித் பின் வலீதின் படை புறப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாகக் கிளம்பி விட்டது.
அதீ பின் ஹாத்தம் அத்தாயின் தலைமையில் இன்னொரு படையை அமைத்திருந்தார். இந்தப் படை காலித் பின் வலீதுக்கு ஒரு நாள் முன்னதாகப் புறப்பட்டுச் சென்றது. கடைசியாக காலிதின் படை கிளம்பியது.
இந்த முப்படைகளும் வெவ்வேறு திசைகளில் புறப்பட்டுச் சென்றன. இந்த மூன்று படைகளும் ஹஃபீர் என்ற இடத்தில் சங்கமிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தார். இந்தப் படைகள் கிளம்புவதற்கு முன்னதாக காழிமாவின் ஆளுநர் ஹுர்முஸுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
நிற்க! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அமைதி அடையுங்கள். அல்லது வரி செலுத்தி உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் எங்களிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் பழிக்க வேண்டியது உங்களைத் தான். வேறு யாரையுமல்ல! நீங்கள் வாழ்வை விரும்புவது போன்று சாவை விரும்பும் மக்களை என்னுடன் அழைத்து வந்திருக்கின்றேன்.
இவ்வாறு அந்தத் கடிதத்தில் காலித் குறிப்பிட்டிருந்தார்.
ஹுர்முஸ் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கடிதத்தின் தகவலை பாரசீகப் பேரரசர் அர்தஷீருக்கு உடனே தெரிவித்தார். ஏற்கனவே முஸ்லிம்களைப் பற்றியும், வந்து கொண்டிருக்கும் அவர்களது படையைப் பற்றியும் ஹுர்முஸுக்குத் தகவல் வந்திருந்தது. பேரரசருக்குத் தகவல் கொடுத்த ஹுர்முஸ், பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு, காலிதை எதிர் கொள்வதற்குப் புறப்பட்டுச் செல்கின்றார். இவ்வாறு செல்லும் போது, காலிதின் படைகள் ஹஃபீர் என்ற இடத்தில் சங்கமிக்கின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, தனது படையுடன் ஹஃபீருக்குப் புறப்படுகிறார்.
அங்கு காலிதின் தலைமையில் நின்றிருந்த பதினெட்டாயிரம் பேரைக் கொண்ட இஸ்லாமியப் படை ஹுர்முஸின் தலைமையில் வந்த பாரசீகப் படையைத் தோற்கடித்தது. இதனால் இராக்கின் முக்கியப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் அன்பார், ஐனுத் தமர், தூமத்துல் ஜன்தர், ஃபிராழ் ஆகிய பகுதிகளையும் காலித் பின் வலீத் வெற்றி கொள்கின்றார்.
இவ்வாறு அபூபக்ர் (ரலி) ஆட்சிக் காலத்தில் அவர்களால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், பல்வேறு போர்களுக்குப் பின்னர் இராக்கை இஸ்லாமிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதன் பின்னர் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இராக் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டிலேயே நீடித்து வந்தது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் பாக்தாத் கண்ட பேரழிவு
பதிமூன்றாம் நூற்றாண்டில், ஹிஜ்ரி 656ஆம் ஆண்டு, அப்பாஸியப் பேரரசின் கலீபா முஃதஸிம்பில்லாஹ் என்பவர் பாக்தாத்தை ஆண்டு கொண்டிருக்கின்றார்.
ஆட்சியாளர் என்றாலே சுக போகம், சொகுசு எல்லாம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு விடும். ஆடம்பரம், ஆரவாரம் அவர்களின் வாழ்க்கையை அரவணைத்து நிற்கும். இந்த வகை வாழ்க்கைக்கு கலீபா முஃதஸிம்பில்லாஹ் விதி விலக்கானவர் அல்ல!
இப்படியோர் ஆட்சியை அவர் நடத்திக் கொண்டிருக்கும் போது ஈவு இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு காட்டு மிராண்டிக் கூட்டம் பாக்தாதை நோக்கிப் படையெடுத்து வருகின்றது. சுற்றிலும் முற்றுகையிடுகின்றனர். இது வரை அரபகம் கண்டிராத ஆயுதங்களைக் கொண்டு வந்து குவிக்கின்றனர்.
கைகளால் இயக்கப்படும் வில் அம்புகள், கைகளால் இயக்கப்படும் கவன்களிலிருந்து பாய்கின்ற கற்கள் ஆகியவை தான் அன்றைய காலத்து ஆயுதங்களாக அமைந்திருந்தன.
ஆனால் பாக்தாதைச் சுற்றி வளைத்த அந்தப் படையினரோ மாறி மாறி மழையெனப் பொழியும் அந்தக் கவன் பொறிகளை இயந்திரங்களாகக் கொண்டு வந்து குவித்திருந்தனர்.
எவ்வளவு தான் ஒரு போர் வீரர் உரிய பயிற்சி பெற்றிருந்தாலும், தொடராக வில்–ருந்து அம்புகளைத் தொடுத்து ஏவினாலும், கவனி-ருந்து கற்களை எறிந்தாலும் எத்தனை பேர்களை அவை பதம் பார்த்து விடப் போகின்றன?
ஆனால் இயந்திரக் கவன் உந்தித் தள்ளி, உதிர்த்து வீசும் கல் மற்றும் அம்புகள் பொழியும் கன மழையில் எதிரிகளின் படை வரிசைகள் களத்தில் காணாமல் ஆகி விடும்.
இது போன்று மக்களைப் ப- கொள்ளவிருக்கின்ற பயங்கர ஆயுதங்கள், இராட்சத இயந்திரங்கள் பாக்தாத் நகருக்குள் புகுந்து ரணகளப்படுத்த – ரத்த ஆறை ஓட விட அணிவகுத்து வந்தன. ஒவ்வொருவரின் உயிரையும் உறிஞ்சுவதற்குத் தயாராகக் கிளம்பின.
பார்க்கவே பூதாகரமாகத் தோன்றுகின்ற, விழியிமைகளை மூடாது நிலை குத்தி நிற்க வைக்கின்ற அன்றைய காலத்து அதிநவீன ஆயுத அணிவகுப்புகளை – மலைகளை ஒத்த இராட்சதப் போர்க் கருவிகளை பாக்தாத் அதுவரை கண்டிருக்கவில்லை என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் இப்னு கஸீர் அவர்கள்.
படைக் கருவிகளைப் பற்றி, குவிக்கப்பட்ட அந்த ஆயுதங்களைக் கண்டு அந்த வரலாற்றுக் கலை பேராசிரியர் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்குத் தடுமாறிப் போகின்றார்.
"இந்தப் பேரழிவிலிருந்து, பொங்கிப் பொசுக்க இருக்கும் போர்க் கருவிகளி-ருந்து பாக்தாத் மக்களைக் காப்பாற்ற எந்த ஒரு சக்தியாலும் முடியாது. அந்த மாபெரும் அல்லாஹ் என்ற ஒரு பெரும் சக்தியைத் தவிர” என்று இமாம் இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிட்டு விட்டு, அல்லாஹ்வின் ஆற்றல் மிகு, அழுத்தமான வசனங்களை ஆதாரமாகக் கொண்டு வருகின்றார்கள்.
அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப் படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
(அல்குர்ஆன் 71:4)
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்று கின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
(அல்குர்ஆன் 13:11)
கார் மேகங்களைப் போன்று போர் மேகங்கள் பாக்தாதைச் சூழ்ந்திருக்கும் அவ்வேளையில் பாக்தாதின் ஆட்சியாளர் கலீபா முஃதஸிம் பில்லாஹ் வேறொரு அவசரப் பணியில் ஆழ்ந்திருந்தார்!
எதிரிகளின் படைகளை எப்படி வீழ்த்துவது என்று வியூகம் வகுப்பதற்காகவா? அல்லது இராக்கில் இருக்கின்ற அத்தனை எல்லைகளிலும் ஒவ்வொரு தளபதியை நியமித்து படைகளைப் பகுப்பதற்காகவா? எத்தகையதோர் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார் என்கின்றீர்கள்! கோட்டையின் கொலு மண்டபத்தில் ஒரு கொடியிடையாள் கொட்டுகின்ற நடனத்தைக் கண்டு களிப்பதில் ஈடுபட்டிருந்தார்.
குளு குளு மண்டபத்தில் கிளுகிளுப்பூட்டும் வகையில் அவள் ஆடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக மின்னலென ஓர் அம்பு அவளது பட்டு மேனியில் பாய்கின்றது.
அவ்வளவு தான்! அவள் சாய்ந்து விடுகின்றாள். உதிரத்தில் தோய்ந்த அந்த அம்பை உருவிப் பார்க்கும் போது அதில் ஒட்டிக் கொண்டிருந்த எழுத்துக்கள் கலீபாவை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளன.
"அல்லாஹ் தன் நாட்டத்தை நிறைவேற்ற நினைத்து விட்டால் அதற்கு ஆட்படுபவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் அவர்களின் அறிவை அவனது நாட்டம் மழுங்க வைத்து விடும்; அவனது விதி அந்த அறிஞர்களின் மதியை விழுங்கி விடும்!”
கலீபாவுக்கு அடுத்து வரும் ஆபத்தைக் குறிக்கும் அபாயத்தை அம்பில் இடம் பெற்றிருந்த இந்த வாசகம் உணர்த்தியது. இது கலீபாவின் மனதை ஆட்டம் காணச் செய்தது!
பாக்தாதை நோக்கிப் படையெடுத்து வந்த அந்தப் படையினர் யார்? அவர்களின் தலைவன் யார்?
ஈவு இரக்கம் என்று எதையும் அறியாத இதயம் படைத்த இரத்தக் காட்டேறி வர்க்கம் மங்கோலியர்கள் எனப்படும் தாத்தாரியர்கள் தான் அவர்கள். இந்தக் கல் மனம் கொண்ட காட்டுமிராண்டிகளின் தலைவன் ஹுலாகு கான் (வரலாற்றில் உஹுஸாகு கான் என்ற பெயர் வழங்குகின்றார்கள்) என்பவனாவான்.
இவன் கொண்டு குவித்த ஆயுதங்களின் குவிப்பைப் பற்றியும் அதன் பரிணாமத்தையும் மேலே கண்டோம். இவன் கூட்டி வந்த கொடியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சம் பேர்! அத்தனை பேரும் இதயத்திற்குப் பதிலாக இயந்திரத்தைப் பெற்ற இரும்பு மனிதர்கள்! பாக்தாதை நோக்கிப் பகல் கொள்ளையிட வந்த இந்தப் பாதகர்களை எப்படி எதிர் கொள்வது என்ற சிந்தனை கலீபாவின் மனதை கவ்விப் பிடித்து விட்டது.
இந்த நேரத்தில் அவரது அமைச்சர் முஅய்துத்தீன் முஹம்மது பின் அல்கமா ஓர் அரிய ஆலோசனையை வழங்கினார். "பொன்மணிகளையும் பொருட் செல்வங்களையும் பெரும் காணிக்கையாக ஹுலாகு கானின் மலர் பாதத்தில் கொண்டு சமர்ப்பணம் செய்யுங்கள்” என்பது தான் அவர் வழங்கிய ஆலோசனை! கலீபாவுக்கு இது சரியெனத் தோன்றியது.
ஆனால் அந்த யோசனையை அரசின் கருவூலகக் காவலர்கள், காப்பாளர்கள் ஏற்கவில்லை! "மந்திரி முஹம்மது பின் அல்கமா இந்தப் பொருட்களை தாத்தாரியர்களின் தலைவனுக்குத் தாரை வார்த்து விட்டு, அவனுடன் திரை மறைவில் கள்ள உறவை வைத்துக் கொள்ள விரும்புகின்றார்; அதனால் தான் அவர் கலீபாவுக்கு இந்த யோசனையை வழங்கியிருக்கின்றார்” என்று கூறி அந்த ஆலோசனையில் மண்ணை அள்ளிப் போட்டனர்.
எனவே காப்பாளர்களின் ஆலோசனைப்படி மிகக் குறைவான பொருளைக் கொண்டு போய் ஹுலாகு கானின் காலடியில் காணிக்கை இட்டனர். ஹுலாகு கான் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கருவூலகக் காப்பாளரையும், ஸுலைமான் என்பவரையும் தன்னிடம் அளிக்கும் படி கலீபாவுக்கு ஹுலாகு கான் செய்தி அனுப்பினான்.
ஆனால் கலீபாவோ அதைக் கண்டு கொள்ளவில்லை. அவன் கேட்ட படி கருவூலகக் காப்பாளர்களையும், ஸுலைமான் என்பவரையும் அனுப்பவில்லை.
அவ்வளவு தான்! எல்லைக்கு வெளியே நின்ற படைகள் உள்ளே நுழையத் துவங்கின.
படை இல்லாத பாக்தாத் மன்னர்
நவீன ஆயுதங்கள், ராட்சத இயந்திரச் சக்கரங்களின் பற்கள் பாக்தாத் நகர பாலைவனப் பரப்புகளை கடித்துக் கொண்டு உருள ஆரம்பித்தன. இவ்வளவு பெரிய படைகளை எதிர்கொள்ள பாக்தாதிலே படைகள் ஏதேனும் இருந்தனவா? என்று பார்க்கும் போது அங்கு பரிதாப நிலை தான் நிலவியது!
பாக்தாதின் குதிரைப் படை வீரர்கள் பத்தாயிரத்தைக் கூட எட்டவில்லை. இருந்த அந்தப் படைவீரர்கள் கூட பள்ளிவாசல் வாயில்களிலும் கடைத் தெருக்களிலும் யாருக்கு வந்த விருந்தாளி என ஊருக்கு வந்த ஆபத்தைக் கண்டும் காணாதது போல வாழாவிருந்து கொண்டிருந்தனர்.
மார்க்கத்தைக் காக்க – மான, மரியாதையைக் காக்க – அருகதையற்றுப் போன இந்தப் படை வீரர்கள் உயிருடன் இருந்தும் உயிரற்ற பிணங்கள் போல் ஆனதால் கவிஞர்கள், புலவர்கள் இவர்கள் மீது இரங்கற்பாக்களை இயற்றினர்.
எல்லையி-ருந்து வரும் ஆபத்தை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட, இந்தப் படை வீரர்கள் நாட்டிலுள்ள சாதாரண பணிகளுக்கு, எடுபிடி வேலைகளுக்குத் திருப்பி விடப்பட்டனர். இந்தக் காரியம் அமைச்சர் முஹம்மது பின் அல்கமாவின் ஆலோசனைப்படியே நடந்தது.
காரணம், அதற்கு முந்தைய ஆண்டு பாக்தாதில் சுன்னத் வல் ஜமாத்தினருக்கும் ராபிளியாக்களுக்கும் இடையே நடந்த ஒரு போர் தான்.
ஷியாக்களின் ராபிளியாக்கள் பிரிவைச் சேர்ந்தவர் தான் அமைச்சர் முஹம்மது பின் அல்கமா.
சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கும், ராபிளியாக்களுக்கும் இடையே நடந்த இந்தப் போரின் போது அமைச்சரின் உறவினர் வீடுகள் உள்பட கொள்ளையிடப்பட்டன. இதைத் தடுத்து நிறுத்தும் முகமாகத் தான் இந்தப் படை திருப்புப் படலம் அமைச்சரது ஆலோசனையின் பேரில் பக்குவமாக நடைபெற்றது.
இது தாத்தாரிய படைகளுக்கு திறந்த வெளிப் பாதையை தடையில்லாத பயணத்திற்கு வழிவகுத்தது. தாத்தாரியர்களின் காட்டுத் தர்பார் அரக்கத் தலைவனை கலீபா போய் கண்டு வர கால தாமதம் எடுத்தார்.
ஆனால் அவரது அமைச்சரான முஹம்மது பின் அல்கமா காலம் கடத்தாது ஹுலாகு கானை காணிக்கைகள் சகிதமுடன் போய் கண்டு வந்து விட்டார். பாக்தாதில் இருந்து முதன் முத-ல் ஹுலாகு கானைப் போய் பார்த்து விட்டு வந்த அதிகார வர்க்கத்தின் முதல் ஆசாமி இவர் தான்.
கப்பம் கட்ட முன் வந்த கலீபா
வந்ததும் வராததுமாய் கலீபாவிடம் அவர் தெரிவித்த கருத்து பாக்தாதின் வருவாயில் பாதியை ஹுலாகு கானுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஹுலாகு கானிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான். அமைச்சரின் இந்த ஆலோசனையை ஏற்று நீதிபதிகள், மார்க்கச் சட்ட வல்லுநர்கள், சூபிகள், அரசாங்கத் தலைமை அலுவலர்கள் என பெரும் புள்ளிகள் அடங்கிய எழுநூறு பேர் கொண்ட ஒரு குழு ஹுலாகு கானை சந்திக்கப் புறப்பட்டது.
ஹுலாகு கான் தங்கியிருக்கும் மாளிகைக்கு கலீபாவும் எழுநூறு பேர்கள் அடங்கிய அவரது பரிவாரங்களும் வந்தாயிற்று. ஆனால் வந்த அனைவருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. பதினேழு பேருக்குத் தான் உள்ளே சென்று அரசரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
மீதமுள்ளவர்கள் வாகனங்களில் இருந்து வாரி விடப்பட்டு, அவர்களது பொருட்கள் மட்டும் சூறையாடப் படவில்லை; அவர்களது உயிர்களும் சூறையாடப்பட்டன. பதினேழு பேரைத் தவிர வேறு யாரும் உயிருடன் இல்லை என்ற அளவுக்கு அத்தனை பேரும் கொல்லப்பட்டனர்.
கலீபா கண்ட இந்தக் கோரக் காட்சி ஹுலாகு கான் முன்னிலையில் அவரைப் பேசவிடாமல் தடுத்தது; நா தழுதழுத்தது; உடல் அதிர ஆரம்பித்தது; வாயி-ருந்து வார்த்தைகள் வர மறுத்தன. எப்படியோ ஒரு விதமான துணிச்சலை வரவழைத்து விடைபெற்று பாக்தாத் திரும்பினார்.
வைரங்கள், வைடூரியங்கள், மரகதங்கள், மாணிக்கங்கள், பொன்மணிகள், பொன்னாலான புதுப் புது வார்ப்புகள், ஆரங்கள், அணிகலன்கள் என அடுக்கடுக்காக ஹுலாகு கான் அரண்மனைக்கு கலீபாவிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இத்தனையும் எதற்காக? எப்படியேனும் ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகத் தான்! ஆனால் ஹுலாகு கானின் அமைச்சர்கள் அவரிடம் கலீபாவுக்கு எதிராக வைக்கின்ற வத்தி இதோ!
"வரியில் பாதி என்பது ஓராண்டுக்கு வரும். மீறினால் ஈராண்டுகளுக்கு வரும் அதன் பின் என்ன? பழைய நிலையே திரும்ப வரும்! இது நமக்குத் தேவை இல்லாத வேலை! மக்கள் தரும் வரிப் பணத்திற்கும் வாங்கப் போகும் நமக்கும் மத்தியில் இடைத் தரகராக இருப்பதற்கு இவர் யார்? இந்தத் தடைக்கல்லைத் தகர்ப்போம்! மக்கள் அனைவரிடமிருந்து வருகின்ற வரிப் பணத்தை நாமே மாறி மாறி அறுவடை செய்வோம்” இது அமைச்சர் பெருமக்கள் ஹுலாகு கானிடம் வைத்த வத்தி ஆகும்.
முடிவுக்கு வந்த அப்பாஸிய சாம்ராஜ்யம்
அவ்வளவு தான்! பற்ற வைக்கப்பட்ட தீ பற்றிக் கொண்டு விட்டது. இதில் கலீபா காணாமலே போய் விட்டார்! கலீபாவின் மீது கை வைக்கும் பொறுப்பை கடைநிலை அதிகாரிகள் யாரும் ஏற்கவில்லை. ஹுலாகுகானின் அமைச்சரே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஹுலாகு கானே நேரடியாகக் கொலை செய்ய முன்வந்த போது அமைச்சர் குறுக்கிட்டு, தனது அடியாட்கள் மூலம் கலீபாவை ஒரு கோணிப் பைக்குள் போட்டு, ஒரு சொட்டு இரத்தம் கூடத் தரையில் கொட்டி விடாத வண்ணம் வர்ம அடி கொடுத்து அவரைக் கொன்று தீர்த்தான்.
இந்தப் படுகொலை ஹிஜ்ரி 656 ஸபர் மாதம் நடந்து முடிந்தது. கொல்லப்படும் போது அவரது வயது 47. இவர் பதவி ஏற்கும் வயது 40. இவர் தான் அப்பாஸியப் பேரரசின் கடைசிக் கலீபா ஆவார்.
அப்பாஸியப் பேரரசின் முதல் ஆட்சித் தலைவர் அல்லது மன்னர் அப்துல்லாஹ் ஸஃபாஹ் ஆவார். அதன் கடைசி கலீபா அபூ அஹமது அல்முஃதஸிம்பில்லாஹ் ஆவார். இவருக்கு முடிவுரை எழுதப்பட்ட அதே நேரத்தில் அப்பாஸியப் பேரரசின் 524 ஆண்டு கால சாம்ராஜ்யத்திற்கும் முடிவுரை எழுதப்பட்டு, மூடுவிழா நடத்தப்பட்டது.
கலீபா முஃதஸிம்பில்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவர் நீதமானவர்; நியாயமானவர் என்று தான் பிதாயா வந்நிஹாயாவின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அறிய முடிகின்றது. எல்லா மன்னர்களையும் போன்று ஆடம்பரம், கேளிக்கைகளில் பிரியமானவர் என்ற குறைபாட்டைத் தவிர வேறு பெரிய குறைபாட்டை நாம் காண முடியவில்லை.
ஆனால் அதே சமயம் தாத்தாரியர்கள் என்ன? அவர்களை விடப் பயங்கரமான எதிரிகளையும் களம் காணுவது தான் உறுதியான ஈமான் கொண்ட ஒரு மன்னரின், அவருக்குக் கீழுள்ள மக்களின் இலக்கணமாகும். அதற்குத் தக்கவாறு தன்னையும் தன் மக்களையும் தயாரிக்காமல் விட்டது, அவர்களை அறப்போருக்கு ஆயத்தமானவர்களாக ஆக்காதது அவரும், அவரது ஆட்சியும் அழிவுக்குள்ளாவதற்குக் காரணமாக அமைந்து விட்டது என்பதை இந்த வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது.
தாத்தாரியர்களின் முதல் ப-யாக ஆட்சித் தலைமகன் வீழ்ந்து முடிந்தது தான் தாமதம்! ஒரு நாற்பது நாட்கள் காட்டு விலங்குகளின் ஆட்சியின் கீழ் பாக்தாத் வந்தது.
வார்த்தையில் வடிக்கமுடியாத வன்முறை வெறியாட்டம்
ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் பாலகர்கள் என்று எந்த வேறுபாடும் பாகுபாடும் காட்டப்படாது சரி சமமாகக் கொல்லப்பட்டனர்.
இதைப் பற்றி இப்னு அஸீர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுவதாவது:
பாக்தாத் கண்ட இந்தப் பேரழிவை எழுதுவதா? வேண்டாமா? என்று என்னுள் நீண்ட மனப் போராட்டமே நடந்தது. காரணம், அது மாபெரும் அளவில் மனதைப் பாதித்த ஒரு நிகழ்வு ஆகும். இப்போது கூட அதை எழுத முன் வருகின்றேன் என்றால் வேறு வழியில்லையே! எழுதித் தீர வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் தான் எழுத முன்வந்து இருக்கின்றேன்.
இதை என் எழுதுகோல் எப்படி எழுதும்? இஸ்லாம் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட இந்த இழிநிலையை எப்படி எழுத்துக்களில் கொண்டு வர முடியும்? முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அந்தச் சோக, துன்பியல் வரலாற்றை எப்படி வார்த்தைகளில் வடிக்க முடியும்? சாவு ஆடிய அந்தச் சதிராட்டத்தைப் பாருங்கள்! கொலை வெறி நடத்திய அந்தக் கோர நடனத்தைப் பாருங்கள்.
கர்ப்பிணிப் பெண்களைக் கண்டால் கல்லும் உருகி விடும்; குழந்தைகளின் முக மலர்களைக் கண்டால் கொடிய பாம்பும் தன் படத்தை, கொட்டாது கீழே படுக்கப் போடும். இங்கே மனித உருவில் பாக்தாதில் உலாவந்த காட்டரக்கர்கள் கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகளில் வாள்களை செருகி தாயின் உதிரத்தைக் குடித்து, உயிரும் உடலும் நன்றாக வளர்ந்து உலகுக்கு வரத் துடிக்கின்ற, கபடமறியாத அந்தச் சின்னஞ்சிறு சிசுக்களையும் கொசுக்களைப் போல் நசுக்கி வீதியில் எறிகின்றார்கள்.
கர்ப்பிணிப் பெண்களையும் கண்டந்துண்டமாக வெட்டி, வீசி எறிகின்றார்கள், இன்னா-ல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவ்வாறு இப்னு அஸீர் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இனி இப்னு கஸீர் அவர்களின் பிதாயா வந்நிஹாயாவில் இந்தக் கருப்பு அத்தியாயம் குறித்து எழுதப் பட்டிருப்பதைப் பார்ப்போம்.
உட-ல் ஓடுகின்ற உயிரைக் காப்பதற்காகத் தப்பி ஓடுகின்ற மனிதர்கள் பாழுங்கிணறுகள், பதுங்குக் குழிகளில் பதுங்கி ஒளிகின்றனர். பூட்டிய வீடுகளில் புகுந்து கொண்டவர்களின் பூட்டுகள் – கதவுகள் கடப்பாறைகளால் கம்பிகளால் உடைக்கப்படுகின்றன. இதற்குப் படிந்து கொடாத கதவுகள் நெருப்பால் கொளுத்தப்பட்டு உள்ளே ஒளிந்து கிடக்கும் ஆடவர் பெண்டிர் அனைவரும் வாய் பிழந்து நிற்கும் மரணப் பிராணியின் வாய்களில் தள்ளப்பட்டனர்.
மரணத்திற்குப் பயந்து மாடிக்கு ஓடியவர்கள் மாடியிலேயே கொல்லப் பட்டனர். இதன் விளைவாக இலக்கியமாக அல்ல! இயற்கையாகவே பாக்தாதின் வீதிகளில் இரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின.
அல்லாஹ்வின் ஆலயங்களான பள்ளிவாசல்களிலும் விதிவிலக்கு பெறாமல் ரத்த ஆறுகள் கரை புரண்டு ஓடின.
உயிருக்குப் பாதுகாப்புப் பெற்றவர்கள் யார் யார் தெரியுமா? அதுவரை முஸ்லிம்களிடம் அடைக்கலம் பெற்று, வரி செலுத்தி, அண்டி வாழ்ந்து வந்த யூத, கிறித்தவர்கள் மற்றும் அமைச்சர் முஹம்மது பின் அல்கமா வீட்டில் அடைக்கலம் புகுந்தவர்கள் மட்டுமே!
பாலைவனப் புய-ல் பலியான மனித உயிர்கள்
பாக்தாதில் வீசிய இந்தப் பாலைவனப் புய-ல் ப-யான மனித உயிர்கள், அழிந்து போன மனிதப் பயிர்களின் புள்ளி விவரக் கணக்கு துல்-யமாகக் கிடைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக மதிப்பீடு பல லட்சங்களைத் தாண்டத் தவறவில்லை. பாக்தாத் மனித வய-ல் வீசிய அந்த கோரப்புய-ன் கால அளவு நாற்பது நாட்கள் ஆகும்.
கலீபாவும், அவரது குடும்பத்தாரும், அதிகாரிகளும் குறி வைத்துத் தாக்கப் பட்டனர். கலீபாவின் மகன்களான 25 வயது நிரம்பிய அஹமது மற்றும் 23 வயது நிரம்பிய அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலீபாவிற்குப் பிறந்த பாவத்திற்காகக் கொல்லப்பட்டனர். அவரது சின்னஞ்சிறு மகன் முபாரக் மற்றும் பாத்திமா, கதீஜா, மரியம் ஆகிய மூன்று சகோதரிகளும் கைது செய்யப்பட்டனர். அரண்மனையில் மட்டும் கைது செய்யப்பட்ட கன்னிப் பெண்கள் ஆயிரத்தைத் தொடும் என்று சொல்லப்படுகிறது. அல்லாஹ் அறிந்தவன்.
ஷேக் முஹய்யித்தீன் யூசுப் பின் அபுல் பரஜ் பின் இப்னுல் ஜவ்ஸி இந்த ஆட்சியின் ஆஸ்தான பேராசிரியர் ஆவார். அதே சமயம் அமைச்சருடைய எதிரிகளில் முதல் ஆள் ஆவார். அதனால் அவரும் அவருக்குப் பிறந்த பாவத்திற்காக அவருடைய மூன்று மகன்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான், அப்துல் காம் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
அரண்மனையைச் சுற்றியுள்ள வீடுகளி-ருந்து கூட்டம் கூட்டமாக குழந்தைகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாகக் கூட்டி வரப்பட்டு பொது அடக்கத்தலத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். பின்னர் குர்பானி ஆடுகள் போன்று ஒருவர் பின் ஒருவராக வெட்டப்பட்டனர். அந்தப் பொது அடக்கத்தலம் அவர்களின் கொலைப்பீடமாக அமைந்தது.
ஹுலாகு கான் ஏற்கனவே கோரிய இரு கருவூல காப்பாளர்களும் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அமைச்சரின் கோபக்கனலுக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தொழுகையின்றி தூங்கிய பள்ளிவாசல்கள்
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள், ஹாபிழ்கள், பிரச்சாரகர்கள் அத்தனை பேரும் கருவறுக்கப்பட்டனர். இதனால் பள்ளிவாசல்கள் ஜும்ஆக்கள் இன்றி சும்மாவே கிடந்தன. ஐவேளை தொழுகைகள் இன்றி, அதானின்றி ஆழ்ந்த தூக்கத்தில் அடங்கிப் போயின!
பேரழிவுக்குப் பாதை வகுத்த ஷியாக்கள்
மாபெரும் இந்தச் சதி வலைகளைப் பின்னிய சதிகாரன் யார்? அமைச்சர் முஹம்மது பின் அல்கமா தான். ஷியாக்களைச் சேர்ந்த இவன் திட்டமிட்டே ஒவ்வொரு காரியத்தையும் நடத்தி வந்தான்; ஒவ்வொரு காயையும் நகர்த்தி வந்தான்.
ஆம்! கலீபாவின் ஆரம்ப ஆட்சிக் கட்டத்தில் ராணுவத்தில் ஒரு லட்சம் படை வீரர்கள் இருந்தனர். இந்தப் பாதகன் தான் படையின் எண்ணிக்கையைப் படிப்படியாகப் பத்தாயிரத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அந்தப் பத்தாயிரம் பேரைக் கூட கடைத் தெருக்களில், பள்ளி வாசல்களின் படிக்கட்டிலேயே கொலுவீற்றிருக்கும் பொம்மைகளாக ஆக்கினான்.
இவனுடைய ஐந்தாம் படை வேலையினாலும், நயவஞ்சக சூழ்ச்சியினாலும் தான் பாக்தாத் இந்தப் பேரழிவைச் சந்தித்தது. இவன் செய்த இந்தச் சதியால் தான் பாக்தாத் நகரம் முழுவதும் பிணக் குவியல்கள்! ரத்தச் சகதிகள்!
இப்பொழுது இங்கு ஒரு மழை பொழிகிறது. அவ்வளவு தான்! ஏற்கனவே பெருக்கெடுத்து ஓடிய ரத்த ஓடைகளை அது ஈரப்படுத்தியது. இதனால் நாற்ற வாடை கிளம்பியது; சுற்றுப்புறச் சூழல் சுத்தமாக மாசுபட்டது; தொற்று நோய் ஆட்சி செய்தது. காற்றில் கலந்த கிருமிகள் காற்றோடு காற்றாய் உல்லாசமாய் சிரியா வரை பயணம் செய்து பரவின.
கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருந்த ஒரு தொகையினர் வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை என்று புற்றீசல்கள் போல் படையெடுத்துக் கிளம்பிய தொற்று நோய்களில் தொலைந்து போயினர்.
இந்த கொடுங்கோன்மையாளர்கள் ஒரு முடிவு எடுத்து, "இனிமேல் யாரையும் கொலை செய்ய மாட்டோம்; போதிய பாதுகாப்பை பொது மக்களுக்குத் தருகின்றோம்” என்று அறிவித்தனர். புதிய அரசின் பூபாள ராகம் பாக்தாதின் வீதிகளில் ஒ-த்தது!
இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் கழிவறைகளில் மறைந்தவர்கள், கல்லறைகளில் ஒளிந்தவர்கள், பதுங்குக் குழிகளில் பதுங்கியவர்கள் வெளியே கிளம்பி வந்தனர். வெளி வந்த அவர்கள் தங்களுக்கு மத்தியில் மகனை தந்தை அறிய முடியவில்லை; தந்தையை மகன் அடையாளம் காண முடியவில்லை.
ஆனால் விஷமாகிப் போயிருந்த காற்றின் நச்சுக் கிருமிகள் அவர்களின் சுவாசப் பைக்குள் நுழைந்து சுறுசுறுப்பாக சுழன்று காரியமாற்றியதால் அவர்களும் சீக்கிரமாக மரணச் சுரங்கத்தில் புகுந்து விட்டார்கள். இன்னா-ல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பாக்தாதில் பேரழிவை நடத்தி விட்டு அலீ பஹாதிர் என்பவரை பாக்தாதின் பொம்மை அரசாங்கத்தின் மன்னராக ஆக்கி விட்டு, பாக்தாதை விட்டு ஜமாதுல் அவ்வல் மாதம் கடைசியில் ஹுலாகு கான் கிளம்புகின்றான்
சுமார் 650 ஆண்டுகள் முஸ்லிம்களின் கைவசமிருந்த இராக், ஈவு இரக்கமற்ற மங்கோலியர்களின் கையில் செல்கின்றது.
தாத்தாரியர் படையெடுப்பும் அமெரிக்கப் படையெடுப்பும்
ஓர் ஓப்பீடு
பதிமூன்றாம் நூற்றாண்டில் பாக்தாத் கண்ட பேரழிவிற்கும், இப்போது இருபத்தோறாம் நூற்றாண்டில் நாம் காண்கின்ற பாக்தாதின் பேரழிவிற்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
அன்று பாக்தாதில் பகல் கொள்ளை அடிக்க வந்தவர்கள் தாத்தாரியர்கள். இன்று பகல் கொள்ளை அடிக்க வந்தவர்கள் வெள்ளை வெறியர்களான புஷ் மற்றும் டோனி பிளேர்கள்.
அன்று பாக்தாதைத் தாக்க வந்த தாத்தாரியர்களின் படை எண்ணிக்கை இரண்டு இலட்சம். இன்று புஷ்ஷும் பிளேரும் முதல் கட்டமாக அனுப்பிய படைகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் தான்!
அன்று தாத்தாரியர்கள் கொலை செய்வதில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எவ்விதப் பாகுபாடும் பாரபட்சமும் காட்டவில்லை. அது போன்று இன்று இந்த வெள்ளை வெறியர்களும் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை.
அன்று பாக்தாத் கண்டது அன்றைய காலத்து அதிநவீன ஆயுதங்கள்! இன்றைய கால பாக்தாத் கண்டதும் அதிநவீன ஆயுதங்கள் தான். அல்லாமா இப்னு கஸீர் குறிப்பிடுவது போல் அல்லாஹ்வைத் தவிர இன்றைய இராக்கை வேறு யாரும் காப்பாற்ற முடியாது. என்றாகி விட்டது!.
அன்று தாத்தாரியர்கள் பாக்தாத் மீது போர் தொடுத்தது முஹர்ரம் மாதத்தில் தான். புஷ் – டோனி பிளேர் படையும் முஹர்ரம் மாதத்தில் தான் இராக்கின் மீது போர் தொடுத்தது.
அன்று தாத்தாரியர்கள் கலீபா முஃதஸிம்பில்லாஹ்வைக் கொன்றனர். இன்று இவர்கள் சதாம் ஹுசைனைக் கொன்றிருக்கின்றனர்.
அன்று கலீபாவின் மகன்கள் அஹ்மது, அப்துர்ரஹ்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர். இன்று சதாமின் மகன்கள் உதய், குஸய் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அன்று தாத்தாரியர்கள் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்கள். இன்றும் இந்த அமெரிக்க தாத்தாரியர்கள் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தைத் தாண்டி விட்டது.
அன்று தாத்தாரியர்களிடம் பாக்தாத் வீழ்வதற்கு ஷியாக்கள் தான் காரணமாயிருந்தனர். அது போல் இன்று அமெரிக்காவிடம் இராக் அடிமைப்படுவதற்கும் ஷியாக்கள் தான் காரணமாக உள்ளனர்.
இவை அன்றைய பாக்தாதின் பேரழிவிற்கும் இன்றைய பாக்தாதின் பேரழிவிற்கும் மத்தியில் உள்ள ஒப்பீடுகள் ஆகும்.
இஸ்லாத்தை அழிக்க வந்த ஷியாக்கள்
இதில் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள ஒன்பதாவது ஒப்பீடு தான் இங்கு மிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். பாக்தாதின் முந்தைய பேரழிவும் ஷியாக்களால் தான் ஏற்பட்டது. இப்போதைய பேரழிவும் ஷியாக்களால் தான் ஏற்பட்டுள்ளது. இந்த ஷியாக்கள் அமெரிக்க, பிரிட்டானியர்களை விடக் கொடுமையானவர்கள்.
அமெரிக்க, பிரிட்டானிய சக்திகள் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கவில்லை. ஆனால் ஷியாக்கள் இஸ்லாத்தின் உள்ளே புகுந்து கொண்டு இஸ்லாத்தை அழிக்கின்றனர்.
இவர்கள் இஸ்லாத்தின் பகிரங்க விரோதிகள் என்று அடையாளம் காட்டவே இராக் பற்றிய இந்த வரலாற்று ஆவணத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
ஷியா என்பது இஸ்லாத்தை அழிக்க வந்த ஒரு தனி மதம் என்பதைக் கூறவே இந்த வரலாற்றுப் பதிவு உங்கள் பார்வைக்குத் தரப்படுகின்றது.
இதற்குப் பின்னும் ஷியாக்களையும், அவர்களது புரட்சியையும் புகழ்கின்ற இலக்கியச் சோலைகளையும், அஸ்தமன வெள்ளிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று இதன் மூலம் ஏகத்துவம் கேட்டுக் கொள்கின்றது.
இஸ்லாம் வெல்லும் – இந்து நாளேட்டின் கணிப்பு
2003 மார்ச் 20ம் தேதி இராக்கில் அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிக்க நுழைந்த அன்று ஹிந்து நாளேடு எழுதிய தலையங்கத்தை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.
சதாம் ஹுஸைனின் ஆட்சியை மேற்கத்தியப் படைகள் வெகு விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம். ஆனால் சதாம் ஹுசேனின் சாம்ராஜ்ஜியச் சரிவும் இராக் கண்ட அழிவும் உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிச்சயமாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம் மேற்கத்தியப் படைகளால் இராக் மீது தொடுக்கப்பட்ட இந்தப் போரை முஸ்லிம்கள் தங்கள் (இஸ்லாமிய) பண்பாடு மற்றும் நாகரிகத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகின்றனர்.
பதிமூன்றாம் நுôற்றாண்டில் (இஸ்லாமிய நாகரிகத்தை அழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு) மங்கோலியர்கள் பாக்தாதின் மீது படையெடுத்து அதைப் பேரழிவுக்கு உள்ளாக்கினார்கள்.
இஸ்லாமிய நாட்டை வென்ற அந்த இதயமற்ற நாடோடி மங்கோலிய, தாத்தாரியத் தறுதலைகளின் இதயங்களை இஸ்லாம் எனும் இயற்கையான இனிய சிந்தனை இறுதியில் வென்றது என்பது சாகாத சரித்திர சகாப்தம் ஆகும்.
இது ஹிந்து நாளேடு 20.03.2003 அன்று ஏழ்ண்ம் பண்ம்ங்ள் ஆட்ங்ஹக் "காத்து நிற்கும் கடின காலங்கள்” என்ற தலைப்பில் தன் தலையங்கத்தில் வார்த்த முத்துக்களாகும்.
"இறுதி வெற்றி இஸ்லாத்திற்குத் தான்” என்ற கண்ணோட்டத்தில் ஹிந்து நாளேடு பாக்தாத் வரலாற்றின் மீது பாய்ச்சிய வெளிச்சப் பார்வையாகும்.
ஆம்! தாத்தாரியர்களின் அழிச்சாட்டியத்திற்குப் பின் அப்படித் தான் ஓர் அற்புதம் நடந்தேறியது. தாத்தாரியர்களைச் சோந்த செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரர் காஸான் என்பவர் அமீர் தோஜுன் என்பவரது முன்னிலையில் இஸ்லாத்தில் இணைகின்றார். அவர் இஸ்லாத்தில் இணைந்த போது மக்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண் முத்துக்கள் போன்றவற்றைத் தான தர்மமாக அள்ளி வழங்கினார்.
அவர் இஸ்லாத்தில் இணைந்ததால் தாத்தாரியர்கள் பெரும்பாலோர் இஸ்லாத்தில் இணைந்தனர். இஸ்லாத்திற்கு எதிரான சின்னங்கள் அழிக்கப்பட்டு மீண்டும் இஸ்லாம் பாக்தாதில் ஆட்சி செலுத்தியது.
இந்தக் குறிப்பை பிதாயா வன் நிஹாயா என்ற வரலாற்று நூ-ல் நாம் காண்கின்றோம்.
எனவே, ஈராக் மக்களுக்காக இது வரையில் பிரார்த்தனை புரிந்த நாம் விரக்தியடைய வேண்டியதில்லை என்பதற்கு, பதிமூன்றாம் நூற்றாண்டில் பாக்தாத் கண்ட பேரழிவு, அதன்பின் அது கண்ட பேரெழுச்சி சிறந்த சான்றாக அமைகின்றது.