ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறு மை

ஏகத்துவம் செப்டம்பர் 2006

ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறுமை

எம். ஷம்சுல்லுஹா

பொறுமை என்பதற்கு அரபியில் "ஸப்ர்’ என்பதாகும். "ஸப்ர்’ என்பதற்கு தடுத்தல், சிறைவைத்தல் என்ற பொருள்கள் வழங்கப்படுகின்றன.

ஒருவர் சமூகத்தில் ஒரு கொள்கையைமுன்வைக்கின்றார். ஆனால் அந்தச் சமூகமோஅதை ஏற்றுக் கொள்ளாமல் அனைத்து விதமான சோதனைகளையும் அவருக்குக்கொடுக்கத் துவங்குகின்றது.

அவரை அடித்து சித்ரவதை செய்தல்,ஊர் நீக்கம் செய்தல், சிறை பிடித்தல் அல்லதுகொலை செய்ய முயற்சித்தல் போன்ற கொடுமைகளை அவருக்கு எதிராக அந்தச்சமூகம் செய்கின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில் அக்கொள்கையில் நீடித்து இருப்போமா? அல்லது விட்டுவிடுவோமா? என்று அவரது மனம் அலை பாயும்.

இந்நேரத்தில் அவர் நிலை குலையாமல், தனது மனதை வேறு கொள்கையின்பக்கம்தாவி விடாது தடுத்து வைத்துக் கொள்கின்றார். தன்னுடையமனதை அந்தச் சிறந்தகொள்கையிலேயே சிறை வைத்துக் கொள்கின்றார்.இது ஒரு கண்ணோட்டம்.

ஒருவருக்கு மது, மாது, சூது என எல்லாவிதமான சுகபோக சொகுசு வாழ்வைஅனுபவிக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவற்றை நோக்கித் தன் மனதை சிறகடித்துப் பறக்கவிடாது, சிறை பிடித்து வைத்துக் கொள்கின்றார். இது இரண்டாவது கண்ணோட்டம்.

ஒருவர் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து சுப்ஹு முதல் அனைத்துதொழுகைகளையும் அந்தந்த வேளைகளில் தொழுகின்றார். கை நிறைய சம்பாதித்த காசுபணத்தில் தங்க, வெள்ளி நகைகளில், விவசாய விளைச்சலில் அல்லாஹ் கூறுகின்ற படிஜகாத் வழங்குகின்றார். நோன்பு நோற்கின்றார். இதுபோன்ற வணக்க வழிபாடுகளில்அவர் தனது மனதை சிறை பிடித்து வைத்திருக்கின்றார். இது மூன்றாவதுகண்ணோட்டம்.

மேற்கண்ட அம்சங்களில் தனது மனதைக் கட்டுப்படுத்தி வைத்து இருப்பதற்குப் பெயர்தான் பொறுமை என்று வழங்கப்படுகின்றது.

இந்தப் பொறுமைக்கு முன்மாதிரியாக வாழ்ந்த உதாரண புருஷர்களை அல்குர்ஆன் மிகத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. தங்களது ஏகத்துவப் பிரச்சாரத்தின் மூலம்மக்களை நரகத்தை விட்டும் காப்பாற்றி சுவனபுரிக்கு அழைத்துச் செல்லும் சுத்தமானபணியைச் செய்த இறைத் தூதர்களைத் தான் அல்குர்ஆன் பொறுமையாளர்களுக்குஉதாரணமாகக் காட்டுகின்றது.

இறைச் செய்தியை எடுத்துச் சொல்லும் கட்டளை இறைத் தூதர்களுக்குவரும் போது,அத்துடன் பொறுமையை மேற்கொள்ளவேண்டிய கட்டளையும் சேர்ந்தே வந்துவிடுகின்றது.

ஏகத்துவப் பாதையில் ஏற்க வேண்டிய பொறுமை

இறைத்தூதை எடுத்தியம்ப ஆரம்பித்த உடன் எங்கு பார்த்தாலும் பொங்கி எழும்எதிர்ப்புகள் கிளம்பி விடுகின்றன. இதைக் கண்டு தாங்கள்எடுத்து வைத்தகொள்கையிலிருந்துஇம்மியளவு கூட அவர்கள் பின்வாங்கி விடக் கூடாது. அல்லதுஎதிர்க்கும் இம்மக்கள் கூட்டத்தை இந்த நொடிப் பொழுதிலேயே அழித்து விடு என்றுஇறைவனிடம் பிரார்த்தனை செய்து விடக் கூடாது. அப்படியே பிரார்த்தனை செய்தாலும்அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை அந்த விஷயத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரைபொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

(அல்குர்ஆன் 10:109)

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப்பெருமைப் படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! அசுத்தத்தைவெறுப்பீராக! (மனிதரிடம்) அதிகம் எதிர்பார்த்து உதவாதீர்! உமது இறைவனுக்காகப்பொறுத்துக் கொள்வீராக!

(அல்குர்ஆன் 74:1-7)

ஆகிய வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதின் ஆரம்ப கால கட்டத்தில்இறங்கிய வசனங்கள். இந்தவசனங்களில் பொறுமையையே வலியுறுத்துகின்றான்.

எதையும் தாங்கும் இதயம்

உறுதி மிக்க தூதர்கள் பொறுத்ததுபோல் நீரும் பொறுப்பீராக! அவர்கள் விஷயத்தில்அவசரப்படாதீர்! அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் பகலில்சிறிது நேரமே தவிர (உலகில்) வசிக்கவில்லை என்பது போல் (நினைப்பார்கள். இது)எடுத்துச் சொல்லப்படவேண்டியது. குற்றம் புரிந்த கூட்டம் தவிர (மற்றவர்கள்)அழிக்கப்படுவார்களா?

(அல்குர்ஆன் 46:35)

இதற்கு முன் வாழ்ந்த இறைத்தூதர்கள் அதிலும் உறுதி மிக்க எதையும் தாங்கும்இதயத்தைப் பெற்ற இறைத்தூதர்களைப் போல் மொத்தத்தில் பொறுமையைக்கடைப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வசனத்தில் அல்லாஹ்கட்டளையிடுகின்றான்.

விமர்சனங்களைத் தாங்கும் பொறுமை

அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! அவர்களை அழகிய முறையில் முற்றிலும்வெறுத்து விடுவீராக!

(அல்குர்ஆன் 73:10)

சரணடையாத கொள்கையும் சகிப்புத் தன்மையும்

(முஹம்மதே!) நாமே உமக்கு இக் குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். எனவேஉமது இறைவனின் கட்டளைக்காகக் காத்திருப்பீராக! அவர்களில் பாவம்செய்பவருக்கோ, (ஏக இறைவனை) மறுப்பவருக்கோ கட்டுப்படாதீர்!

(அல்குர்ஆன் 76:23,24)

ஒருபோதும் சத்தியக் கொள்கையின் எதிரிகளுக்குச் சரணடைந்து விடாதீர் என்று நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துரைக்கின்றான்.

அல்லாஹ் இப்படிப் பொதுவாக அறிவுரை செய்ததுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தஏகத்துவப் பாதையில் இன்னல்களுக்கு இலக்கான சில இறத்தூதர்களின் வாழ்க்கைவரலாற்றையும் எடுத்துச் சொல்லிக் காட்டுகின்றான்.

நபி நூஹ் (அலை) அவர்கள் மக்களிடத்தில் பட்ட சொல்லெனாத் துயர்களை விவரித்துக்கூறுகின்றான்.

நூஹ் என்ற 72வது அத்தியாயத்தில்அவர்கள் செய்த பிரச்சாரத்தையும் அந்த மக்கள்அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்ததையும் 1 முதல் 24 வரையுள்ளவசனங்களில் விளக்கிக் கூறுகின்றான்.

இதன் பின் மனம் பொறுக்க முடியாமல் இறைவனிடத்தில் நூஹ் (அலை)கையேந்துகின்றார்கள். அவர்கள் மனம் கொந்தளித்து, குமுறிக் கொட்டிய வார்த்தைகள்இதோ:

"என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டுவைக்காதே!” என்று நூஹ் கூறினார்.

நீ அவர்களை விட்டு வைத்தால் உனது அடியார்களை அவர்கள் வழி கெடுப்பார்கள். (உன்னை) மறுக்கும் பாவியைத் தவிர அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 71:26,27)

ஏதோ மக்களிடத்தில் கொஞ்ச நாட்கள் பிரச்சாரம் செய்து அந்தக் கருத்துக்களை அவர்கள்ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும் நம்மிடம் விரக்தியும் வெறுப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. இதற்கு நூஹ் (அலை) அவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்குப் பிந்திவந்த இறைத்தூதர்களுக்கு மட்டுமல்லாது நமக்கும் பாடமும் படிப்பினையும்அடங்கியிருக்கின்றது.

நூஹ் (அலை) அவர்களின் பிரச்சாரம் ஏதோ ஓர் 25 அல்லது 50 ஆண்டுகள் பிரச்சாரம்என்று நினைத்து விடக் கூடாது. அவர்கள் இந்த உலகில் வாழ்ந்த காலத்தைப் பற்றிஅல்லாஹ் கூறும் போது,

"நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்குஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார்.” (அல்குர்ஆன் 29:14)

என்று குறிப்பிடுகின்றான். இதன்மூலம் அவர்கள் காத்திருந்த பொறுமையின் காலஅளவை அதன் கனத்த பரிமாணத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

இத்தனை காலம் காத்திருந்த பின்னர் தான் மேற்கண்ட பிரார்த்தனையை இறைவன்முன் வைக்கின்றார்கள்.அதை அல்லாஹ் ஏற்று அவரது சமூகத்தினரை வெள்ளத்தில்மூழ்கடித்து அழிக்கின்றான்.

அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு நரகில் நுழைக்கப்பட்டார்கள்.அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காணமாட்டார்கள்.

(அல்குர்ஆன் 71:25)

எனவே நூஹ் நபியின் இந்தப் பொறுமை சாதாரண ஒன்றல்ல! மாபெரும்மனவலிமையைப் பெற்று மக்களிடம் ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்தார்கள்.

இதனால் தான் இத்தகைய நெஞ்சுறுதிமிக்க இறைத்தூதர்களைப் போல் பொறுமையாகஇருங்கள் என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகின்றான்.

உறுதி மிக்க தூதர்கள் பொறுத்ததுபோல் நீரும் பொறுப்பீராக! அவர்கள் விஷயத்தில்அவசரப்படாதீர்! அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் பகலில்சிறிது நேரமே தவிர (உலகில்) வசிக்கவில்லை என்பது போல் (நினைப்பார்கள். இது)எடுத்துச் சொல்லப்படவேண்டியது. குற்றம் புரிந்த கூட்டம் தவிர (மற்றவர்)அழிக்கப்படுவார்களா?

(அல்குர்ஆன் 46:35)

இங்கு இன்னொரு வேதனையான விஷயத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். நபி (ஸல்)அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில், "பார்த்தீர்களா? நூஹ் நபியவர்கள் 950ஆண்டுகள் பிரச்சாரம் செய்து ஆற்றாத அரும்பணியை நபி (ஸல்) அவர்கள் 23ஆண்டுகளில் ஆற்றி முடித்து விட்டார்கள்” என்று நூஹ் நபியின் பொறுமையைக்கொச்சைப் படுத்தும் விதமாக ஆலிம்கள் மீலாது மேடைகளில் முழங்குவதை நாம் காணமுடிகின்றது.

மக்கள் நேர்வழி பெறுவது இறைத்தூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் என்பதுபோல் இவர்களுடையமுழக்கங்கள் அமைந்திருக்கின்றன.

இறைத்தூதர்களின் பணி இறைத்தூதை மக்களிடம் எடுத்துச் சொல்வது தான் என்றயதார்த்தமான உண்மை நிலையை இவர்கள் மறக்கவில்லை, மறுத்துக் கொண்டும்மறைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

"அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்;செவியுற்றோம்;கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே(எங்கள்) திரும்புதல் உண்டு” எனக் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 2:285)

இறைத்தூதர்களிடையே பாரபட்சம் காட்டுவது அல்குர்ஆனின் இந்தக் கட்டளைக்குஎதிரான செயல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று நபிமார்களை இழிவுபடுத்தும் காரியங்களை விட்டும் அல்லாஹ் நம்மைக்காப்பானாக!