களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும்

ஏகத்துவம் ஜூலை 2006

களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும்

அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தைஏற்றுக் கொள்வதற்கு முன்னால் குறைஷியரின்வணிகக் குழுவில் ஒருவராக சிரியாவுக்குச் சென்றிருந்தார்.

அப்போது ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானிடம் முஹம்மத் (ஸல்)அவர்களின் தூதுச் செய்தி பற்றி ஆய்வு ரீதியிலான சில கேள்விக் கணைகளைத்தொடுக்கின்றார்.

இஸ்லாத்திற்கு வந்த பின் அபூசுஃப்யான் அவர்களே இதைத் தெரிவிக்கின்றார்கள்.

"அவரை (முஹம்மதை) பின்பற்றுவோர்மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லதுசாமானி யர்களா?” என்று ஹெர்குலிஸ் கேட்டார். அதற்குநான், "மக்களில்சாமானியர்கள் தான்” என்று பதிலளித்தேன்.

"அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?” என்றுவினவினார். "அவர்கள் அதிகரிக்கின்றனர்” என்று சொன்னேன்.

"அவரது மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறிஇருக்கின்றனரா?” என்று கேட்டார். நான் இல்லை என்றேன்…..

(இன்னும் இது போன்ற சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு அபூசுஃப்யான் அளித்தபதிலைக் கேட்டு விட்டு மன்னர் ஹெர்குலிஸ் கூறியதாவது)

"மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றார்களா? அல்லதுசாமானியர்களா? என்றுகேட்டேன். சாமானிய மக்கள் தான்அவரைப் பின்பற்றுகின்றனர்என்றுகுறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தான் இறைத் தூதர்களைப் பின்பற்றுவோராய்இருந்துள்ளனர்.

அவரைப் பின்பற்றுகின்றவர்கள் அதிகரிக்கின்றார்களா? அல்லது குறைகின்றார்களா?என்று கேட்டேன். அவர்கள் அதிகரிக் கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை,நிறைவு பெறும் வரை அப்படித் தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும்.

அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீதுஅதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கிறார்களா? என்று கேட்டேன். இல்லை என்றுகுறிப்பிட்டீர். அப்படித் தான். இதயத்தில் நுழைந்து விட்ட இறை நம்பிக்கையின்எழில்(உறுதியானது)…..” என்று மன்னர் ஹெர்குலிஸ் குறிப்பிட்டார்.

(நூல்: புகாரி 7)

ஹெர்குலிஸ் மன்னரின் இந்த வார்த்தைகள் வேத வரிகள் கிடையாது. எனினும் சத்தியக்கருத்தை ஏற்றுக்கொள்வதற்குரிய அடிப்படை விதிகளை, அளவுகோலை அவர்தெரிவிக்கின்றார்.

அவர் கூறும் இந்த உரைகல் குர்ஆனின் கூற்றை அப்படியே பிரதிபலிக்கின்றது.சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள் சாமானியர்கள் தான் என்பதைத் திருக்குர்ஆன்தெளிவாகத் தெரிவிக்கின்றது.

"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக்குறைவுடைய தாழ்ந்தவர்களேஉம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்குஎங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப்பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை)மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 11:27)

ஹெர்குலிஸின் அடுத்த ஆய்வு, இந்தக் கருத்தைப் பின்பற்றுபவர்கள்அதிகரிக்கிறார்களா? குறைகிறார்களா? என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் காலம் முதல்இன்று வரை இந்தக் கருத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதை வல்லஅல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும்அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல்விட மாட்டான்.

(அல்குர்ஆன் 9:32)

அடுத்த ஆய்வு, இந்தக் கருத்தை ஏற்றவர்கள் மதம் மாறுகின்றார்களா? என்பதாகும்.

ஈமான் ஒருவரின் இதயத்தில் இடம் பிடித்து விட்டால் இரும்புச் சீப்பு கொண்டுஅவருடைய எலும்புக்கும், சதைக்கும் இடையில் செருகப் பட்டாலும் அவர் தனதுமார்க்கத்தைவிட்டு வெளியேறுவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறுகின்றார்கள்.

(பார்க்க புகாரி 3612)

நபி (ஸல்) அவர்களின் இந்தச் செய்தியைத் தான் ஹெர்குலிஸ் தனது கருத்தில்பிரதிபலிக்கின்றார்.

தமிழகத்தில் தவ்ஹீத்

1980க்குப் பின்னால் தமிழகத்தில் தவ்ஹீதின் கால்கோள் நாட்டப்பட்டது. அன்றிலிருந்துஇன்று வரை இந்த ஏகத்துவத்தில் இணைபவர்கள்சாமானியர்கள் தான். செல்வாக்குமிக்கவர்கள் அல்லர். பாட்டாளி வர்க்கத்தினர் தான். பணக்கார வர்க்கத்தினர் அல்லர்.இன்று வரை இந்த நிலை தான் நீடிக்கின்றது. ஒருசில விதி விலக்குகள் இருக்கலாம்.

வளர்ச்சிப் பாதையில்…

ஏகத்துவப் பிரச்சாரம் காலூன்றத்துவங்கியதிலிருந்து இன்று வரை எழுச்சியுடன்வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்தச் சத்தியக் கருத்தில் மக்கள் கூட்டம்கூட்டமாக இணைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்தச் சத்தியக் கொள்கை நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி அடைகின்றது என்பதைமாற்றுக் கூடாரத்தில்உள்ளவர்கள் கூட மறுக்க மாட்டார்கள்.

தடம் மாறுதல் இல்லை

ஏகத்துவ வேடம் போட்ட நடிகர்களைத் தவிர்த்து, வேறு யாரும் இந்தக் கொள்கையைவிட்டு வெளியேறவில்லை. ஆனால் அதே சமயம் சுன்னத் வல்ஜமாஅத் என்றகூடாரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக, ஆனால் நிதானமாக வெளியேறிஏகத்துவத்தில்அடி எடுத்து வைக்கிறார்கள். அடியெடுத்து வைத்தவர்கள்அசைவதில்லை. அழுத்தமாகவே இருக்கின்றார்கள். நிரந்தரமாக நீடித்து நிற்கின்றார்கள்.

எண்பத்து ஆறும் இரண்டாயிரத்து ஆறும்

1986ல் கோட்டாற்றில் நடந்த முனாளரா எனும் விவாதத்தைத் தொடர்ந்து சமாதிவழிபாட்டுக்கும், மத்ஹபு மாயைக்கும் முழுக்குப் போட்டு விட்டு ஒரு பெருங் கூட்டமேசத்தியத்தில் வந்திணைந்தனர். இப்போது 2006ல் களியக்காவிளையில் நடந்து முடிந்தவிவாதத்திற்குப் பிறகும் இன்று கூட்டம் கூட்டமாக மக்கள் சத்தியத்தின் பக்கம் வந்துசேர்கின்றனர்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. களியக்காவிளையில் நடந்து முடிந்தவிவாதத்திற்குப் பிறகு குமரிமாவட்டத்தில் கடையாலு மூடு, ஈத்தா மொழி, நம்பாளிபோன்ற ஊர்களில், தவ்ஹீத் ஜமாஅத்தின் இலைகள் கூட இல்லாத இடங்களில் இன்றுகிளைகள் துவங்கச் சொல்கின்றார்கள். அதாவது இவர்கள் மெச்சிக் கொண்டிருக்கும்சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் இது அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போன்று உள்ளது.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாகஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து)உறுதியாகவும், அதன்கிளை ஆகாயத்திலும் உள்ளது.

(அல்குர்ஆன் 14:24)

ஆம்! குராபிகளின் கொள்கை, பூமியின் அடித்தளத்தில் வேர் பிடிக்காத காரணத்தால்கடையாலு மூடு, ஈத்தாமொழி, நம்பாளி போன்ற மரங்கள் மடமடவென சாய்ந்துகொண்டு இருக்கின்றன. அடித்தளத்தில், ஆணித் தரமான வேர் பிடிப்புடன் உள்ள சத்தியமரத்தின் கிளைகளைப் பிடிக்க அவ்வூர் மக்கள் வருகின்றனர். ஏகத்துவத்தின் இனியகொள்கைக் கனிகளைச் சுவைக்க வருகின்றனர்.

இப்போது இது மக்களிடம் தெளிவாகப் பறை சாற்றுகின்றது; பகிரங்கமாகமுழங்குகின்றது. விவாதத்தில் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள் என்று!

விவாதத்தின் ஒளிப்பதிவு ஒரு வார்த்தை கூட எடிட் செய்யாமல் குறுந்தகடுகளாகவெளியிடப் பட்டுள்ளது. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இந்தப் பதிவுகளைப் பார்ப்பவர்கள்யாரும் அறிந்து கொள்ள முடியும், எது சத்தியக்கருத்து என்று!

இப்படித் தெளிவான ஆதாரங்கள் இருக்கையில் மோசடி, மோசடி என்றும் வெற்றிவெற்றி என்றும் கோமாளிகள்செய்யும் பிரச்சாரம் ஒரு போதும் எடுபடப் போவதில்லை;எள் முனை அளவும் எடை பெறப் போவதில்லை.

இந்த விவாதத்திற்குப் பின் தவ்ஹீதை விட்டு வெளியே வந்த ஒருவரைக் கூடஇவர்களால் காட்ட முடியாது. சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ள இவர்களதுகப்ரு வழிபாட்டு மார்க்கத்திலிருந்து ஏகத்துவம் என்ற சத்திய மார்க்கத்திற்கு மக்கள் அணிஅணியாக வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று நம்மால் காட்ட முடியும்.

இங்கு தான் ஹெர்குலிஸ் மன்னரின்கருத்து நிஜமாகின்றது; நிரூபணமாகின்றது.