மத்ஹபுகளைப் எதிர்த்த மத்ஹபு இமாம்கள்!

மத்ஹபுகளைப் எதிர்த்த மத்ஹபு இமாம்கள்!

த்ஹபுகளைத்தான் பின்பற்ற வேண்டும்; அப்போதுதான் நாம் சொர்க்கம் செல்ல முடியும். மத்ஹபு இமாம்களது கூற்று  திருக்குர்ஆன் மற்றும் நபி வழிக்கு எதிரானதாக இருந்தாலும் அதைப் பின்பற்றுவது மார்க்கக் கடமை என்று சொல்லி மத்ஹபு வெறி பிடித்து அலையக்கூடிய நிலையை தற்போது காண்கின்றோம். ஆனால் மத்ஹபு இமாம்கள் என்ன சொல்லியுள்ளார்கள் தெரியுமா?

நபிகள் நாயகத்தின் சொல்லுக்கு மாற்றமாக நாங்கள் சொல்லியிருந்தால் நபிகளாரின் சொல்லைத்தான் பின்பற்ற வேண்டும்; எங்களது சொல்லைப் பின்பற்றக்கூடாது என்றுதான் மத்ஹபு இமாம்கள் சொல்லியுள்ளார்கள்.

صَحَّ عَنْ الْإِمَامِ أَنَّهُ قَالَ : إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي  (رد المحتار – (1 / 166)

இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கூறினார்கள் : ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.

நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 1 பக்கம் : 166[/perfectpullquote]

وذكر في الخزانة عن الروضة الزندويسية سئل أبو حنيفة إذا قلت قولا وكتاب الله يخالفه قال اتركوا قولي لكتاب الله فقيل إذا كان خبر الرسول صلى الله عليه وسلم يخالفه قال اتركوا قولي لخبر رسول الله صلى الله عليه وسلم (إيقاظ الهمم – (1 / 62)

நீங்கள் கூறிய கருத்து அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என இமாம் அபூ ஹனீஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் : அல்லாஹ்வின் வேதத்திற்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதருடைய கருத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய செய்திக்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள்.

நூல் : ஈகாளுல் ஹிமம்  பாகம் : 1 பக்கம் 62

وذكر في المثانة عن الروضة الزندويسية عن كل من أبي حنيفة ومحمد أنه قال إذا قلت قولا يخالف كتاب الله وخبر الرسول صلى الله عليه وسلم فاتركوا قولي (إيقاظ الهمم – (1 / 62)

இமாம் முஹம்மத், இமாம் அபூ ஹனீஃபா கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் வேதத்திற்கோ, இறைத்தூதரின் செய்திக்கோ மாற்றமாக ஏதேனும் ஒரு கருத்தை நான் கூறியிருந்தால் என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள்.

நூல் : ஈகாளுல் ஹிமம் பாகம் : 1 பக்கம் : 62

فإن أبا حنيفة وأبا يوسف رحمه الله قالا لا يحل لأحد أن يأخذ بقولنا مالم يعلم من أين أخذناه  (إيقاظ الهمم – (1 / 53)

இமாம் அபூ ஹனீஃபா, இமாம் அபூ யூசுப் ஆகியோர் கூறுகிறார்கள் : நாங்கள் எங்கிருந்து எடுத்தோம் என்பதை அறியாமல் எங்கள் கருத்தை எடுப்பது யாருக்கும் அனுமதியில்லை.

நூல் :ஈகாளுல் ஹிமம் பாகம் : 1 பக்கம் : 53

இமாம் மாலிக் கூறியவை:

وقال الإمام مالك – رحمه الله -: (إنما أنا بشر أخطيء وأصيب فانظروا في رأيي، فكل ما وافق الكتاب والسنة فخذوه ، وكل ما لم يوافق الكتاب والسنة فاتركوه ) ( مواهب الجليل في شرح مختصر الشيخ خليل – (7 / 392)

இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நான் மனிதன்தான். தவறாகவும் கூறுவேன், சரியாகவும் கூறுவேன். என்னுடைய கருத்தை ஆய்வுசெய்து பாருங்கள். குர்ஆன், சுன்னாவிற்கு ஒத்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.  குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான அனைத்தையும் விட்டு விடுங்கள்.

மவாஹிபுல் ஜலீல் பாகம் : 7 பக்கம் : 392

قال الإمام مالك والإمام أحمد: ليس أحد بعد النبي صلى الله عليه وسلم إلا ويؤخذ من قوله ويترك إلا النبي صلى الله عليه وسلم  (الحجج السلفية في الرد على آراء ابن فرحان المالكي البدعية – (1 / 41)

இமாம் மாலிக், இமாம் அஹ்மத் கூறினார்கள் : யாருடைய கருத்தாக இருந்தாலும் அதில் எடுக்க வேண்டியவையும் உள்ளன. விட்டுத்தள்ள வேண்டியவையும் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களத் தவிர.

அல் ஹுஜஜ் ஸலஃபிய்யா பாகம் : 1 பக்கம் 41

سمعت أحمد بن حنبل يقول رأي الأوزاعي ورأي مالك ورأي أبي حنيفة كله رأي وهو عندي سواء وإنما الحجة في الآثار  (جامع بيان العلم وفضله) – (2 / 149)

இமாம் அஹ்மது கூறினார்கள் : அவ்ஸாயீயின் கருத்து, மாலிக்கின் கருத்து, அபூ ஹனீஃபாவின் கருத்து எல்லாமே அவர்களின் சொந்தக் கருத்துதான். என்னிடத்தில் அனைத்தும் சமம்தான். நிச்சயமாக ஆதாரம் என்பது ஹதீஸ்களில்தான் இருக்கிறது.

ஜாமிவு பயானில் இல்ம் பாகம் : 2 பக்கம் : 149

أحمد بن حنبل رحمة الله يقول : ' من رد  حديث رسول الله  فهو على شفا هلكة '(الحجة في بيان المحجة – (1 / 207)

இமாம் அஹ்மத் கூறினார்கள் : யார் நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸை மறுத்து விட்டானோ அவன் அழிவின் விழிம்பின் மீதிருக்கின்றான்.

அல்ஹுஜ்ஜா பாகம் : 1 பக்கம் :207

"لا تقلدني ولا تقلد مالكا ولا الثوري ولا الأوزاعي وخذ من حيث أخذوا"  (إعلام الموقعين عن رب العالمين – (2 / 226)

என்னைக் கண்மூடிப் பின்பற்றாதே. மாலிக்கையும் கண்மூடிப் பின்பற்றாதே. ஸவ்ரியையும் பின்பற்றாதே. அவ்ஸாயியையும் பின்பற்றாதே. அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீயும் எடு.

இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக்கம் : 226

இமாம் ஷாஃபியின் கூற்று!

وقد قال الشافعي إذا صح الحديث فهو مذهبي  (المجموع – (1 / 92)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.

அல்மஜ்மூ  பாகம் :1 பக்கம் : 92

 الشافعي يقول مثل الذي يطلب العلم بلا حجة كمثل حاطب ليل يحمل حزمة حطب وفيه أفعى   تلدغه وهو  لا يدري ( المدخل إلى السنن الكبرى ج: 1 ص: 211

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப்பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டிவிடும்.

மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 211

    عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قلنا هذا مأخوذ مأخوذ حتى قدم علينا الشافعي فقال ما هذا إذا صح الحديث عن رسول الله صلى الله عليه وسلم فهو مأخوذ به لا يترك لقول غيره قال فنبهنا لشيء لم نعرفه يعني نبهنا لهذا   ((مختصر المؤمل ج: 1 ص: 59)

ஷாஃபி இமாம் அவர்கள் எங்களிடம் வருகை தருகின்ற வரை நாங்கள் நபியவர்கள் சொன்னதாக எங்களுக்கு கூறப்படுமென்றால் ''இது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது'' ''இது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது'' என்று கூறுவோம். ஷாஃபி அவர்கள் '' என்ன இது? நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது தானே. எவருடைய சொல்லிற்காகவும் அது விடப்படக் கூடாது'' என்று கூறினார்கள். நாங்கள் அறியாத ஒன்றை எங்களுக்கு உணர்த்தினார்கள்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 59

وفي رواية روى حديثا فقال له قائل أتأخذ به فقال له أتراني مشركا أو ترى في وسطي زنارا أو تراني خارجا من كنيسة نعم آخذ به آخذ به آخذ به وذلك الفرض على كل مسلم  (مختصر المؤمل ج: 1 ص: 58)

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் '' நீ என்னை இணைவைப்பாளன் என்று நினைக்கிறாயா? அல்லது என்னுடைய இடுப்பில் (நெருப்பு வணங்கிகளுக்குரிய) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா? அல்லது தேவாலாயத்திலிருந்து வெளியேறிய (கிறிஸ்தவன்) என்று நினைக்கிறாயா? ஆம். நான் அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள்.

முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58

قال وسمعت الشافعي يقول وروى حديثا قال له رجل تأخذ بهذا يا أبا عبد الله فقال ومتى رويت عن رسول الله  صلى الله عليه وسلم حديثا صحيحا فلم آخذ به فأشهدكم أن عقلي قد ذهب وأشار بيده إلى رأسه (مختصر المؤمل ج: 1 ص: 57)

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் ''எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்கவில்லையோ (அப்போது)  என்னுடைய அறிவு மழுங்கிவிட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்'' என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57

 إذا وجدتم عن رسول الله صلى الله عليه وسلم سنة خلاف قولي فخذوا السنة ودعوا قولي فإني أقول بها (مختصر المؤمل ج: 1 ص: 57)

''என்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நீங்கள் நபியவர்கள் வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்டால் நபியவர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொல்லை விட்டு விடுங்கள். நிச்சயமாக நான் நபியுடைய வழிகாட்டுதலைக் கொண்டு கூறுபவன்தான்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57

كل مسألة تكلمت فيها بخلاف السنة فأنا راجع عنها في حياتي وبعد مماتي (مختصر المؤمل ج: 1 ص: 57)

என்னுடைய வாழ்விலும், என்னுடைய மரணத்திற்கு பின்பும் எந்த மார்க்கச் சட்டங்களிலெல்லாம் நான் நபிவழிக்கு மாற்றமாகப் பேசியுள்ளேனோ அத்தகைய  மார்க்கச் சட்டத்தை விட்டும் நான் விலகிக் கொண்டேன்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57

قال الشافعي كل ما قلت وكان قول رسول الله صلى الله عليه وسلم خلاف قولي مما يصح فحديث النبي صلى الله عليه وسلم أولى فلا تقلدوني (مختصر المؤمل ج: 1 ص: 58)\

நான் கூறிய ஒவ்வொன்றும் நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக இருக்குமென்றால் நபியவர்களுடைய ஹதீஸ்தான் ஏற்றமானதாகும். என்னைக் கண்மூடிப் பின்பற்றாதீர்கள்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58

عن أبي ثور قال سمعت الشافعي يقول كل حديث عن النبي صلى الله عليه وسلم فهو قولي وإن لم تسمعوه مني  (مختصر المؤمل ج: 1 ص: 58)

நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸ‎ம்தான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து கேட்கவில்லையென்றாலும் சரியே.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58

 وقال الشافعي من تبع سنة رسول الله صلى الله عليه وسلم وافقته ومن غلط فتركها خالفته صاحبي اللازم الذي لا أفارقه الثابت عن رسول الله صلى الله عليه وسلم  (مختصر المؤمل ج: 1 ص: 58)

யார் நபிவழியைப் பின்பற்றுகிறாரோ நான் அவரோடு ஒன்றுபடுகிறேன். எவன் தடுமாறி அதனை விட்டுகிறானோ அவனோடு நான் மாறுபடுகிறேன். நான் விட்டுப் பிரியாத என்னுடைய உறுதியான தோழன் நபியவர்களிடமிருந்து வருகின்ற உறுதியான நபிமொழிகள்தான்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58

وسمعت الشافعي يقول ما من أحد إلا وتذهب عليه سنة لرسول الله ( صلى الله عليه وسلم ) وتعزب عنه فمهما  قلت من قول أو أصلت من أصل فيه عن رسول الله ( صلى الله عليه وسلم ) خلاف ما قلت فالقول ما قال رسول الله ( صلى الله عليه وسلم ) وهو قولي قال وجعل يردد هذا الكلام ( تاريخ دمشق – (51 / 389)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : நபியவர்கள் வழிமுறை கிடைக்கும் போது அதைவிட்டும் தூரமாகுபவர் யாரும் இல்லை. நான் நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக ஏதாவது ஒரு கருத்தைக் கூறினால் அல்லது ஏதாவது ஒரு அடிப்படையை அமைத்தால் நபியவர்கள் கூறியதுதான் சட்டமாகும். அதுதான் என்னுடைய கருத்துமாகும். இதனை அவர்கள் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள்.

தாரீக் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389

سمعت الشافعي يقول كل حديث عن النبي ( صلى الله عليه وسلم ) فهو قولي وإن لم تسمعوه مني (تاريخ دمشق – (51 / 389)

நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும் அதுதான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து செவியேற்காவிட்டாலும் சரியே.

தாரீக் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389

قال البويطي سمعت الشافعي يقول لقد ألفت هذه الكتب ولم آل جهدا ولا بد أن يوجد فيها الخطأ لأن الله تعالى يقول وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا فما وجدتم في كتبي هذه مما يخالف الكتاب والسنة فقد رجعت عنه (مختصر المؤمل ج: 1 ص: 60)

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள் '' நான் இந்தப் புத்தகங்களைத் தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் இருக்கும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் '' என்று தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான். என்னுடைய இந்தப் புத்தகங்களிலே திருமறைக்குஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் விலகிவிட்டேன்.

முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 60

وقال الشافعي: أجمع الناس على أن من استبانت له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يكن له أن يدعها لقول أحد من الناس  (إعلام الموقعين عن رب العالمين – (2 / 325)

யாருக்கு நபியவர்களின் சுன்னத் தெளிவாகிறதோ அவர் மக்களில் யாருடைய சொல்லிற்காகவும் அதனை விடுவது அவருக்கு தகுதியானதில்லை என்ற கருத்தில் மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.

இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக்கம் : 325

قال لنا الشافعي أنتم أعلم بالحديث والرجال مني فإذا كان الحديث الصحيح فأعلموني إن شاء يكون كوفيا أو بصريا أو شاميا حتى أذهب إليه إذا كان صحيحا (المدخل إلى السنن الكبرى – (1 / 172)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் என்னை விட நீங்கள்தான் அறிந்தவர்கள். ஒரு ஸஹீஹான ஹதீஸை கூஃபா வாசி, பஸராவாசி, ஷாம்வாசி யாரிடமிருந்து எனக்கு நீங்கள் அறியச் செய்தாலும் அது ஸஹீஹாக இருக்குமென்றால் நான் அதன் பக்கம் சென்றுவிடுவேன்.

அல்மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 172

سمعت الشافعي يقول: "كل مسألة تكلمت فيها صح الخبر فيها عن النبي صلى الله عليه وسلم عند أهل النقل بخلاف ما قلت فأنا راجع عنها في حياتي وبعد موتي  (إعلام الموقعين عن رب العالمين – (2 / 328)

".என்னுடைய வாழ்நாளிலும் என்னுடைய மரணத்திற்குப் பிறகும் எந்த ஒரு மார்க்கச் சட்ட்த்திலும் நான் கூறியதற்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுநர்களிடம் ஸஹீஹான ஒரு செய்தி நபியவர்களிடமிருந்து வருமென்றால் நான் என்னுடைய கருத்தை விட்டும் விலகக்கூடியவன் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.

இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக்கம் : 328

Leave a Reply