352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

வ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒன்று, வேதம்

இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது

எனக் கூறப்படுகிறது.

வேதத்தை மட்டும் தான் இறைத்தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன் இப்படிக் கூறியிருக்க மாட்டான்.

வேதத்துடன் விளக்கம் தருகின்ற அதிகாரமும் வழங்கப்பட்டுத்தான் நபிமார்கள் அனுப்பப்படுகிறார்கள் என்பதையும், அவர்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதையும் இவ்வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 3639, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply