382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

பிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (48:29) கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரிடமும் கடுமையாக நடக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கியவர்களைக் குறித்தே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வசனங்களை வாசிக்கும்போது இதைப் புரிந்து கொள்ளலாம்.


இது பற்றி மேலும் விபரம் அறிய 89, 201, 204வது குறிப்புகளையும் காண்க!

Leave a Reply