447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது.

97:1 வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (96:1) என்ற வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இதன் பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக திருக்குர்ஆன் அருளப்பட்டது.

மேலும் விளக்கத்துக்கு 341வது குறிப்பையும் பார்க்க!

Leave a Reply