ஏகத்துவம் டிசம்பர் 2006 ஹஜ் செய்முறை விளக்கம் இனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்தெந்த காரியங்களில்வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம். இஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்றுபெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவைமுழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும். 1. முகத்தை மூடக் கூடாது. 2. கைகளுக்கு உறை அணியக் கூடாது. 3. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா – பயணதவாஃப் இல்லை. இங்கே ஓர் ஒப்பீட்டுடன் கூடிய இந்த வேறுபாட்டைக் கூறுவதற்குக் காரணம், ஆண்கள்செய்யக்கூடிய காரியங்களை விட்டுப் பெண்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைவிளக்குவதற்காகத் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற காரியங்கள் அனைத்தும் ஆண்கள்செய்வதைப் போன்றே செய்ய வேண்டும் என்பதை முதலில் பதிவு செய்கிறோம்.இப்போது ஹஜ்ஜின் முதல் காரியமான இஹ்ராமுக்கு வருவோம். இஹ்ராம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்குமுன் குளிப்பது நபிவழியாகும். நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர்(ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின்அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள். "நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்(அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். "நீ குளித்து விட்டு, இரத்தத்தைஉறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137 "இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்டவகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில்அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர். ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்கஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்துவிட்டேன்) என்று கூற வேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச்சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ்,உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2194, 2195 ஹஜ்ஜின் சட்டங்களில் தடை செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதைமுழுமையாக விளங்கிக் கொண்டால் அதுவே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குப்போதுமானதாகி விடும். எனவே ஹஜ்ஜின் போது, இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டகாரியங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். 1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது. …
ஹஜ் செய்முறை விளக்கம் Read More